மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, March 2, 2010

மருத்துவரிடம் இலவச ஆலோசனை பெற முத்தான மூன்று இணையதளங்கள்.

கடவுளுக்கு அடுத்து இரண்டாவது மிக்பெரிய சேவை செய்துவரும்
நல்ல எண்ணம் உள்ள  மருத்துவர்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வு
சொல்ல காத்திருக்கிறார்கள். நம் நண்பர் இமெயில் மூலம்
கேட்டிருந்தார் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கு தீர்வு சொல்ல
ஏதாவது இணையதளம் இலவசமாக உள்ளதா என்று அதற்கான
சிறப்பு பதிவு தான் இது.மருத்துவத்தை வைத்து காசு பார்க்க
அலையும் கூட்டம் மத்தியில் மனிதனுக்கு ஏற்படும் நோய்களுக்கான
தீர்வை நாங்கள் இலவசமாக வழங்குகிறோம் என்று வந்துள்ளது
இந்த மூன்று இணையதளங்களும்.



முதல் இணையதள முகவரி : http://askmedicaldoctor.com
ஆஸ்க் மெடிக்கல்  டாக்டர் இந்த இணையதளத்திற்கு சென்று
உங்களுக்கு ஏற்படும் சிறு தலைவலியிலிருந்து காய்ச்சல்,
இரத்த அழுத்தம், போன்ற அத்தனை பிரச்சினைகளையும்
நீங்கள் கேள்வியாக கேட்கலாம் உடனடியாக அந்தந்தத் துறையில்
உள்ள சிறப்பு மருத்துவர்கள் நமக்கு பதில் அளிக்கின்றனர்.



இரண்டாம் இணையதள முகவரி : http://www.medhelp.org

மெட் கெல்ப் இந்த இணையதளத்திற்கும் உங்கள் உடம்பில்
நோயினால் ஏற்படும் மாற்றங்களை கூறினால் அவர்கள்
உங்களுக்கு எந்த மருந்து ஏற்றதாக இருக்கும் எவ்வளவு
நாள் சாப்பிட வேண்டும் என்ற அத்தனை தகவல்களையும்
கொடுக்கின்றனர் இதில் ஒரு இலவச கணக்கை உருவாக்கி
உங்கள் கேள்விகளை பதியலாம்.



மூன்றாம் இணையதள முகவரி : http://mdadvice.com
மேற்குரிய இரண்டு இணையதளத்தில் என்ன சேவையெல்லம்
கூறினோமோ அந்த சேவையையும் கூடவே நோயில்லாமல்
மனிதன் வாழ என்னென்ன வழிமுறைகளை நாம் கடைபிடிக்க
வேண்டும் ,ஆரோக்கியமான் உணவுவகைகள் என்னென்ன,
எபோதும் உடல் குறைக்க வழிமுறைகள் என்னென்ன என்று
தெளிவாக தெரிவிக்கின்றனர். பல இலட்சம் பேர் இதுவரை
கேட்ட கேள்விகள் அனைத்தையும் நாம் தேடியும் பார்க்கலாம்.
கண்டிப்பாக இந்த மூன்று முத்தான இணையதளங்களும்
உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
JAVA
Method          Description

setBackground() Sets the background color of the
                component

setForeground() Sets the foreground color of the
component

SetSize()      Re sizes the component

இன்று மார்ச் 2 
பெயர் : குன்னக்குடி வைத்தியநாதன் ,
பிறந்த தேதி : மார்ச் 2, 1935
இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த ஒரு
வயலின் கலைஞர், இசையமைப்பாளர்.
குன்னக்குடியில்  பிறந்த இவர் இந்திய அரசின்
பத்மஸ்ரீ விருது பெற்றவராவார்.கர்நாடகஇசையை
வயலினில் வாசித்தோரில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.

7 comments:

  1. nalla pathivu sms gal kurithum vendatha palveru karuthtthugalaiyum blog yeluthugirome yentra pervaliyaga yeluthi pirar nerathai veenadikkamal pirarukku ubayogamana seyalgalai seyya thoondukolaga amainthulleergal manamaarntha vaalthugal

    nantri

    anbudan
    a.j.rajaseker
    hello fm
    nellai

    ReplyDelete
  2. நல்லதொரு பயனான செய்திகளை கொடுத்ததற்கு
    மிகவும் நன்றி அய்யா.

    ReplyDelete
  3. நல்லதொரு செய்தி

    ReplyDelete
  4. நல்ல தகவல் சார்.
    தொடருங்கள்
    அன்புடன்
    ஜிஆர்ஜி
    புதுவை.

    ReplyDelete
  5. நல்லதொரு பயனான செய்திகளை கொடுத்ததற்கு
    மிகவும் நன்றி அய்யா.

    ReplyDelete
  6. நான் இது பற்றி தேடிக் கொண்டிருந்த சமயம் இந்த பொன்னான மூன்று இணையத்தலங்களும் கிடைத்துள்ளது, காரணம் எல்லோருக்கும் வெளியில் சொல்ல முடியாத பல நோயிகளும் இருக்கலாம் அவர்களுக்கு ரொம்பவும் பயனுள்ள தளங்கள்.
    நன்றி சார்.

    ReplyDelete

Post Top Ad