இசையை குயில் மட்டுமல்ல நாங்களும் தருவோம் வாயினால்
அல்ல கீபோர்ட்-ஆல் என்று வரிந்து கட்டிக்கொண்டு வந்திருக்கிறது
பூனை ஒன்று இதைப்பற்றி தான் இந்த பதிவு.
கீபோர்ட் வாசிக்கும் சேர்லி ஸ்கமிட் என்ற ஒரு கலைஞரின்
வீட்டில் பிறந்த இந்த பூனை அதிக நேரங்களில் இந்த கீபோர்ட்-ல்
வாசிக்கும் இசையை கேட்டு மெய்மறந்து நிற்குமாம். ஒருநாள்
இந்த பூனை கீபோர்ட்-ல் மேல் முன் இரண்டு கால்களையும்
வைத்து ஏதோ செய்து கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு
இசைக்கலைஞர் வர நாம் இந்த பூனைக்கு கீபோர்ட்-ல் இசையை
வெளிப்படுத்துவதை சொல்லிக்கொடுக்கலாம் என்று முடிவெடுத்து
சொல்லிக்கொடுக்க ஆரம்பித்திருக்கிறார் பூனையும் ஆர்வத்துடன்
படித்திருக்கிறது சில மாதங்களிலே பூனை கீபோர்ட் வாசிப்பதில்
நல்ல அனுபவம் பெற்றுவிட்டது.கீபோர்ட்-ல் இசையை வாசிக்கும்
போது சாதாரனமாக ஒரு மனிதன் என்னவெல்லாம் பாவனை
செய்வாரோ அதை எல்லாம் இந்த பூனை செய்கிறது. கண்களை
மூடிக்கொண்டு இசையை ரசித்துக்கொண்டே கீபோர்ட் வாசிக்கிறது.
இந்த பூனை கீபோர்ட் வாசிக்கும் சிறப்பு வீடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP - HTML tags Remove from the string
General Form:
strip_tags($string);
Example:
strip_tags("Win s <br> Mani",3);
Output : Win S Mani
இன்று மார்ச் 13
பெயர் : ஜோசப் பிரீஸ்ட்லி ,
பிறந்த தேதி : மார்ச் 13, 1733
ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர்.
இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில்
ஆக்ஸிஜனைக் (ஒட்சிசன், உயிர்வளி)
கண்டுபித்தவர்.இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும்
மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார்.
கார்பன்-டை-ஆக்சைடு (காபனீரொட்சைட்டு) பற்றிய
இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை.
பூனைக்கு பின்னாடி ஆள் நிண்டு அதிண்ட சட்டைக்குள்ளால தண்ட விரல விட்டு பூனைக்கை க்ளவுசை போட்டுட்டு சாநிக்கிறாய்ங்க...
ReplyDeleteஇது நிஜமா இல்லையா என்பது வேறு இருந்தாலும் கேட்கவும் பார்க்கவும் புதுமையாகத்தான் இருக்கிறது, காணொளிக்கு நன்றிகள்.
ReplyDelete