எல்லாம் சரியாகத் தெரிகிறது என்று எளிதாக எந்த பணச்செலவும்
இல்லாமல் கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப் பதிவு.
[caption id="attachment_2090" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
[caption id="attachment_2091" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]
சொந்தமாக இணையதளம் வைத்திருக்கிறோம் என்றால் அது எல்லா
நாடுகளிலும் பிரச்சினை இல்லாமல் சரியாகத் தெரிகிறதா என்ற ஆசை
நம் அனைவருக்கும் இருக்கும் இதற்க்காக நாம் எல்லா நாடுகளில்
உள்ள தேடுபொறிகளுக்கும் சென்று சரியாகத்தெரிகிறதா என்றெல்லாம்
சரிபார்க்க வேண்டாம். இந்த இணையதளத்திற்க்குச் சென்று நாம்
எளிதாக சரி பார்க்கலாம்.
இணையதள முகவரி : http://just-ping.com
இந்த இணையதளத்திற்க்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி உள்ள
கட்டத்திற்க்குள் நம் இணையதளமுகவரியை கொடுத்து ping என்ற
பொத்தானை அழுத்தியதும் சில நிமிடங்களில் நம் இணையதளம்
உலகநாடுகள் அனைத்திலும் நம் இணையதளம் சரியாகத்தெரிகிறதா
என்று சோதித்து உடனடியாக நமக்கு படம் 2-ல் காட்டியபடி முடிவுகளை
அறிவிக்கும். இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே நாம் உலகம்
முழுவதிலும் நம் இணையதளம் எப்படித் தெரிகிறது என்று எளிதாக
கண்டுபிடிக்கலாம்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும். இதே போல் எல்லா இணைய உலாவிகளிலும் நம்
இணையதளம் சரியாகத்தெரிகிறதா என்பதை அறிய இங்கே
சொடுக்கவும்.
http://winmani.wordpress.com/2009/12/09/
வின்மணி சிந்தனை
நல்ல நண்பர்கள் கிடைப்பது நாம் செய்த உதவிக்கு
கிடைத்த பரிசு , தீயவர் நண்பராக கிடைப்பது நாம்
செய்த பாவத்துக்கு கிடைத்தப் பரிசு.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.’டிரம்ப்’ எனப்படுவது என்ன ?
2.பூட்டானின் தலைநகரம் எது ?
3.திருவாரூரில் ஒடும் நதியின் பெயர் என்ன ?
4.கவிச்சக்கரவர்த்தி கண்ணதாசன் பிறந்த ஊர் எது ?
5.பொவிலியாவின் தலைநகரம் எது ?
6.டில்லியில் எத்தனை வெளிநாட்டு தூதரகங்கள் உள்ளன ?
7.முகமது நபிகள் பிறந்த இடம் எது ?
8.சூரியமண்டலத்தை கடந்து சென்ற ஒரே செயற்கைக்கோள் எது?
9.சபர்மதிராது என்ற பெயர் யாருக்குரியது ?
10.கின்னஸ் புத்தகம் எந்த ஆண்டில் வெளியாயிற்று ?
பதில்கள்:
1.சரக்குக்கப்பல்,2. திம்பு, 3.குடமுருட்டி,4.சிறுகூடல்பட்டி
5.லாபாஸ்,6.155, 7.மெக்கா,8. பயோனியர் 10
9.மகாத்மா காந்தி,10.1965
இன்று மே 17
பெயர் : செந்தில் ராமமூர்த்தி,
பிறந்த தேதி : மே 17, 1974
ஒரு அமெரிக்கா நடிகர் ஆவார். சிக்காகோவில்
தமிழ் தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில்
ராமமூர்த்தி சான் அன்டோனியோவில் வளர்ந்தார்.
அமெரிக்கத் தொலைக்காட்சியில் "ஹீரோஸ்"
என்ற தொடரில் ஒரு மரபியல் அறிவியலாளராக
நடித்து புகழுக்கு வந்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Very useful.
ReplyDeleteThanks!
First Class!!! Expecting a lot!!!
ReplyDelete@ geetha
ReplyDeleteமிக்க நன்றி
@ GPandurengan
ReplyDeleteமிக்க நன்றி