வெளிவரும் தேதியை அறிவித்துள்ளது இதைப்பற்றித் தான் இந்த
பதிவு.
அனைத்து ஆன்லைன் ஆபிஸ் மென்பொருளுக்கும் முடிவு கட்டும்
நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அதிவேகம் மற்றும் பல
சேவைகளையும் கொண்டு மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2010 மென்பொருள்
வரும் ஏப்ரல் 27 ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளிவருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் 2009 -ல் 7.5 மில்லியன் மக்கள் மைக்ரோசாப்ட்-ன்
ஆபிஸ் 2010 பீட்டா பதிப்பை பயன்படுத்தி அதன் குறை நிறைகளை
பகிர்ந்து கொண்டனர். அனைத்து மக்களின் ஆதரவுடன் ஆபிஸ் 2010
குறைகளை நீக்கி பயன்பாட்டை அதிகரித்து விறபனைக்காக வர
இருக்கிறது ஆபிஸ் 2010 -ல் அதிகமாக ஆன்லைன் பயன்பாடு இருக்கும்
கூடவே இலவசமாக கோப்புகளை சேமிக்க இடம் கொடுக்கும்
சேவையும் தொடங்கலாம். கூகுள் ஏற்கனவே தன் ஆன்லைன்
சேவையான கூகுள் டாக்ஸ் தொடங்கிவிட்டாலும் மைக்ரோசாப்ட்
தான் இதற்க்கு சரியான போட்டியை கொடுக்கும்.
வின்மணி சிந்தனை
கோபம் வரும் நேரங்களில் அமைதியாக இருங்கள், யார் என்ன
கூறினாலும் கோபப்படாதீர்கள். ஆயிரம் வார்த்தை பேசுவதை விட
ஒரு மவுனம் பல பதிலை கொடுக்கும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகின் சர்க்கரை கிண்ணம் எது ?
2.சைக்கிளை கண்டுபிடித்தவர் யார் ?
3.பட்டுப்புழுக்களின் உணவு எது ?
4.பாரதியார் சமாதி எங்குள்ளது ?
5.பாலிஸ் என்றால் என்ன ?
6.இந்தியாவில் மிளகுக்கு புகழ் பெற்ற இடம் எது ?
7.சீஸ்மொகிராப் கருவி எதை அளக்க பயன்படுகிறது ?
8.பூனை எத்தனை மாதங்களில் கூட்டி ஈனும் ?
9.சிறுவாணி அணை எங்குள்ளது ?
10.காமராஜரின் அரசியல் குரு யார் ?
பதில்கள்:
1.கியூபா,2.மெக்மில்லன், 3.முசுக்கொட்டை,
4.பாண்டிச்சேரி,5. நகர அரசு,6.கேரளா,7.நிலநடுக்கம்
8.மூன்று மாதங்களில், 9.கோயம்புத்தூர்,10.சத்திய மூர்த்தி
இன்று ஏப்ரல் 18
பெயர் : ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
மறைந்த தேதி : ஏப்ரல் 18, 1955
பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட
ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார்.
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான
அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார்.
இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டைமுன்வைத்ததுடன்
குவாண்டம் பொறிமுறை, புள்ளியியற் பொறிமுறை
(statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய
துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
office 2010 is a great tool...i have a trial version of it...it works great
ReplyDelete