மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Monday, June 21, 2010

மாறி வரும் மாற்றத்துக்கு ஏற்ப ரெஸ்யூம் (பயோடேட்டா) உருவாக்கலாம்

ரெஸ்யும் ஒரு மாதங்களில் பழசாகிவிடுகிறது  ஏனென்றால் அடிக்கடி
வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு தகுந்த மாதிரி நம் ரெஸ்யும்
பயோடேட்டாவை மாற்றி அமைப்பதில்லை இதற்க்காக  நம் விருப்பப்படி
பயோடேட்டா உருவாக்க விரும்பும் அனைவருக்கும்உதவக்கூடிய
சிறப்பு பதிவு.



மாற்றம் ஒன்று தான் உலகில் மாறாதது என்பதை நன்கு தெரிந்து
கொண்டு அனைத்து துறைகளிலும் தங்கள் அறிவை மேலும் மேலும்
வளர்த்துக்கொண்டு இன்றைய உலகில் வலம் வரும் அனைவருக்கும்
தங்கள் அறிவை மேம்படுத்தி இருந்தாலும் அதை நம் குறிப்பில் சரியான
இடத்தில் எங்கு சேர்ப்பது மேலாளர்கள் கவரும் வகையில் அதை எப்படி
உருவாக்குவது என்று தெரியாமல் இருக்கும் நமக்கு உதவுவதற்க்காக
ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி :  http://praux.com

நாம் என்ன படித்திருகிறோம் என்பதில் இருந்து எனக்கு என்ன வேலை
கொடுத்தால் சரியாக இருக்கும் என்ற அனைத்து தகவல்களையும்
எப்படி உருவாக்கலாம் என்று கையைப்பிடித்துச் சொல்லிக்கொடுக்கிறது.
நம் விருப்பப்படி நிறைய மாடல்களில் இருந்து எதைப்போல்
இருக்க வேண்டும் என்றும் எளிதாக தேர்ந்தெடுக்கலாம்.அப்படி நாம்
உருவாக்கியதை இமெயில் மூலம் அனுப்பலாம். பிரிண்ட் செய்து
வைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
வின்மணி சிந்தனை
உதவி செய்யும் குணத்தை நம் குழந்தைகளுக்கு
கற்று கொடுக்க வேண்டும். தற்பெருமை பேசுவதை
எக்காலத்திலும் செய்யக்க்கூடாது என்ற எண்ணத்தையும்
இளமையிலே வளர்க்க வேண்டும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.அமெரிக்க சுதந்திர சிலை எந்த நாட்டினரால் பரிசளிக்கப்பட்டது?
2.தனக்கென்று தாய்மொழி இல்லாத நாடு எது ?
3.பூமி சுற்றுவதை நாம் உணர முடியாததற்க்கு காரணம் ?
4.உலகிலேயே அதிக மதிப்புள்ள நாணயத்தை பயன்படுத்துன்
நாடு எது ?
5.2000 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடிய மரம் எது ?
6.கடல் விவசாயம் என்று சிறப்பித்துக்கூறும் தொழில் எது ?
7.மே தினத்தை உழைப்பாளர்கள்தினமாக கொண்டாடிய நாடு எது?
8.பூமியில் இருந்து எவ்வளவுதூரத்தில் விண்வெளி ஆரம்பிக்கிறது?
9.உப்பை விரும்பி சாப்பிடும் காட்டு விலங்கு எது ?
10.தேசியகீதத்தை முதன் முதலில் உருவாக்கிய நாடு எது ?

பதில்கள்:
1.பிரெஞ்சு, 2.ஸ்விட்ஸர்லாந்து,3.புவியீர்ப்பு விசை
4.டாலர்-அமெரிக்கா,5.’பைன்’ மரங்கள்,6.இறால் வளார்ப்பு
7.அமெரிக்கா,8.160 கி.மீ,9.முள்ளம்பன்றி,10.இங்கிலாந்து.

இன்று ஜூன் 21 
பெயர் : சிரின் எபாடி ,
பிறந்த தேதி : ஜூன் 21, 1947

ஈரானிய மனித உரிமைகள் போராளியாவார்.
இவர் ஈரானில் குழந்தைகளின் மனித
உரிமைகளை பாதுகாப்பதற்கான அமைப்பை
நிறுவி செயற்பட்டார். 2003 ஆண்டில்
அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருக்கு இப்பரிசானது
மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக
வழங்கியிருக்கிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

  1. வேலை தேட முயல்பவர்களுக்கு நல்ல பதிவு,...

    சரியான நேரத்தில் இட்டுள்ளீர்கள்,

    - ஜெகதீஸ்வரன்

    ReplyDelete
  2. very nice..... Super
    -brinda

    ReplyDelete
  3. @ ஜெகதீஸ்வரன்
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad