இருந்து பல தரப்பட்ட பயன்தரும் வீடியோக்கள் இணையதளத்தில்
கிடைக்கின்றன அவ்வாறு இணையதளங்களில் கிடைக்கும்
வீடியோவை எப்படி சேமிக்கலாம் என்பதைப்பற்றிதான் இந்த பதிவு.
[caption id="attachment_1727" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
முக்கியமான வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோவை
எந்த மென்பொருளும் இல்லாமல் உடனடியாக தரவிக்கி நம்
கணினியில் சேமிக்கலாம் இன்று பிரபலமாக இருக்கும் யூடியுப்,
மெட்டாகேபே,டெய்லிமோஸன்,வேகொ,பிளிக்கர் மற்றும் கூகுள்
வீடியோ இணையதளங்களில் இருந்து வீடியோ பக்கத்தின் யூஆரெல்
முகவரியை மட்டும் கொடுத்து நாம் நம் கணினியில் சேமித்து
வைத்துக்கொள்ள புதிதாக ஒரு இணையதளம் வந்துள்ளது.
இணையதள முகவரி : http://savevideo.me
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் தரவிரக்க விரும்பும்
இணையதளத்தின் முகவரியை கொடுத்து Download என்ற
பொத்தானை அழுத்தி வீடியோவை நம் கணினியில் தரவிரக்கிக்
கொள்ளலாம். ( படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது) உதாரணமாக நாம்
யூடியுப்-ன் யூரெல் முகவரியை கொடுத்துள்ளோம். நாம் தரவிரக்க
கொடுத்திருக்கும் யூடியுப்-ன் வீடியோவின் திரையையும் (screenshot)
நமக்கு காட்டும். கண்டிப்பாக இந்த இணையதளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
பசிக்கும் ஏழைக்கு உணவு கொடுக்க முடியவில்லை என்றால்,
நாட்டில் தொழில்நுட்பம் எவ்வளவு வளர்ந்து என்ன செய்ய ?
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அதிகமாகப் பயன்படுத்தப்படும் ஆங்கிலச்சொல் எது ?
2.இந்தியாவின் மிக உயரிய வீர விருது எது ?
3.காப்பர் நாடு எது ?
4.பாலைவனங்களில் காணப்படும் செடி வகை யாது ?
5.ஆபரணங்களில் தங்கத்தை விட விலை உயர்ந்தது எது ?
6.உலகிலேயே சில்க் அதிகமாக ஏற்றுமதி ஆகும் நாடு எது ?
7.இந்தியாவில் தொலைபேசி தயாரிப்பில் புகழ் பெற்ற நகரம் எது?
8.ஆமைகளை பிடிப்பதற்கு பயன்படும் மீன் எது ?
9.கங்காரு குட்டி பிறந்ததும் அதன் நீளம் என்ன ?
10.பாலைத் தயிராக்கும் பாக்டீரியா எது ?
பதில்கள் :
1. தி ( The),2.பரம்வீர் சக்ரா, 3.ஷாம்பியா,
4.காக்டஸ்,5.பிளாட்டினம்,6.சீனா,7.பெங்களுர்
8.ஸக்கர் மீன்கள், 9. 2.5 செ.மீ, 10.லாக்டோ பாஸிலஸ்
இன்று ஏப்ரல் 20
பெயர் : சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்
பிறந்த தேதி : ஏப்ரல் 20, 1910
மணிக்கொடிக் கால எழுத்தாளர், திரைப்பட
விமர்சகர், பட்டதாரி ஆசிரியர். அகில இந்திய
வானொலியின் இதழ்ப் பொறுப்பாசிரியராகவும்
முதுநிலை நிருபராகவும் 1968 வரை பணி
புரிந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் சிறப்புப்
பேராசிரியர்.ஆதியூர் அவதானி - முதல் தமிழ்க் கவிதை
நூலை வெளியிட்டவர்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
நன்றி வின்மணி
ReplyDeleteசிறு உதவி
தினம் பல வலை தளங்களை பார்கிறோம் அதில் நமக்கு பிடித்த தளத்தை ஆன் லைனில் சேமிக்க ஏதாவது தளம் உள்ளதா? அதில் நமக்கு தேவையான பிரிவுகளையும் உருவாக்க வேண்டும் ( உ-ம் - செய்தி - சினிமா - மருத்துவம் - சமையல்... etc...)
@ புதுவை சிவா
ReplyDeleteநண்பர் கேட்டால் உடனே பதில் கூறவேண்டும் அல்லவா , நாளைய பதிவில் உங்கள் கேள்விக்கான
பதில்.
நன்றி
நன்றி வின்மணி பயனுள்ள பதிவு. மிகவும் உதவியாக உள்ளது.
ReplyDeleteநன்றி
மகாராஜா
@ மகாராஜா
ReplyDeleteநன்றி