ஹக்கர் இதிலிருந்து நம் பேஸ்புக் கணக்கை எப்படி பாதுக்காப்பது
என்பது தான் இன்றைய பதிவு. டிவிட்டர் , யூடியுப் அடுத்ததாக
ஹக்கரின் பார்வை இப்போது பேஸ்புக்-ல் விழுந்துள்ளது.பேஸ்புக்
எப்போதுமே செக்யூரிட்டிக்கு கொஞ்சம் அதிகமாகவே முக்கியத்துவம்
கொடுத்து இருந்தும் இந்த வைரஸ் வந்துள்ளது. எப்படி இந்த வைரஸ்
பரவுகிறது என்று பார்ப்போம். நாம் பயன்படுத்தி கொண்டிருக்கும் நம்
பேஸ்புக் அக்கவுண்டுக்கு ஒரு புதிய உறுப்பினர் சேர்ந்துள்ளார் நீங்கள்
அவரை நண்பர் என உறுதுபடுத்துங்கள் என்று அறிவிக்கும் அப்போது
கூடவே அவர் அவர் அனுப்பிய செய்தி ஒன்றும் உங்களுக்கு கிடைக்கும்
அந்த செய்தி இது தான் “My Ex-Girlfriend Cheated on me…
Here is my revenge!” உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியது
இந்த மாதிரி நபர்களிடம் இருந்து வரும் அழைப்புகளை
நிராகரித்துவிடவும்.
நமக்கு கொஞ்சம் குழப்பம் வருகிறதெல்லவா எப்படி இதிலிருந்து நம்
அக்கவுண்டை ஹக் செய்ய முடியும் என்று சற்று விரிவாக
பார்ப்போம்.உங்கள் நண்பராக இணைந்த பின் இவர்கள் கொடுக்கும்
ஒரு CSS நிரல் மூலம் தான் நம் கணக்கின் பாஸ்வேர்டிலிருந்து
அனைத்தையும் இவர்கள் நொடியில் எடுத்து விடுகின்றனர்.ஆனால்
புத்திசாலித்தனமாக ஒன்று செய்கின்றனர் நம் பேஸ்புக் கணக்கை
இவர்கள் திருடினாலும் அதை முடக்கவில்லை அதனால் நம்
கணக்கு ஹக் செய்யப்பட்டதா இல்லையா என்று கூட நமக்குத்
தெரியாது. அவர்கள் CSS நிரலை வைத்து பேஸ்புக்-ஐ கூட ஹக்
செய்யலாம் என்றால் நம் அக்கவுண்டை திருடுவது ஒன்றும் பெரிய
காரியம் இல்லை.ஒருவரின் பேஸ்புக் அக்கவுண்ட் மூலம் அவர்களின்
இமெயிலையும் ஹக் செய்து விடுகின்றனர் அதனால் முகம்
தெரியாத நபர் உங்களுக்கு அனுப்பும் பிரண்ட்ஸ் ரெக்யுஸ்டில்
எப்போதுமே ஒருமுறைக்கு இருமுறை சோதனை செய்தபின்
ஏற்றுக்கொள்ளுங்கள். ஷாட் லிங்(Short url)முகவரி ஏதாவது
வந்தால் கூடுமானவரை அதை கிளிக் செய்வதை தவிர்க்கப்பாருங்கள்.
இப்போது தான் CSS-ன் மகத்துவம் புரோகிராமருக்கு புரிந்திருக்கும்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
இமெயில் முகவரி சரியானதா என்று அறிய உதவும் நிரல்
function is_valid_email($email)
{
if(preg_match("/[a-zA-Z0-9_-.+]+@[a-zA-Z0-9-]
+.[a-zA-Z]+/", $email) > 0)
return true;
else
return false;
}
இன்று ஜனவரி 30
பெயர் : மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,
மறைந்ததேதி : ஜனவரி 30, 1948
மகாத்மா காந்தி என்று இந்திய மக்களால்
அன்போடு அழைக்கப்படுகிறார்.இந்திய விடுதலைப்
போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று
நடத்தியவர்.சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட
இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி
வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக அமைந்தது.இந்தியாவின் தேசத்தந்தையை
மரியாதையுடன் வணங்குகிறோம்.
நல்ல தகவல்.எச்சரிக்கைக்கு நன்றி
ReplyDeleteநல்ல தகவல்களை தாங்கள் பதிந்து வருவது மிகுந்த மகைழ்ச்சியைத் தருகின்றது. வாழ்த்துக்கள்!
ReplyDeleteஜிஆர்ஜி
புதுவை.