25 டெராபைட்ஸ் டைட்டானியம் ஆக்ஸைட் சூப்பர் டிஸ்க் அறிமுகம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, June 5, 2010

25 டெராபைட்ஸ் டைட்டானியம் ஆக்ஸைட் சூப்பர் டிஸ்க் அறிமுகம்

ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் அதிக  சேமிக்கும் (கொள்ளவு)  இடம்
கொண்ட ஒரு பிரத்யேக டிஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளனர்
இதைப் பற்றிய சிறப்பு பதிவு.



எளிதாக எங்கும் எடுத்துசெல்ல சிடி, டிவிடி டிஸ்க் வந்த போதும்
மிக மிக அதிக அளவு கொள்ளவு கொண்ட ஒரு பிரத்யேக டிஸ்க்
ஒன்றை ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.இதன்
சேமிக்கும் அளவு 25 TB சற்று விரிவாக பார்ப்போம்.

8 Bits   =  1 Byte
1024 Bytes   =  1 Kilobyte (KB)
1024 Kilobytes   =   1 Megabyte  (MB)
1024 Megabytes   =   1 Gigabyte  (GB)
1024 Gigabytes    =     1 Terabyte  (TB
)

இப்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் CD யின் சேமிப்பு
இடம் 700 MB ,அதே போல் இப்போது நாம் பயன்படுத்திக்
கொண்டிருக்கும் DVD -யின் சேமிப்பு இடம் 4.7 GB . தற்போது
ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ள இந்த டிஸ்க்-ன் சேமிப்பு
இடம் 25 TB . இந்த டிஸ்க் டைட்டானியம் ஆக்ஸைடு
மெட்டிரியல் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது .ஒளிக்கற்றைகளை
இந்த டிஸ்க் -ன் மீது செலுத்தி தகவல்களை சேமிக்கின்றனர்
ஒளிக்கற்றைகளை செலுத்தும் போது வெவ்வேறு வண்ணம்
மூலம் இங்கு சேமிக்கப்படுகிறது.இதனால் இங்கு தகவல்களை
சேமிக்கும் நேரமும் எடுக்கும் நேரமும் மிகக் குறைவாகத்தான்
ஆகும். இதன் விலையும் அதிகமாக இருக்கப்போவதில்லை
என்று அறிவித்துள்ளனர்.
வின்மணி சிந்தனை
விளையாட்டுக்காக கூட நாம் அடுத்தவர் மனம் புண்படும்படி
பேசக்கூடாது. அடுத்தவர் மனம் புண்பட்டால் நம் வாழ்க்கை
மகிழ்ச்சியாக இருக்காது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.மத்திய ரேகையின் நீளம் என்ன ?
2.சத்தம் போடாத விலங்கு எது ?
3.தண்டுவடத்தின்  நீளம் எவ்வளவு ?
4.’ப்ரகதி’ மைதானம் எங்குள்ளது ?
5.பூனை எத்தனை மாதங்களில் குட்டி ஈனும் ?
6.கவிஞர் கண்ணதாசன் எந்த ஊரில் காலமானார் ?
7.’யூதர்கள்’ என்போர் யார் ?   
8.குதிரையின் மேல் அமர்ந்தபடி விளையாடப்படும்
விளையாட்டு எது ?
9.இந்திரா காந்தியை சுட்டு கொண்றவன் பெயர் என்ன ?
10.அருணகிரி நாதர் எந்த ஊரில் அவதரித்தார் ?

பதில்கள்:
1.39891 கி.மீ, 2.ஒட்டகச்சிவிங்கி, 3.சுமார் 18 அங்குலம்,
4.புதுடெல்லி ,5.மூன்று, 6. சிகாகோ,7.பாலஸ்தீன நாட்டை
சேர்ந்தவர்கள், 8.போலோ,9.சத்வந்த் சிங்,10.திருவண்ணாமலை

இன்று ஜுன் 5 
உலக சுற்றுச்சூழல் நாள்

ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும்
ஜூன் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வரும்
ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வு 1972
ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பற்றிய ஒரு விழிப்புணர்வை
அனைத்து மக்கள் மத்தியிலும் கொண்டு செல்ல வேண்டும்
என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

13 comments:

  1. 25 TB டிஸ்கா? ஜப்பானியர்கள் கில்லாடிகள்தான். நல்ல தகவலைத் தந்த பதிவு. பிட்ஸ்ஸில் இருந்து டெராபைட்ஸ் விவர அட்டவணை எனக்குப் புதிய தகவல். இதுவரை மெட்ரிக் ஸிஸ்டப்படி 1000 ஆயிரமாக உயரும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இதில் புதுமை செய்தவர்கள் டிஸ்க்கின் சுற்றளவிலும் மாற்றம் ஏதும் செய்துள்ளார்களா?

