கூகுள்-ல் வார்த்தைக்கான பொருள் தேடுவதற்கு முன்பே தெரியும் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, March 31, 2010

கூகுள்-ல் வார்த்தைக்கான பொருள் தேடுவதற்கு முன்பே தெரியும்

வார்த்தைக்கான பொருள் தேடும் முன்பே சொல்லி விடுகின்றனர்.
கூகுள் தினமும் புதிதாக தனது தேடலில் ஏதாவது ஒன்றை
அறிமுகப் படுத்தி தனது வாடிக்கையாளருக்கு தேடுபொறி என்றாலே
அது கூகுள் தான் என்று சொல்லும் அளவுக்கு பலவித புதுமைகளை
செய்து கொண்டிருப்பது நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது
அதையும் தாண்டி வார்த்தைக்கான பொருள் கூகுலில் தேடும்
முன்பே சொல்லிவிடும் அடுத்த அதிசயத்தையும் நிகழ்த்தியுள்ளனர்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு.

[caption id="attachment_1469" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_1470" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]


கூகுள் நேரடி தேடல் , நேற்று , கடந்த மாதம் ,கடந்த வருடம் என்று
கூகுள் பல விதங்களில் தேடும் முறைகளை அறிமுகப்படுத்தி
இருந்தாலும் அதையும் தாண்டி இப்போது கூகுளில் வார்த்தைக்கான
பொருள் தேடும் முன்பே சொல்லி விடுகின்றனர். எப்படி என்றால்
கூகுள் இணையதளத்திற்கு சென்று நாம் தேடும் கட்டத்திற்க்குள்
Define என்ற வார்த்தையை கொடுத்து சிறிது இடைவெளிவிட்டு
எந்த வார்த்தைக்கான பொருள் தேடவேண்டுமோ அந்த வார்த்தையை
கொடுக்கவும் search பொத்தானை அழுத்த வேண்டாம் உடனடியாக
தேடும் முன்பே வார்த்தைக்கான பொருளை கொடுத்துவிடுகின்றனர்.
உதாரணமாக நாம் Define Victory என்ற வார்த்தையை கொடுப்பதற்க்குள்
அதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுவிட்டது படம் 1 -ஐ பார்க்கவும்.
மாணவர்களுக்கும் மதிப்பு மிக்க ஆசிரியர்களுக்கும் தங்களது
பொன்னான நேரத்தை மிச்சப்படுத்தி கொடுக்கும்.




வின்மணி இன்றைய சிந்தனை
ஒரு நாட்டின் கலாச்சாரத்தை சிதைப்பதன் மூலம் அந்த நாட்டின்
பழமையான நுன்கலைகள் பலவற்றை அழித்துவிடுகின்றனர்.
உலகிலே சிறந்த கலாச்சாரத்தை உள்ளடக்கியது பாரததேசம் ,
சித்தர்களையும் தத்துவஞானிகளையும் உலகிற்கு தந்ததும்
நம் பாரததேசம் தான்.



இன்று புரோகிராமர்க்கான உதவித் துளிகள்
PHP HTTP Functions

headers_sent()   Checks if / where the HTTP headers
have been sent    

setcookie()      Sends an HTTP cookie to a client
setrawcookie()   Sends an HTTP cookie without URL
 encoding the cookie value



இன்று மார்ச் 31 
பெயர் : ஐசக் நியூட்டன் ,
மறைந்த தேதி : மார்ச் 31, 1727

ஒரு ஆங்கிலக் கணிதவியலாளரும்,
அறிவியலாளரும், தத்துவஞானியும் ஆவார்.
ஈர்ப்பு விதி கண்டுபிடித்தவர். புவிசார் மற்றும்
விண்வெளிசார் இயக்கங்களைக் கட்டுப்படுத்தும்
இயற்கை விதிகளை முதன் முதலில் விளக்கியவர்.1687 ல்
ஈர்ப்பு சம்பந்தமான விளக்கங்களை உள்ளடக்கிய Philosophiae
Naturalis Principia Mathematica என்னும் நூலை
வெளியிட்டார்.
 

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

11 comments:

  1. fine. the google presentation and your explanation are fine. thanks for the inforation

    ReplyDelete
  2. @ krishnamoorthy நன்றி

    ReplyDelete
  3. Of course you are true. Google is introducing new concepts everyday. That is their success too.

    web development company chennai

    ReplyDelete
  4. பயனுள்ள தகவலுக்கு நன்றி...

    ReplyDelete
  5. உங்களுடைய அனைத்து பதிவுகளும் மிகவும் உபயோகமாக உள்ளது.உங்களுடைய கருத்துக்கள் அதைவிட மிக அருமை.

    ReplyDelete
  6. @ ரவிசங்கர் நன்றி

    ReplyDelete
  7. yappaa.................... google

    ReplyDelete
  8. tamil typing software web please!!!!!!!!!!

    ReplyDelete
  9. @ Rameshkumar
    தமிழில் டைப் செய்ய அழகி மென்பொருள் நன்றாக இருக்கும்.
    www.azhagi.com
    நன்றி

    ReplyDelete
  10. டைப் செய்ய அழகி

    ReplyDelete

Post Top Ad