விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, December 6, 2009

விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க



விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்

( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது

பற்றிய பதிவு.


விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்

டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல்

தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore)

செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர்

வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம்

பிரச்சினைகளை சரிசெய்யலாம்.


சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது

என்பதை பற்றி பார்ப்போம்.

-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ

Click செய்யவும்.



இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும்


Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும்.

இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை

உங்கள் DVD Drive-ல் செலுத்தவும்

[caption id="attachment_33" align="aligncenter" width="459" caption="Create a system repair disc"][/caption]


Create disc பட்டனை Click செய்யவும்.



இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk )

உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி

பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும்

போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button

அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல்

First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும்.

இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள்

DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit

செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில்


press any key to start the computer from the system repair disc

என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி

அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம்

முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க்

(System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும்.

Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை


5 comments:

  1. very useful information thanks.

    ReplyDelete
  2. Dear Sir/Madam,

    I try this. but its showing some Parameter Error.. Here I attach that snapshot. please find and suggest me to make repair disc http://www.4shared.com/photo/b5aPdoxB/Capture.html Thanks a lot

    ReplyDelete
  3. @ Satiq
    நண்பருக்கு ,
    தங்கள் விண்டோஸ் 7-ல் ரெஸிஸ்டரி பிரச்சினை இருந்தாலும் , ஒரிஜினல்
    வெர்சன் இல்லாத சில விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்திலும் இது
    போன்ற பிரச்சினை வரலாம்.
    கீழ்கண்ட முகவரிக்கு சென்று நீங்கள் ரெக்கவரி டிஸ்க் தரவிரக்கிக்கொள்ளலாம்.
    http://neosmart.net/blog/2009/windows-7-system-repair-discs/
    நன்றி.

    ReplyDelete
  4. got it ... Thanks a lot...

    ReplyDelete
  5. @ Satiq
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad