12 நாட்களில் உருவாக்கும் ஒபன் சோர்ஸ் சோசியல் நெட்வொர்க்கான
டையேஸ்போரா- வைப் பற்றிய ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்.
பேஸ்புக்-ல் இருக்கும் பல குறைகளை தீர்க்கும் விதமாகவும்,
பேஸ்புக்-ல் நமக்கு வரும் பின்னோட்டத்தை அனைவரும் அல்லது
குறிப்பிட்ட சிலர் மட்டும் பார்க்கும்படியான வசதி இல்லை இப்படி
பேஸ்புக்-ல் இருக்கும் பல குறைகளை நிறைவு செய்யும் விதம்
நம் விருப்பப்படி மாற்றி அமைக்க எளிதான முறையில் நீயூயார்க்
NYU கல்லூரி மாணவர்கள் பேஸ்புக்கிற்கு இணையான ஒரு
சோசியல் நெட்வொர்க்கை உருவாக்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
12 நாட்களில் இதை உருவாக்கப்ப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதற்க்கு ஆகும் செலவாக $1,000,00 டாலர் பணத்தை
நிர்ணயத்துள்ளனர். இவர்களின் லாஜிக் மிகச்சரியாக இருப்பதாக
பல நிறுவனங்கள் அறிந்து பணஉதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இந்த ஒபன் சோர்ஸ் சோசியல் நெட்வொர்க்குகான பெயர்
டையேஸ்போரா. ஜீன் 1 தேதியில் இருந்து இவர்களின் இந்த
பிராஜெக்ட் வேலை தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.
இந்த பிராஜெக்ட் பற்றிய ஒரு அறிமுக வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.
[vimeo=http://vimeo.com/11099292]
வின்மணி சிந்தனை
செய்ய வேண்டும் என்று நினைத்த நல்ல காரியத்தை
அப்போதே செய்ய வேண்டும்.காலம் தாழ்த்தி செய்யும்
வேலைக்கு பலன் குறைவு.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கோகோ ஆட்டத்தில் ஒரு குழுவுக்கு எத்தனை பேர் ?
2.நுகர்ந்தால் வாடும் மலர் எது ?
3.தென் ஆப்பிரிக்காவின் தலைநகரம் எது ?
4.லக்னோவில் ஒடும் நதி ?
5.பண்டைய காலத்தில் சேரநாடாக இருந்தது எது ?
6.தமிழ்நாட்டின் நீளமான அனைக்கட்டு எது ?
7.வெனிகரில் எந்த அமிலம் உள்ளது ?
8.கோஹினூர் வைரத்தை கொள்ளை அடித்தவர் யார் ?
9.டைம் பத்திரிகை எந்த நாட்டிலிருந்து வெளிவருகிறது ?
10.ஸ்காட்லாண்ட் யார்ட் என்பது என்ன ?
பதில்கள்:
1.9 பேர்,2. அனிச்சமலர், 3. கேப்டவுன் ,4.கோமதி
5.கேரளா,6.கீழ்பவானி, 7.அசிடிக் அமிலம், 8. நாதிர்ஷா
9.அமெரிக்கா,10.லண்டன் காவல்துறையின் துப்பறியும் பிரிவு
இன்று மே 14
பெயர் : ஜோர்ச் லூகாஸ்,
பிறந்த தேதி : மே 14, 1944
உலகப்புகழ் பெற்ற அகடமிய விருதுக்கு
பலமுறை பரிந்துரைக்கப்பட்ட இயக்குனராவார்.
இவர் தனது படைப்புகளான ஸ்டார் வார்ஸ்
மற்றும் இண்டியானா ஜோன்ஸ் போன்ற
படைப்புகள் முலம் நன்கு அறியப்பட்டவர்.அமெரிக்காவின்
தலைசிறந்த இயக்குனராகவும் வியாபார ரீதியில் வெற்றி
கொள்ளும் இயக்குனர்களிலும் ஒருவராவார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
அருமையான செய்தி!...
ReplyDeleteமாணவர்கள் ஜெயம் பெறட்டும்.!
@ ஜெகதீஸ்வரன்
ReplyDeleteமிக்க நன்றி