டிவிட்டரில் இருக்கும் நண்பரின் தூங்கும் நேரத்தை கண்டுபிடிக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, April 5, 2010

டிவிட்டரில் இருக்கும் நண்பரின் தூங்கும் நேரத்தை கண்டுபிடிக்கலாம்

டிவிட்டரில் இருக்கும் நண்பரின் தூங்கும் நேரத்தை எளிதாக எப்படி
கண்டுபிடிக்கலாம் என்பதைப் பற்றி தான் இந்த பதிவு.



மளிகை கடை வைத்திருப்பவரிலிருந்து  உலகப் பணக்காரர் நம்
சங்கத்தலைவர் பில்கேட்ஸ் வரை அனைவரின் தூங்கும் நேரத்தையும்
எளிதாக கண்டுபிடிக்கலாம். இதற்காக நீங்கள் எந்த கணக்கும் துவங்க
வேண்டாம் டிவிட்டரில் இருக்கும் யாருடை தூங்கும் நேரத்தை
கண்டுபிடிக்க வேண்டுமோ அவர்களின் டிவிட்டர் பயனாளர் பெயரை
மட்டும் கொடுத்தால் போதும் சில நொடிகளில் அவர் தூங்கும்
நேரம் என்ன என்பதை படத்துடன் காட்ட ஒரு இணையதளம்
உள்ளது.

இணையதள முகவரி :  http://www.sleepingtime.org

[caption id="attachment_1538" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

இந்த இணையதளத்திற்கு சென்று நாம் டிவிட்டரில் உள்ள நம்
நண்பர்களின் பயனாளர் பெயரை கொடுத்து எளிதாக அவர்கள்
தூங்கும் நேரத்தை கண்டுபிடிக்கலாம். எந்த விளம்பரமும் இல்லை.
நாம் டிவிட்டரில் அடிக்கடி பயன்படுத்தும் நேரத்தை வைத்தே
இதை கண்டுபிடிக்கின்றனர். உதாரணமாக நாம் பில்கேட்ஸ்
தூங்கும் நேரத்தை அவரின் டிவிட்டர் முகவரியை கொடுத்து
பார்த்தோம்.  படம் 1-ல் காட்டப்பட்டுள்ளது.
வின்மணி இன்றைய சிந்தனை
வங்கியில் கல்விக்கடன் கொடுக்கும் அதிகாரி நுனி நாக்கில்
ஆங்கிலம் பேசும் நபருக்கு கடன் கொடுப்பதைவிட ஏழை கிராம
மாணவருக்கு கடன் கொடுத்தால் பணம் விரைவில் திரும்ப வரும்.
ஒரு குடும்பத்திற்கு உதவி செய்த புண்ணியமும் கிட்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1. ஒரு கிராம் கொழுப்பில் எவ்வளவு கலோரிகள் கிடைக்கும் ?
2. FM -ஐ கண்டுபிடித்தவர் யார் ?
3. இண்டெர்நெட்-ஐ பாதித்த முதல் வைரஸ் ?
4. நீர்க்கண்ணாடி என்றால் என்ன  ?
5. உலகிலேயே மிக உயரமான விமான நிலையம் எது ?
6. பூமியின் ஒரே கோள் எது ?
7. உலககோப்பையில் 10 ஆட்டங்களில் 27 விக்கெட்களை
 கைப்பற்றி புதிய சாதனை படைத்த வீரர் யார் ?
8. இந்தியன் இரயில்வேயில் அதிவிரைவு இரயில் எது ?
9. முதல் தமிழ் கலர் திரைப்படம் எது ?
10. எந்த கொசு இனம் மனிதனைக் கடிக்கின்றது ?
பதில்கள்
1. 9 கலோரிகள், 2.ஆம்ஸ்ட்ராங்,1933, 3.லவ் - பக்,5-5-2000
4. சோடியம் சிலிகேட் , 5. லாசா விமான நிலையம் , தீபெத்.
6. நிலவு ,7.சமிந்தாவாஸ் , 8. சதாப்தி எக்ஸ்பிரஸ்,
9. அலிபாபாவும் 40 திருடர்களும்,10.பெண் கொசு இனம்

இன்று ஏப்ரல் 5 
பெயர் : க. கைலாசபதி ,
பிறந்த தேதி : ஏப்ரல் 5, 1933

இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் இலக்கிய
விமர்சகர், திறனாய்வாளர்.ஈழத்துத் தமிழ்
இலக்கியத் துறைக்கு இவர் ஆற்றிய பங்கு
முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ் இலக்கியத்
திறனாய்வுத் துறையிலே இவராற்றிய பணி ஈழத்துக்கு
மட்டுமன்றித் தமிழுலகம் முழுவதற்குமே முன்னோடியாகக்
கருதப்படுகின்றது.
 
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. இன்றைய 'விண்மணி சிந்தனை' 100/100 கடை பிடிக்க வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  2. @ Elamurugan மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad