ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, June 14, 2010

ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர் சிறப்பு வீடியோ

டைப்ரைட்டர் எல்லாம் பழசு என்றாலும் இன்றும் சிலர் தட்டச்சுப் பழக
செல்வது டைப்ரைட்டிங் வகுப்புக்கு தான் ஆனால் எளிதாக நம் வீட்டில்
இருந்தபடியே ஐபேட் துணையுடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ல் தட்டச்சு
பழகலாம் இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்.



டைப்ரேட்டிங் வகுப்பு செல்ல நேரம் இல்லை, அதில் பேப்பரை அங்கும்
இங்கும் நகர்த்த போரடிக்கிறது,ரிப்பனில் மை இல்லை லேசாக
விழுகிறது போன்ற எந்த பிரச்சினையும் இல்லாமல் எளிதாக ஐபேட்
உடன் யுஎஸ்பி டைப்ரைட்டர்-ஐ இணைத்து ஐபேட் திரையில்
பார்த்தபடியே நாம் தட்டச்சு பழகலாம். இதற்க்காக கண்டுபிடிக்கப்பட்டு
உள்ள யுஎஸ்பி டைப்ரைட்டரில் எழுத்துக்களை நாம் அழுத்தும் போது
அது யுஎஸ்பி மூலம் ஐபேட்க்கு இன்புட் ஆக கொடுக்கப்படுகிறது.
இதனால் பேப்பர் செலவு மிச்சம். நாம் டைப் செய்வதை சேமித்து
வைக்கலாம்.இதற்க்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த யுஎஸ்பி
டைப்ரைட்டர்-ன் விலை $75 டாலர் மட்டுமே.இந்த ஐபேட் யுஎஸ்பி
டைப்ரைட்டர்  எப்படி இயங்குகிறது என்பதை பற்றிய சிறப்பு
வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.






வின்மணி சிந்தனை
பணத்தால் எளிதில் நண்பர்கள் கிடைப்பார்கள்
ஆனால் அவர்கள் எளிதில் விலகிவிடுவார்கள்.
அன்பால் கிடைக்கும் நண்பர்கள் கடைசிவரை
நம்முடன் இருப்பார்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவின் முதல் பெண் இரயில் ஓட்டுனர் யார் ?
2.திரு.வி.க.வின் சிறப்பு பெயர் என்ன ?
3.தாமஸ் ஆல்வா எடிசன் எந்த வயதில் காலமானார் ?
4.கேளா ஒலி அலைகளை கண்டுபிடித்தவர் யார் ?
5.’ஒன்டே கிரிக்கெட்’ என்ற நூலை எழுதியவர் யார் ?
6.’உயிர் காக்கும் உலோகம்’ என்று அழைக்கப்படுவது எது?
7.’கிரெம்ளின்’ மாளிகை எங்கே உள்ளது ?
8.குயில்பாட்டு நூலை எழுதியவர் யார் ?
9.’மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது ?
10.ஆயிரம் ஏரிகளின் நாடு என்பது எது ?

பதில்கள்:
1.சுரேகா யாதவ், 2.தமிழ்த் தென்றல்,3.84 ,
4.பால்லாஞ்செவின்,5.கபில்தேவ், 6.ரேடியம்,
7.மாஸ்கோ,8.பாரதியார்,9.வாஞ்சிநாதன்,10.பின்லாந்து

இன்று ஜூன் 14 
பெயர் : ஸ்டெபி கிராப் ,
பிறந்த தேதி : ஜூன் 14, 1969

முன்னாள் டென்னிஸ் வீராங்கனை.ஜெர்மனியைச்
சேர்ந்தவரான இவர் டென்னிஸ் வரலாற்றில் மிகக்
குறிப்பிடத்தக்கவர்களுள் ஒருவர். 22 தனிநபர்
கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.
1988 இல்எல்லா(நான்கு) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களையும்
வென்றதோடு ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தையும் வென்றவர்.
டென்னிஸ் தர வரிசையில் 377 வாரங்கள் முதலிடத்திலிருது
சாதனை படைத்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. நண்பருக்கு வணக்கம்,

    பேப்பர் இன்றி, மையும் இன்றி தட்டச்சு இயந்திரம்
    வருகுது பதிவுக்கு வாழ்த்துக்கள்.

    //அன்பால் கிடைக்கும் நண்பர்கள் கடைசிவரை
    நம்முடன் இருப்பார்கள்.//

    உண்மையான வரிகள் நண்பரே...

    திரு.வி.க.வின் சிறப்பு பெயர், மணியாச்சி’ யாரால் புகழ் பெற்றது போன்ற கேள்வி-பதில்கள் தனித்துவம் பெறுகிறது.

    ”ஸ்டெபி கிராப்” பற்றிய தகவல்கள் நன்றாக உள்ளது.

    அன்புடன்
    தமிழார்வன்.

    ReplyDelete
  2. @ தமிழார்வன்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad