யாகூ பயனாளர்கள் அதிகபேரை நம் தளம் சென்றடைய உதவும்
இதைப்பற்றி தான் இந்த பதிவு.
[caption id="attachment_2346" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
கூகுள் பஸ் பிரபலமான அளவிற்க்கு யாகூ பஸ் பிரபலம் ஆகவில்லை
ஆனால் தற்போது அனைத்து தரப்பு மக்களும் யாகூ பஸ் பொத்தானை
தங்கள் இணையதளத்தில் வைத்து அதிக வாசகர்களை பெற்று
வருகின்றனர். பயன்பாடு எல்லாம் கூகுள் பஸ் பொத்தான் செய்யும்
அதே வேலை தான் என்றாலும் அதிகமான வாடிக்கையாளர்களை
கொண்ட யாகூவிலும் நம் தளம் அதிக வாடிக்கையாளர்களை
விரைவாக பெற்று தரும் என்பதாலும் பயன்படுத்துகின்றனர்.
யாகூ பஸ் பொத்தான் நம் பிளாக் அல்ல்து இணையதளத்தில்
எப்படி சேர்க்கலாம் என்று பார்க்கலாம்.
[caption id="attachment_2347" align="aligncenter" width="334" caption="படம் 2"][/caption]
[caption id="attachment_2348" align="aligncenter" width="391" caption="படம் 3"][/caption]
http://buzz.yahoo.com/buttons இந்த தளத்திற்க்கு சென்று
வலது பக்கம் உள்ள " Sign in " என்பதை அழுத்தி யாகூவில்
உள்ள உங்கள் கணக்கை திறந்து கொள்ளவும். அடுத்து படம் 1-ல்
காட்டியபடி வரும் பஸ் பொத்தானில் நமக்கு பிடித்த சரியன அளவுள்ள
பொத்தானை தேர்ந்தெடுத்துக் கொண்டபின் படம் 2-ல் உள்ளது
போல் பொத்தானுக்கு அருகில் இருக்கும் "Get code" என்பதை
அழுத்தவும்.இபோது படம் 3-ல் காட்டியபடி யாகூ பஸ் பொத்தான்
Code தெரியும். அந்த code -செலக்ட் செய்து பின் காப்பி செய்து
நம் தளத்தில் எந்த இடத்தில் வேண்டுமோ அந்த இடத்தில்
பேஸ்ட் செய்து கொள்ளவும். நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவிலும்
இந்தபொத்தானை சேர்ப்பதன் மூலம் அதிக யாகூ வாசகர்களை
நாம் பெற முடியும்.
வின்மணி சிந்தனை
எல்லோரையும் அன்பாக மதிக்கும் பழக்கத்தை
குழந்தைக்கு கற்று கொடுக்க வேண்டும்.அன்பும்
பாசமும் தான் பாரதத்தின் சொத்து.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகிலேயே மிகப்பெரிய பறவை எது ?
2.’ஷேக்ஸ்பியர்’ என்ற பெயரின் பொருள் என்ன ?
3.மரங்களின் மீது கூடுகட்டி வசிக்கும் குரங்கினம் எது ?
4.செவ்வாயில் ஒரு ஆண்டுக்கு எத்தனை நாள் ஆகும் ?
5.இந்தியாவில் எந்த மாநிலத்தில் உப்பு அதிகமாக
தயாரிக்கப்படுகிறது ?
6.சுப்ரீம் கோர்ட் நீதிபதியின் பணி ஒய்வு வயது ?
7.இந்தியா எந்த ஆண்டில் குடியரசு நாடாயிற்று ?
8.உலக புகையிலை ஒழிப்பு தினம் எப்போது ?
9.தேகங்காய் எந்தவகைத் தாவரம் ?
10.சிலண்டிரான் எனப்படுவது யாது ?
பதில்கள்:
1.நெருப்பு கோழி, 2.உலகத்தை அசைத்தவர்,3.கொரில்லா,
4. 697 நாட்கள்,5.குஜராத், 6.65,7.1950, 8.மே 31,
9.கனி நார் தாவரம்,10.வயிற்றுக்குழி
இன்று ஜூன் 11
பெயர் : பெருஞ்சித்திரனார் ,
மறைந்த தேதி : ஜூன் 11, 1995
பாவலரேறு பெருஞ்சித்திரனார் இருபதாம்
நூற்றாண்டின் தமிழ்ப் பாவலர்களுள்
குறிப்பிடத்தக்க பெருமைக்குரியவர்.
தனித்தமிழ்த் தந்தை மறைமலையடிகளார்,
மொழிஞாயிறு பாவாணர் ஆகியோரின் கொள்கை
கற்றவர்களிடமும், மற்றவர்களிடமும் பரவப்
பெருங்காரணமாக விளங்கியவர். பன்முக ஆளுமையைக்
கொண்டவர். உங்களால் இந்திய தேசத்திற்கு பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
சகோதரரே!
ReplyDeleteநல்ல தகவல். உங்கள் தளத்தில் இருக்கும் addtoany பட்டையின் மூலமும் யாஹூவில் பகிரலாம் என நினைக்கிறேன். ஆனால் வாசகருக்கு இதைப் பற்றித் தெரியாத பொது இப்படியும் செய்து பயன் பெறலாம்.
நன்றி
நல்ல தகவல் நன்றி வின்மணி
ReplyDeleteதேவையான பகிர்வு.
ReplyDeleteஇன்று
ReplyDeleteபகுதியில் தாங்கள் தரும் செய்திகள் அருமை..
தொடர்க. வாழ்த்துக்கள்!
@ முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteநன்றி
@ முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteஉங்கள் அன்பும் வாழ்த்தும் நம்மை மேலும் வளர்க்கும்.
மிக்க நன்றி.
நன்றி. நானும் முயற்சி செய்கிறேன்.
ReplyDelete@ Ram
ReplyDeleteநன்றி