சைவசாப்பாட்டு பிரியர்களுக்கான வித்தியாசமான தேடுபொறி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, June 13, 2010

சைவசாப்பாட்டு பிரியர்களுக்கான வித்தியாசமான தேடுபொறி

சைவசாப்பாட்டில் எத்தனை வகை இருக்கிறது என்னவெல்லாம
சைவசாப்பாட்டில் சமைத்து சாப்பிடலாம் என்று தேடும் நமக்காக
ஒரு வித்தியாசமான தேடுபொறி ஒன்று உள்ளது இதைப்பற்றி தான்
இந்த பதிவு.

சைவ உணவான காய்கறி மற்றும் பழங்களில் இருந்து என்னவெல்லாம்
சாப்பிடலாம். குறிப்பாக தேங்காய் , மாங்காய் , வாழைக்காய் போன்ற
காய்கறிகளில் இருந்து வித்தியாசமாக என்ன சமையல் செய்து
சாப்பிடலாம் என்று சொல்வதற்காக ஒரு தேடுபொறி வந்துள்ளது. இதில்
நாம் தேடும் அத்தனை சைவ சமையல்களையும் தேடி பார்க்காலாம்.
எந்த காய்கறி என்பதை மட்டும் கூறினால் போதும் அந்த காய்கறிகளில்
இருந்து என்ன சமையல் எல்லாம் செய்யலாம் என்பது இருக்கும் அத்தனை
இணையதளங்களையும் நம் கண்முன்னே கொண்டுவந்து காட்டுகிறது.

இணையதள முகவரி : http://vegetarianrecipe.us

[caption id="attachment_2375" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

பார்ப்பதற்க்கு எளிமையான முகப்பு பக்கம் ஒரு மில்லியன் உணவு
வகைகள் வரை உள்ள இணையதளங்களை தன்னுடன் கொண்டு எளிதாக
தேடி முடிவுகளை அறிவிக்கிறது.உதாரணமாக நாம் coconut என்று
கொடுத்து தேடினோம். தேங்காய்-ல் இருந்து என்ன சைவ உணவு
செய்யலாம் என்று ஒரு பெரிய பட்டியலை கொடுக்கிறது. படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது.
வின்மணி சிந்தனை
மது அருந்தும் மனிதன் மிருகத்துக்கு சமம். அவன் எவ்வளவு
தான் நல்லவனாக இருந்தாலும் அவனின் அத்தனை புகழையும்
ஒரே நாளில் காணாமல் செய்துவிடும் பெரிய ஆயுதம் மது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இராமகிருஷ்ண பரமஹம்சரால் புகழ்பெற்ற இடம் எது ?
2.1964-ல் ஒலிம்பிக் எவ்விடத்தில் நடைபெற்றது ?
3.கெட்டுப்போன வெண்ணையின் துர்நாற்றத்துக்கு காரணம் என்ன?
4.ஐஸ்லாந்து பாராளுமன்றத்தின் பெயர் என்ன ?
5.’தமிழ் நாட்டின் பெர்னாட்ஷா’ என்று அழைக்கப்பட்டவர் யார்?
6.மலேரியாவை குணப்படுத்தும் மருந்து எது ?
7.சூரியனிடமிருந்து பூமி எவ்வளவு தூரத்தில் இயங்குகிறது ?
8.ஒலியை விட வேகமாக செல்லும் விமானத்தின் பெயர் என்ன?
9.ராக்கெட் என்ஜினை கண்டுபிடித்தவர் யார் ?
10.எந்த நாட்டில் 1001 இரவுகள் என்ற கதைகள் விளங்கியது?

பதில்கள்:
1.பெல்லூர், 2.டோக்கியோ,3. பியூட்டிரிக் அமிலம் ,4.அல்திங்க்,
5.அண்ணாத்துரை,6.குளோரா குயினைன்,7.229 மில்லியன் கி.மீ
8.கன்கார்டு விமானம்,9.கோடார்ட்,10.அரேபியா

இன்று ஜூன் 13 
பெயர் : கிரிகோரி பெரல்மான் ,
பிறந்த தேதி : ஜூன் 13, 1966

செயிண்ட் பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா இல் பிறந்த
கணிதவியலாளர்.கணிதத்தில் மிக முக்கியமாகக்
கருதப்படும் நூறாண்டுகளுக்குமேல்
தீர்க்கவியலாததாக இருந்த போன்காரெ யூகமுடிபு
(Poincare Conjecture)க்கு தீர்வுகண்டவர்,கணித உலகில்
மிகவும் போற்றப்படுகிற ஃபீல்ட்ஸ் மெடல் அளிக்கப்படுவதாக
2006 இல் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதைப்பெற இவர்
மறுத்துவிட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

  1. நல்ல பதிவுங்க திரு வின்மணி.
    சைவ உணவுப் பிரியர்களுக்கு மிகவும்
    பயனான தகவல். ஏன் அசைவப் பிரியர்களும்
    சில வேளைகளில் சைவ உணவை நாடுகிறார்களே.
    அவர்களும் ( என்னைப்போல்) இப்பதிவின் இணையத் தளத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
    மிக்க நன்றி.
    அன்புடன்,
    கு.தணிகாசலம்,
    சுங்கை பட்டாணி, மலேசியா.

    ReplyDelete
  2. @ தணிகாசலம்
    நன்றி

    ReplyDelete
  3. Hi Winmani,
    This is not good. when i search with biriyani in vegetarian search engine. but it is giving the first on the result is "Malabar Mutton Biriyani Recipe"

    BR- Senthil

    ReplyDelete

Post Top Ad