என்ற சேவையை மக்களுக்கு கொடுப்பதற்க்காக இணைந்துள்ளனர்
இதைப்பற்றிய ஒரு சிறப்பு பதிவு.
உலக அளவில் அதிக பயனாளர்களைக் கொண்டு முதலிடத்தில்
இருந்து வரும் பேஸ்புக் டிவிட்டர் வந்த பின் கொஞ்சம் பயனாளர்கள்
பேஸ்புக் பயன்படுத்துவது குறைந்து வருகிறது இதேப் போல் தான்
மைக்ரோசாப்ட்-ன் நிலமையும் கூகுள் டாக்ஸ் வந்த பின் அதிக
பயானர்கள் கூகுள் பக்கம் திரும்பியுள்ளனர் இதற்க்கு தீர்வாக
இரண்டும் கைகோர்த்து மைக்ரோசாப்ட்-ன் டாக்ஸ் -ஐ இனி
பேஸ்புக் பயனாளர்கள் தங்கள் நண்பர்களிடம் எளிதாக
பகிர்ந்துகொள்ளலாம். தன் சேவையை அனைத்து மக்களிடமும்
எடுத்துச்செல்லவும் கூகுள் டாக்ஸ் -க்கு போட்டியாக அதிக
பயனார்களை எளிதாக பிடிக்கும் நோக்கத்துடன் தான் மைக்ரோசாப்ட்
இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இனி பேஸ்புக் வாடிக்கையாளர்கள்
http://docs.com இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் எல்லா
கோப்புகளையும் பேஸ்புக்-ல் உள்ள அனைவரிடமும் எளிதாக
பகிர்ந்து கொள்ளலாம். இப்படியே சென்றால் கூகுள் டாக்ஸ்-ம்
டிவிட்டரும் இணைந்தாலும் ஆச்சர்யப்படுவதற்க்கு ஒன்றும் இல்லை.
வின்மணி சிந்தனை
அதிக பணம் வைத்திருப்பவனுக்கு கடைசிகாலத்தில்
போதுமான நிம்மதி இல்லாமல் போகிறது. நடுத்தரவாசிக்கு
வாழ்நாளின் கடைசி காலம் அன்பாகவும் சந்தோஷமாகும்
நிம்மதியாகவும் இருக்கிறது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் நிர்மானிக்கப்பட்ட முதல்
துறைமுகம் எது ?
2.இந்தியாவில் சிவில் சர்வீஸ் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது?
3.அன்னை தெரசா மரணமடைந்த ஆண்டு ?
4.உலகின் முதல் பெண் டாக்டர் யார் ?
5.தமிழகத்தை ஆண்ட முதல் பெண் அரசி யார் ?
6.இந்தியா முதன் முதலில் ஒலிம்பிக் போட்டியில் பங்கு
பெற்ற ஆண்டு எது ?
7.அமெரிக்காவின் தேசிய விளையாட்டு எது ?
8.வைரஸால் ஏற்படாத ஒரு நோய் எது ?
9. நர்மதை நதி எந்தக் கடலில் கல்க்கிறது ?
10. உலகின் மிகப்பெரிய பூங்கா எங்குள்ளது ?
பதில்கள்:
1.சூரத்,2.ரிப்பன் பிரபு, 3.1997, 4.மேரி ஷெர்லிப்(லண்டன்),
5.வேலு நாச்சியார்,6.1948, 7.பேஸ்பால்,8.டைபாய்டு
9. அரபிக்கடல் 10.கனடா
இன்று ஏப்ரல் 23
பெயர் : வில்லியம் ஷேக்ஸ்பியர்
மறைந்த தேதி : ஏப்ரல் 23, 1916
ஒரு ஆங்கிலக்கவிஞரும் நாடக ஆசிரியருமாவார்,
ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர்
என்றும் உலகின் மிகப் புகழ்வாய்ந்த நாடக
ஆசிரியர் என்றும் இவர் குறிப்பிடப்படுகிறார்.
அநேக சந்தர்ப்பங்களில் இங்கிலாந்தின் தேசியக் கவிஞர்
என்றும் "பார்ட் ஆஃப் அவான்" (அல்லது வெறுமனே
"தி பார்ட்") இவர் அழைக்கப்படுகிறார்.வாழும் அவரது
படைப்புகளில் 38 நாடகங்கள்,154 செய்யுள் வரிசைகள்
இரண்டு நெடும் விவரிப்பு கவிதைகள், மற்றும் பல
பிற கவிதைகள் உள்ளன.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
Shakespeare is from 16 th century. Please correct the year.
ReplyDelete@kavi மிக்க நன்றி
ReplyDelete