கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Friday, May 7, 2010

கூகுள் குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய வீடியோ

இணைய உலாவிகளிலும் முதல் இடத்தை பிடித்துவிட
வேண்டும் என்ற நோக்கில் தினமும் பல வகையான வசதிகளை
கூகுள் குரோம் உலாவியில் புகுத்தி வருகின்றனர் அந்த வகையில்
இப்போது குரோம் உலாவியின் வேகத்தை சோதிக்கும் அரிய
வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது இதைப்பற்றித் தான் இந்த பதிவு



இதுவரை எந்த உலாவியையும் இப்படி சோதித்ததில்லை என்று
சொல்லும் அளவிற்க்கு இயந்திரங்களின் உதவியுடன் தன் கூகுள்
குரோம் உலாவியின் வேகத்தை நுனுக்கமாக சோதித்துள்ளது.
அதிநவீன படம் எடுக்கும் கேமிராவின் உதவியுடன் சிறப்பாக
சோதித்துள்ளது. அதாவது வேகமாக வரும் ஒரு பொருள் கணினி
திரையினை தொடங்குவதற்க்கு முன் கட்டளை கொடுக்கிறது அந்த
பொருள் திரையை விட்டு செல்வதற்க்குள் நாம் கட்டளையிட்ட
இணையதளம் வந்து விடுகிறது.  ஒரு சோதனை முறை அல்ல
வெவ்வெறுவிதமாக இயந்திரங்களின் உதவியுடன் சோதனை
செய்துள்ளனர் அனைத்திலும் வெற்றி தான்.இதன் வேகத்திற்க்கு
முன் இன்னொரு உலாவி இந்த அளவிற்க்கு செயல்படுமா என்று
தெரியவில்லை பார்பதற்க்கு வியப்பாக இருக்கும் இந்த விடியோவை
இத்துடன் இணைத்துள்ளோம்.







இங்கு சோதிக்கப்பட்டுள்ள கூகுள் குரோம் உலாவியுன் பீட்டா பதிப்பை
இந்த முகவரியை சொடுக்கி  தரவிரக்கலாம்.
http://www.google.com/intl/en/landing/chrome/beta/
வின்மணி சிந்தனை
அடுத்தவனை பற்றி குறை கூறும் நபர்கள் வாழ்க்கையில்
முழுமையான வெற்றியும் சந்தோஷத்தையும் கண்டிப்பாக
பெறுவது கடினம் தான்.



TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.பிரஞ்சு நாட்டின் காந்தி என்று அழைக்கப்பட்டவர் யார் ?
2.விக்டோரியா ஏரி எந்த நாட்டில் உள்ளது ?   
3.டென்மார்க் நாட்டின் தேசிய சின்னம் எது ?
4.ஞாபகமறதியை போக்கும் வைட்டமின் எது ?
5.கங்கையும் யமுனையும் கூடும் இடத்தில் உள்ள நகரம் எது ?
6.உலகிலேயே மிகப்பெரிய வைரச்சுரங்கம் உள்ள நாடு எது ?
7.இந்திராகாந்தி அனுசக்தி நிலையம் எங்குள்ளது ?
8.தூத்துகுடியின் பழைய பெயர் என்ன ?
9.பூமியின் வயது எத்தனை ஆண்டுகள் ?
10.உலகின் மிக ஆழமான கடல் எது ?

பதில்கள்:
1.சார்லஸ் டிகாலே,2.ஆப்பிரிக்கா, 3.கடற்கரை, கனடா,
4.வைட்டமின் ஈ,5.அலகாபாத்,6.கிம்பர்லி,7.கல்பாக்கம்,
8. முத்துநகர்,9.480 கோடி ஆண்டுகள்,10.பசிபிக் கடல்



இன்று மே 7  இரவீந்திரநாத் தாகூர்
பெயர் : இரவீந்திரநாத் தாகூர்,
பிறந்த தேதி : மே 7, 1861

புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார்.
இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன
பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக
குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய
மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின்
தேசிய கீதமாக உள்ளது. கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக
இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.
நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார்.
 

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. ப்ரவ்சரின் வேகம் மட்டுமல்ல இணைய இணைப்பின் வேகமும் இங்கே முக்கியம்.

    நம்மூர் இணைய இணைப்பில் இச்சோதனையை நடத்தினால் செம காமெடியாய் இருக்கும்.

    கூகுளின் மார்கெட்டிங் கிரேட்(என்னமா படம் காட்ரானுக) . ஆனாலும் இன்றைய நிலையில் பயர்பாக்ஸ் குரோம்-ஐ விட பெஸ்ட் என்றே தோன்றுகிறது . just my opinion :) :) :)

    ReplyDelete
  2. @ அஹமது இர்ஷாத்
    மிக்க நன்றி

    ReplyDelete
  3. firefox ஐ விட Chrome சிறந்த Browser என்பதில் சந்தேகமில்லை. firefox இல்install செய்யப்படும் Plugin களால் ஏற்படும் தொல்லைகள் சொல்லிமாளாதவைகள். வேகமோ குரோமுடன் ஒப்பிடும்போது ஆமை வேகமே. இடத்தையும் பெரிதாக எடுத்துக் கொண்டு Firefox வேதனையளிக்கின்றது. நான் Chrome அறிமுகமானவுடனேயே Fiefox பாவிப்பதை விட்டுவிட்டேன். இப்போது பலருக்கும் Chrome ஐயே சிபாரிசு செய்கிறேன்.

    ReplyDelete
  4. I USE OPERA LATEST VERSION WHERE YOU CAN SEE THE DOWNLOAD SPEED AND MANY OTHER DETAILS AS THE PAGES ARE DOWNLOADED.
    CHROME IS ANOTHER ONE WHICH I FIND FAST AND GREAT .

    ReplyDelete
  5. @ LVISS
    இரண்டும் சராசரியாக ஒரே வேகம் என்றாலும் நமக்கு ஒபேரா தான் வேகமாக இருப்பது போல் தெரிகிறது.
    அடுத்து தற்போது வெளிவந்துள்ள ஒபேராவில் சில இணையதளங்களை திறக்கும் போது தானாகவே
    மூடி விடுகிறது. இந்த பிரச்சினை குரோமில் இல்லை.

    ReplyDelete

Post Top Ad