நோக்குடன் தொழில்நுட்பத்தின் உச்சக்கட்டமாக வெளிவந்திருக்கும்
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-ல் வைஃபை (wifi) பிரச்சினை
உண்மைதானா என்பதைப்பற்றிய சிறப்பு பதிவு.
ஆப்பிள் நிருவனத்தின் ஐபேட் அதிக அளவு மில்லியன் மக்களை
சென்றடைந்து விற்பனையில் அபாரமாக வளர்ந்து வரும் இந்த
நேரத்தில் சிலர் சிறிய குறைகளை கூட மிகைப்படுத்தி கூறி
வருகின்றனர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட்-ல் வைஃபை
பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்ற குறையை முன்
வைத்துள்ளனர். முதன் முதலில் ஆப்பிள் ஐபேட்-ல் பிளாஷ் (Flash)
பயன்படுத்த முடியாது என்ற கோஷம் வந்த உடனே சரிசெய்தனர்
அடுத்து இப்போது வைஃபை -ல் ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு
ஆப்பிள் நிறுவனத்தின் பதில் “ வைஃபை wifi சிக்னலின் வேகம்
குறைவாக இருப்பது உண்மைதான் ஆனால் கண்டிப்பாக wifi
இணைப்பில் எந்த பிரச்சினையும் இல்லை. இதற்காக தற்போது
வைஃபை சிக்னலின் வேகத்தை விரைவில் அதிகரிக்க நடவடிக்கை
எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதில் ஒரு பெரிய
வேடிக்கை என்னவென்றால் பல இடங்களில் இலவசமாக கிடைக்கும்
வைஃபை சிக்னலை கூட இந்த ஐபேட் -ல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
வின்மணி சிந்தனை
கல்வி அறிவு பெற்ற மற்றும் பெறாத சில முட்டாள்களிடம் நாம்
எவ்வளவு நேரம் பேசினாலும் அது நிழலுக்கு இறைத்த நீராகத்தான்
போகும். இவர்களிடம் நாம் மவுனமாய் இருப்பதே சிறந்தது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.எகிப்தியர்களின் முதன்மை கடவுள் யார் ?
2.இசைக்கு முக்கிய ஆதாரமாக கருதப்படும் வேதம் எது ?
3.ஒளி செல்லும் வேகத்தை கண்டுபிடித்த விஞ்ஞானி யார்?
4.ஐம்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் மலர் எது ?
5.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுத பயிற்ச்சி
அளிக்கும் நாடு எது ?
6.சதுரங்க அட்டையில் மொத்தம் எத்தனை சதுரம் உள்ளன?
7. பண்டைய ஆரியர்களின் மொழி யாது ?
8. ஏழு குன்றுகளின் நகரம் என்று அழைக்கப்படுவது எது ?
9.சூரிய மண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது?
10. தமிழ்நாட்டின் விலங்கு எது ?
பதில்கள்:
1.சூரியன்,2.சாம வேதம், 3.ரோமர்,
4.கார்டஸ்,5. ஜப்பான்,6.64 சதுரம்,7.சமஸ்கிருதம்
8.ரோம், 9.பயோனியர் 10, 10.வரையாடு
இன்று ஏப்ரல் 19
பெயர் : சார்லஸ் டார்வின்
மறைந்த தேதி : ஏப்ரல் 19, 1882
ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர்.
இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக்
கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான
அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த
உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம்
ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species)
என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார்.
PDF ஆக தரவிரக்க இங்கே சொடுக்கவும்
பகிர்வுக்கு நன்றி
ReplyDeletegood
ReplyDelete@ Elamurugan நன்றி
ReplyDelete@ aliakbar நன்றி
ReplyDelete