    ReplyDelete
  2. Very good. Useful info. Keep rocking.

    ReplyDelete
  3. அன்புடன் நண்பருக்கு வணக்கம் இந்த kb ,mb,gb. என்ன கணக்கு என்று புரியாமல் இருந்தது என் போன்ற பாமரன்கள்
    தெளிவாக தெரிய உதவி உள்ளீர்கள் நன்றி...... .உங்கள் ப்ளாக் ஓபன் செய்தல் ஒட்டு போட எங்கே போவது அதற்க்கு வாய்ப்பு எங்கே உள்ளது தெரிவிக்கவும் (எனக்கு நேரடியாக எனது மெயில் க்கு உங்களது படைப்புகள் வருகிறது நல்ல வசதி. நன்றி )

    ReplyDelete
  4. தாமஸ் ரூபன்June 5, 2010 at 11:27 PM

    நல்ல புதிய தகவல்,நன்றி சார்.

    ’யூதர்கள்’ என்போர் யார் ?

    (பாலஸ்தீன நாட்டை சேர்ந்தவர்கள்.) இது சரியான பதிலா என்ற சந்தேகம் உள்ளது. இதை பற்றி சற்று விரிவாக விளக்கவும் சார் . (இஸ்ரேல் நாட்டில் பிறந்து, யூடாயிசம் என்ற மதத்தைப் பின்பற்றுபவர்கள் என்று படித்தாக ஞாபகம் )

    நன்றி.

    ReplyDelete
  5. very good. ஆமா எப்போ release பண்ண போறாங்க? normal DVD read-writer போதுமா? special read-writer வேணுமா?

    ReplyDelete
  6. @ தணிகாசலம்
    சுற்றளவில் எந்த மாற்றமும் செய்யவில்லை அதே சுற்றளவு தான்,
    பதியும் வேகத்தையும் தகவல் பெறும் வேகத்தையும் அதிகரித்துள்ளனர்
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. @ kggouthaman
    மிக்க நன்றி

    ReplyDelete
  8. @ s.n.ganapathi
    மிக்க நன்றி , ஓட்டுபோட பெட்டி வைக்கவில்லை

    ReplyDelete
  9. @ தாமஸ் ரூபன்
    நம் புததகங்களில் பதில் பாலஸ்தீனர்கள் என்று இருக்கிறது.
    யூதர் எனப்படுவோர் இஸ்ரேல் நாட்டில் பிறந்த யூத இன மக்களைக் குறிக்கும். இவர்கள் யூடாயிசம் என்ற மதத்தைப் பின்பற்றுகின்றனர். யூதர்கள் பல ஆண்டுகாலமாக பல நாடுகளிலும் மத, இன ரீதியாக அடக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இன்று, உலகில் மொத்தம் 12 முதல் 14 மில்லியன்கள் வரையில் யூத இன மக்கள் வாழ்வதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
    இவர்களில் 40.5 வீதமானோர் ஐக்கிய அமெரிக்காவிலும் இஸ்ரேலில் 34.4 வீதமானோரும் (2002) வாழ்கிறார்கள். மீதமானோர் உலகின் பல பாகங்களிலும் வழ்ந்து வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

    யூதர் என்னும் சொல் யூதா (Yehudah )என்னும் இடப்பெயரிலிருந்து பிறந்தது. விவிலியக் குறிப்புப் படி, அந்த இடம் யாக்கோபு என்பவரின் பன்னிரு மகன்களில் நான்காம் மகனாகிய யூதா என்பவருக்கும் அவருடைய வழிவந்தோருக்கும் அளிக்கப்பட்டது. யூதா என்னுன் எபிரேயச் சொல்லில் இறை புகழ் என்னும் பொருள் அடங்கியுள்ளது (காண்க: தொடக்கநூல் [ஆதியாகமம்] 29:35).

    தாவீது மன்னர் காலம் வரை யூத மக்களின் நாடு ஒரே மாநிலமாக இருந்தது. பின்னர் வட பகுதி இசுரயேல் (இஸ்ராயேல், இசுரவேல்) என்றும் தென் பகுதி யூதா என்றும் அழைக்கப் பட்டன. யாக்கோபின் நான்காம் மகனாகிய யூதாவின் சிறப்புப் பெயரே இசுரயேல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. @ Ram
    இந்த ஆண்டு இறுதியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் வெளிவராலாம் என்று தெரிகிறது.
    நன்றி

    ReplyDelete
  11. நண்பருக்கு வணக்கம்,

    நல்ல தகவல்.

    யூதர்கள் பற்றிய குறிப்பு சிறப்பு.

    தொடரட்டும் நல்லவர் பணி. . .

    அன்புடன்
    தமிழார்வன்.

    ReplyDelete
  12. @ Ram
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad