ஈபே மற்றும் அமேசான் இந்த இரண்டு நிறுவனத்திலும் ஒரு
பொருளின் விலை எந்த நிறுவனத்தில் குறைவு என்று சில
நிமிடங்களில் ஒப்பிட்டு பார்த்து வாங்கலாம். இதைப்பற்றி
தான் இந்த பதிவு.
உதாரணமாக ஒரு டெல் மடிக்கணினியை வாங்க வேண்டு
மென்றால் உடனடியாக நாம் செய்வது ஈபே மற்றும்
அமேசான் என்ற இரண்டு இணையதளங்களுக்கு சென்று
விலையை ஓப்பிட்டுப்பார்த்து எதில் விலை குறைவு பயன்
எதில் அதிகம் என்று ஒரு மிகப்பெரிய ஆராய்ச்சி செய்து
தான் கண்டுபிடிப்போம்.ஆனால் இந்த ஆராய்ச்சி எதும்
செய்யாமல் உடனடியாக நாம் இந்த இணையதளத்திற்கு
சென்று ஈபே மற்றும் அமேசான் விலைகளை சரிபார்க்கலாம்.
இணையதள முகவரி : http://www.q-compare.com
இந்த இணையதளத்திற்கு சென்று எந்த நாடு என்பதை நாம்
தேர்வு செய்தும் எந்த வகையில் பொருட்கள் தேடவேண்டும்
என்பதையும் தேடும் வார்த்தையும் கொடுக்கவேண்டும்
உடனடியாக நமக்கு தேடுதல் முடிவு காட்டப்படும் அதை
தேர்வு செய்தால் நாம் தேடிய பொருளை ஈபே-ல் வாங்கினால்
என்ன விலை என்பதையும் அதே பொருளை அமேசானில்
வாங்கினால் என்ன விலை என்பதையும் தெளிவாக இரண்டாக
பட்டியலிட்டு காட்டுகின்றனர். உதாரணமாக நாம் அவதார்
திரைப்படத்தை கொடுத்து தேடினோம். அமேசானில் தான்
விலை குறைவு படம் 2-ல் காட்டப்பட்டுள்ளது.
உடன் கொடுத்திருக்கும் முகவரியை தேர்வு செய்து நேரடியாக
அமேசானோ அல்லது ஈபேயோ எந்த இணையதளத்தில்
வேண்டுமானாலும் நுழையலாம்.
வின்மணி இன்றைய சிந்தனை
சாதியும் மதமும் பார்க்காமல் , வறுமையும் திறமையையும்
பார்த்து அரசு வேலை கொடுக்கும் என்றால் அதுதான் சிறந்த நாடு.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP Misc Functions
time_sleep_until() Delays code execution until
a specified time
uniqid() Generates a unique ID
unpack() Unpacks data from a binary string
usleep() Delays code execution for a
number of microseconds
இன்று மார்ச் 18
1922 ஆம் ஆண்டு மார்ச் 18-ம் நாள்
ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்ட
நம் தேசத்தந்தை மகாத்மா காந்தி ஆறு
ஆண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
இரண்டு ஆண்டுகளில் விடுதலை ஆனார்.
[ஒத்துழையாமை இயக்கம் என்பது இந்தியாவில்
ஆட்சியிலிருந்த பிரிட்டன் அரசுக்கு எதிராக
ஆரம்பிக்கப்பட்ட நாடளாவிய மக்கள் இயக்கமாகும்]
No comments:
Post a Comment