MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம். - Winmani

winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, January 28, 2010

MP3 பாடலை ஆன்லைன்-ல் வெட்டி ரிங்டோன் உருவாக்கலாம்.

MP3 பாடல்களை ஆன்லைன்-ல் எந்த சாப்ட்வேர் துணையும்
இல்லாமல் வெட்டி நாம் விரும்பியபடி ரிங்டோன் உருவாக்கலாம்
என்பதை பற்றி தான் இந்த  பதிவு.  http://mp3cut.net
இந்த இணையதளத்திற்கு சென்று முதலில் நாம் எடிட் செய்ய
வேண்டிய பாடலை நம் கம்ப்யூட்டரிலிருந்து தரவேற்றம் (UPLOAD)
செய்ய முதல் ஸ்டெப் படம் 1-ல் காட்டியபடி “ Upload mp3 "
என்ற பட்டனை அழுத்தி பாடலை அப்லோட் செய்ய வேண்டும்.

[caption id="attachment_730" align="aligncenter" width="304" caption="படம் 1"]12[/caption]

[caption id="attachment_731" align="aligncenter" width="450" caption="படம் 2"]21[/caption]

இப்போது நாம் அப்லோட் செய்த பாடல் படம் 2-ல் காட்டியபடி
வந்து விடும் இப்போது ஸ்டெப் 2 நமக்கு தேவையான பகுதியை
ஸ்லைடர் கண்ட்ரோல் பட்டன் இடது பக்கத்தில் உள்ளதில் இருந்து
தொடங்கி வலது பக்கம் உள்ள ஸ்லைடர் கன்ட்ரோல் மூலம் எங்கு
முடிய வேண்டும் என்பதையும் படம் 3-ல் காட்டியபடி தேர்வு
செய்துகொள்ளவும்.

[caption id="attachment_732" align="aligncenter" width="455" caption="படம் 3"]31[/caption]

[caption id="attachment_733" align="aligncenter" width="297" caption="படம் 4"]4[/caption]

எந்த பகுதி வேண்டுமோ அதை தேர்வு செய்த பின் பிளே செய்தும் சரி
பார்த்துக்கொள்ளலாம். சரியான் பகுதியை தேர்ந்தெடுத்து முடித்த பின்
ஸ்டெப் 3 படம் 4-ல் காட்டியபடி ஸ்பிளிட் அண்ட் டவுன்லோட்
( Split and Download) என்ற பட்டனை அழுத்தி நம் கம்ப்யூட்டரில்
தரவிரக்கிக்கொள்ளவும். இந்த முறையை பின்பற்றி எந்த ஒரு சாப்ட்வேர்
துணையும் இல்லாமல் நாமாக எளிதாக ஒரு ரிங்டோன் அல்லது
பாடலின் சில பகுதியை மட்டும் எடிட் செய்து கொள்ளலாம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
சிஎஸ்எஸ்-ல் இமெஜ் பிரிலோட் செய்வதற்கான எளிய நிரல்
#preloadedImages {
width: 0px;
height: 0px;
display: inline;
background-image: url(path/to/image1.png);
background-image: url(path/to/image2.png);
background-image: url();
}

இன்று ஜனவரி 29 pspoonusamy
பெயர் : பி.எஸ்.பி.பொன்னுசாமி,
மறைந்ததேதி : ஜனவரி 29, 1998
இந்திய விடுதலைப்போராட்டத்தின் பொழுது
அண்ணல் காந்தியடிகளின் சீரிய தலைமையை
ஏற்று,பல்வேறு இன்னல்களை அனுபவித்து,
பல பங்களிப்புகள் தந்து,வெளி உலகுக்குப்
பரவலாகத் தெரியாமல் மறைந்த விடுதலைப் போராட்டத்
தியாகிகளில் ஒருவர் தான் இந்த பி.எஸ்.பி.பொன்னுசாமி.
நன்றி...என்றும் உங்களை நினைவில் வைத்திருப்போம்.
உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

5 comments:

  1. blank

    உபயோகமான தகவல்.
    நன்றி.

    ReplyDelete
  2. blank
  3. blank

    உபயோகமான தகவல்.
    நன்றி.

    ReplyDelete
  4. blank

    thanks winmani i like this winmani so much

    ReplyDelete
  5. blank

    நன்றி.நன்றி.நன்றி.நன்றி.நன்றி.நன்றி.

    ReplyDelete

Post Top Ad