அனுப்பலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_2168" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
[caption id="attachment_2169" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]
இமெயில் மூலமும் ரேபிட்ஷேர் இன்னும் பல இணையதளங்கள்
மூலமும் நாம் தகவல்களை அனுப்பி இருக்கிறோம் ஆனால்
ஒருவருக்கு மட்டும் தகவல்களை வேகமாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம் இதற்க்கு டீம்வியூவர்,ரெட்மின் போன்ற தளங்கள்
இருந்தாலும் இந்தத்தளத்தில் நாம் தகவல்களை அப்லோட் செய்ய
அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் இப்படி எந்தப்பிரச்சினையும்
இல்லாமல் நம் தகவல்களை எளிதாகவும் பாதுகாப்பாகவும்
அனுப்பலாம்.
இணையதள முகவரி : http://isendr.com
இந்தத்தளத்திற்க்கு சென்று படம் 1-ல் காட்டியபடி send file என்ற
பொத்தானை அழுத்தி அனுப்ப வேண்டிய கோப்பை தேர்ந்தெடுக்கவும்
கடவுச்சொல் வேண்டுமால் கூட கொடுத்துக்கொள்ளலாம். இப்போது
படம் 2 ல் காட்டியபடி ஒரு முகவரி கொடுக்கப்பட்டிருக்கும் அந்த
முகவரியை நாம் யாருக்கு கோப்பு அனுப்ப வேண்டுமோ அவருக்கு
கொடுக்கவும் இப்போது peer to peer protocol மூலம் நம் கணினியில்
நாம் தேர்ந்தெடுத்த கோப்பை அவர் நேரடியாக தரவிரக்க முடியும்.
தரவிரக்கி முடிந்ததும் அந்த இணையதள முகவரி தன் பயன்பாட்டை
முடித்துக்கொள்ளும்.கண்டிப்பாக இந்த தளம் நமக்கு பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
அடுத்தவர் உழைப்பினால் விழையும் எந்த பொருளுக்கும்
ஆசைப்படாதவன் மன அளவில் கூட பாதிக்கப்பட மாட்டான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது ?
2.இந்தியத் திட்டக்கமிஷன் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
3.சுயிங்கம் தயாரிக்கப்பயன்படும் மரம் எது ?
4.ஆஃப்செட் அச்சு முறையைக் கண்டுபிடித்தவர் யார் ?
5.க்யூரி தம்பதி கண்டுபிடித்த தனிமம் எது ?
6.விடுபடும் திசைவேகத்திற்க்கு உதாரணம் என்ன ?
7.உலகத்திரை உலகின் திகில் மனிதர் யார் ?
8.கிருஷ்ணன் குடையாக தூக்கிய மலை எது ?
9.மெளஃளேன் என்றால் என்ன ?
10.டில்லி யூனியன் பிரதேசத்தின் முதல் பெண்முதல்வர் யார் ?
பதில்கள்:
1.எறும்புகளால், 2.1950, 3.சயோடில்லா,
4.ரபேல்,5.ரேடியம், 6.ராக்கெட்,7.ஹிட்சாக்,
8.கோவர்த்தனகிரி,9.காட்டு வெள்ளாடு,10.சுஷ்மா சுவராஜ்
இன்று மே 26
நாள் : மே 26 , 2002
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்
செவ்வாய் சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு
கோள். இது சூரியனலிருந்து நான்காவது கோள்
ஆகும். மார்ஸ் ஒடிசி என்னும் விண்ணூர்தி
செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள்
இருப்பதை அறிந்த மகிழ்ச்சியான நாள்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Great post. thanx
ReplyDelete@ Rajasurian
ReplyDeleteநன்றி
பயனுள்ள பதிவு நன்றி சார் .
ReplyDelete//பாம்புப் புற்று எவ்வாறு உருவாகிறது ?
எறும்புகளால்//
கரையான்களால். (இதுவும் சரியான பதிலா ?)
@ தாமஸ் ரூபன்
ReplyDeleteபாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.
இதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் கோடை வெயிலில்
சென்று இந்த புற்றில் பாம்பை வெளியேற்றிவிட்டு உள்ளே
நம் கையை விட்டுப் பார்த்தால் கை சில்லேன்று குளிர்ந்து
இருக்கும். இந்த மண்புற்றுக்கு பல மருத்துவ குணமும் உண்டு
கரையான் புற்று சீக்கிரத்தில் காணமல் போகும் ஆனால்
எறும்பு புற்று நெடுங்காலம் இருக்கும்.
மிக்க நன்றி நண்பரே
//பாம்பு புற்று எறும்புகளால் தான் உருவாக்கப்படுகிறது.
ReplyDeleteஇதில் ஒரு சிறப்பு இருக்கிறது. நாம் கோடை வெயிலில்
சென்று இந்த புற்றில் பாம்பை வெளியேற்றிவிட்டு உள்ளே
நம் கையை விட்டுப் பார்த்தால் கை சில்லேன்று குளிர்ந்து
இருக்கும். இந்த மண்புற்றுக்கு பல மருத்துவ குணமும் உண்டு
கரையான் புற்று சீக்கிரத்தில் காணமல் போகும் ஆனால்
எறும்பு புற்று நெடுங்காலம் இருக்கும்.
மிக்க நன்றி நண்பரே//
விளக்கமான பதிலுக்கு நன்றி ஐயா.
புற்றைப் பற்றி புட்டு புட்டு வைச்சுட்டீங்க!.
ReplyDeleteஒவ்வொறு பதிவும் சுவாரசியம்!. + உபயோகம்!.
- ந.ஜெகதீஸ்வரன்.
@ ஜெகதீஸ்வரன்
ReplyDeleteமிக்க நன்றி
நண்பர் வின்மணிக்கு,
ReplyDeleteஎனக்கு I T துறையில் அனுவமும் அறிவும் குறைவு. கனிணியை ஓரளவிற்கு இயக்கத் தெரியும் அவ்வளவுதான். ஆனால் ஒரு பேராசை. சுயமாக ஒரு அகப்பக்கம் உருவாக்க வேண்டுமென்று. வலையில் சிலவற்றைப் படித்துப் பார்த்தேன். இருந்தும் இயலவில்லை. என்போன்றோர்க்கு, சுலபமாக புரிந்து கொள்ளும் வகையில் step by step ஆக வழி காட்டி ஒரு பதிவைப் போடுவீர்களா?
@ தணிகாசலம்
ReplyDeleteநண்பருக்கு இது பேராசை அல்ல நியாமான ஆசை தான் , கண்டிப்பாக விரைவில்
தெரியப்படுத்துகிறோம்.
மிக்க நன்றி