ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, April 24, 2010

ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட் வேர்ட்-ல் எளிதாக பார்க்கலாம்.

ஒரே பொருளுள்ள வார்த்தையை மைக்ரோசாப்ட்-ன் ஆபிஸ்
வேர்ட்-ல் எளிதாக எப்படி பார்க்கலாம் என்பதை பற்றிதான்
இந்த பதிவு.

[caption id="attachment_1787" align="aligncenter" width="389" caption="படம் 1"][/caption]




[caption id="attachment_1788" align="aligncenter" width="354" caption="படம் 2"][/caption]

மைக்ரோசாப்ட்-ன் பயன்பாடு பற்றி சொல்வதென்றால் நமக்கு
நேரம் காணது. சில பொருள்களுக்கான வார்த்தையை நாம்
இணையத்தில் சென்று தேடுவதற்க்கு பதில் மைக்ரோசாப்ட்
வேர்டு-ல் எளிதாக பார்க்கலாம். இதற்க்கு நாம் மைக்ரோசாப்ட்
வேர்டு- ஐ திறந்து நாம் தட்டச்சு செய்வதை தொடங்கலாம் எந்த
வார்த்தைக்கான பொருளுள்ள வார்த்தை தேவையோ அந்த
வார்த்தையின் மேல் வைத்து Right Clik செய்யவும் அதில் Synonyms
என்பதில் சென்றால் அதில் நாம் தேர்ந்தெடுத்த வார்த்தைக்கான
பல வகையான வார்த்தைகளை பார்க்கலாம் எது தேவையோ
அதை எடுத்துக் கொள்ளலாம். படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.
உதாரணமாக நாம் people என்ற வார்த்தையின் மேல்வைத்து
Right Click செய்து Synonyms என்பதை தேர்ந்தெடுத்துள்ளோம்
இதற்க்கான ஒரே பொருளுள்ள வார்த்தை படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது. இண்டெர்நெட் இணைப்பு இல்லாத நேரத்திலும்
நாம் வேர்ட்-ல் பொருளுக்கு இணையான வார்த்தையைப்
பார்க்கலாம் கண்டிப்பாக இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
ஞானம் வருவதற்கு எளிய வழி “ ஒரு மனிதன் இறந்த பின்
என்ன நடக்கிறது என்பதை உள் மனதால் ஆழ்ந்து பார்த்தால்
ஞானம் உன்னைத்தேடி வரும் ”

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பாரதரத்னா விருது பெற்ற முதல் ஜனாதிபதி யார் ?  
2.இந்தியாவின் தேசியப்பறவையாக மயில் அறிவிக்கப்பட்ட
 ஆண்டு எது ?  
3.”வைக்கம் வீரர் “ என்று அழைக்கப்பட்டவர் யார் ?   
4.பணவீக்கம் எதனால் ஏற்படுகிறது ?   
5.ராஜ் சபா உறுப்பினர்களின் பதிவிக்காலம் எத்தனை ஆண்டு ?
6.இந்திய சினிமாவின் தந்தை என்று அழைக்கப்படுபவ்ர் யார் ?  
7.உலகின் மிகப்பெரிய மசூதி எது ?   
8.உலகின் முதல் பெண் பிரதமர் யார் ?   
9.2012 -ல் ஒலிம்பிக் போட்டி எந்த நாட்டில் நடக்க இருக்கிறது ?
10. உலகிலே அதிக மருத்துவர்கள் உள்ள நாடு எது ?   
 
பதில்கள்:
1.டாக்டர் இராதாகிருஷ்ணன்,2.1963, 3.தந்தை பெரியார்,
4.தாராள பணப்புழக்கம் ,குறைந்த உற்பத்தி, 5. 6 வருடம்
6.தாதா சாகேப் பால்கே, 7. ஜீம்மா மசூதி(டெல்லி),
8.பண்டார நாயகா (இலங்கை),9. இங்கிலாந்து, 10.சீனா

இன்று ஏப்ரல் 24 
பெயர் : சச்சின் டெண்டுல்கர்
பிறந்த தேதி : ஏப்ரல் 24, 1973

தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரர்.
தனது 16ஆவது வயதில் பாக்கிஸ்தான் அணிக்கு
எதிராக 1989இல்  முதன்முதலாக அனைத்துலக
துடுப்பாட்டப் போட்டிகளில் அறிமுகமானார்.
டெஸ்ட்போட்டிகளிலும் ஒரு நாள் அனைத்துலகப் போட்டிகளிலும்
அதிக ஓட்டங்களை எடுத்த வீரர் இவரே, வரையறுக்கப்பட்ட
ஓவர் அனைத்துலகப் போட்டிகளில் (LOI) அதிகபட்சமாக
இரட்டைச்சதம் (200* ஓட்டங்கள்) எடுத்தவர் என்ற
பெருமையும் டெண்டுல்கரைச் சேரும். உங்களால்
இந்தியாவுக்கு பெருமை.

PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

  1. சின்ன விஷயம். ஆனால் மிக மிகப் பயன் தரும் தகவல். நன்றி

    ReplyDelete
  2. எத்தனை வருமா பயன்படுத்தினாலும், இப்படி யாரைவது அதன் பெருமையை சொல்லும் போதுதான் உயர்வு புரிகிறது. நன்றி@

    ReplyDelete
  3. @ ஜெகதீஸ்வரன் நன்றி

    ReplyDelete

Post Top Ad