அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, January 19, 2010

அசுஸ் நிறுவனத்தின் வேவ்பேஸ் அல்ட்ரா புதிய தொழில்நுட்பம்.

அசுஸ் நிறுவனமும் புதிதாக நாமும் ஏதாவது ஒரு தொழில்நுட்பத்தை
களம் இறக்கினால் தான் நம்மால் மார்க்கெட்டிங்கில் இருக்க முடியும்
என்பதை நன்கு உணர்ந்து புதிதாக அசுஸ் வேவ்பேஸ் அல்ட்ரா என்பதை
உருவாக்கியுள்ளனர். கையில் நாம் கட்டும் பிரேஸ்லட் போன்று இதன்
வடிவம் இருக்கிறது.



பொர்ட்டபிள் எங்கு வேண்டுமானாலும் நம் கையில் மாட்டி எடுத்துச்
செல்லலாம். இந்த வேவ்பேஸ் அல்ட்ராவின் பயன் என்ன வென்று
பார்த்தால் இதில் நாம் முக்கியமாக செய்ய வேண்டிய வேலைகளை
குறித்து வைத்துக் கொள்ளலாம். இதனுடன் OLED டிஸ்பிளே -யும்
உள்ளது. இதில் நாம் தேவையான நிகழ்வை பார்த்துக்கொள்ளலாம்.
நேரம் பார்ப்பதிலிருந்து ப்ளுடுத் வரை அனைத்தும் உள்ளது.
அதுமட்டுமில்லாமல் இதில் நம் உடலின் வெப்பநிலையை அறிந்து
கொள்ளவும் இரத்த அழுத்தத்தை கண்டறியவும் உடனுக்குடன்
தெரியப்படுத்தும் வடிவிலும் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி
தொலைவில் இருந்தும் கூட நாம் இதற்கு கட்டளை கொடுக்கலாம்.
இப்படி பல தொழில்நுட்ப மாற்றங்களுடன் அசுஸின் வேவ்பேஸ்
அல்ட்ரா விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது.
இன்று ஜனவரி 20 
பெயர் : பெரியசாமி தூரன்,
மறைந்த தேதி : ஜனவரி 20, 1987
தமிழ் புலவர், ஆசிரியர் மற்றும் கர்நாடக
இசை வல்லுனர்.தமிழ் வளர்ச்சிக் கழகத்தின்
சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின்
ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968
வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய 10 தொகுதிகளை
வெளியிட்டார்.பாரதி பாடல்களைப் பரப்பவும்,நம் தேசியப்
போராட்டத்திற்கு வலு சேர்க்கவும் பித்தன் என்ற மாத இதழை
நடத்தவும் காரணமாக இருந்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad