இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, January 17, 2010

இயற்கையான டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் டெல் புதிய அதிசியம்.

கணினி வடிவமைப்பாளர்களுக்கான போட்டியில் இயற்கை
தாவரங்களின் கழிவுகளில் இருந்து புதிய டெஸ்க்டாப்
கம்ப்யூட்டரை உருவாக்கிய சாதனையைப் பற்றி தான்
இந்த பதிவு.டெல் நிறுவனம் நடத்திய போட்டியில் மெக்ஸிக்கொ
நாட்டின் பவுலினா கேரோல்ஸ் என்பவர் தாவரங்களின் கழிவுகளை
கொண்டு இயற்கையான முறையில் ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டரை
வடிவமைத்துள்ளார்.படம் 1 ல் காட்டப்பட்டுள்ளது.

[caption id="attachment_613" align="aligncenter" width="386" caption="படம் 1"][/caption]

இதன் பயன்பாட்டை பற்றி பார்ப்போம். இதில் இரண்டு
புரோஷக்டர் உள்ளது. திரைக்காக ஒன்றும் கீபோர்ட்
வசதிக்காக மற்றொன்றும் உள்ளது. எங்கு வேண்டுமானாலும்
பயன்படுத்தலாம் டெஸ்க்டாப் என்றால் எங்கும் எடுத்து
செல்ல முடியாது ஆனால் இதை எங்கு வேண்டுமானாலும்
எடுத்து செல்லலாம்.பயன்படுத்துவதற்கு குறைவான அளவு
மின்சக்தியே தேவைப்படுகிறது. அதேபோல் டிவிடி
பயன்படுத்தவும் புதிய அமைப்பை வடிவமைத்துள்ளனர்.
படம் 2 ல் காட்டப்பட்டுள்ளது.பார்ப்பதற்கு எளிமையாகவும்
புதுமையாகவும் உள்ளது.

[caption id="attachment_614" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

கீபோர்ட் நிழலில் எந்த கீயை நாம அழுத்துகிறோம் என்பதை
இமேஸ் சென்ஸார் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கின்றனர்.
அதோடு அந்த கீயின் இன்புட்டையும் ஒளியாக அனுப்புகின்றனர்.
இதன் மிகப்பெரிய பலம் அதிக அளவு சூடாவது குறைக்கப்பட்டு
உள்ளது. அதேபோல் பயன்படுத்திய இதன் பாகங்களை மீண்டும்
சுழற்ச்சி முறையில் பயன்படுத்தலாம்.
இன்று ஜனவரி 18 
பெயர் : என்.டி.ராமராவ் ,
மறைந்த தேதி : ஜனவரி 18, 1996
பிர‌ப‌ல‌ தெலுங்கு திரைப்பட நடிகர், இயக்குனர்
மற்றும் அரசியல்வாதி.ஆந்திரப் பிரதேசத்தின்
முதலமைச்சராக‌ மூன்று த‌ட‌வை பொறுப்பு
வ‌கித்தவர்.தெலுங்கு திரைப்படத்துறையில்
ஆற்றிய பணிகளுக்காக அவ‌ர் 1968 இல் பத்மஸ்ரீ விருதை
பெற்றார். சிறந்த இறைபக்தி உள்ளவர்.

4 comments:

  1. really very nice technology. go green.

    ReplyDelete
  2. good technology...
    need of the hour to save our earth

    ReplyDelete
  3. அருமையான தஹவல்

    ReplyDelete
  4. Sadaam-SriLanka
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad