நம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, June 22, 2010

நம் பிளாக்-ல் உள்ள தகவல்களை பாதுகாப்பாக கணினியில் சேமித்து வைக்கலாம்

இன்று நம் வின்மணியின் 200 வது நாள் மற்றும் 200 வது
பதிவும் கூட, முதல் பதிவு ஆரம்பித்த போது இருந்த வேகத்தை
200 மடங்காக உயர்த்திய அன்பு தமிழ் உள்ளங்களுக்கு நன்றி.
எத்தனை பாரட்டுகள், எத்தனை வாழ்த்துக்கள் , எத்தனையோ
அறிவுரைகள்,எத்தனையோ தவறுகள் என அனைத்தையும்
உடனுக்குடன் சுட்டிக் காட்டி நம் வெற்றிக்கு வழிவகுத்த நம்
அனைத்து வலைப்பூ நண்பர்களுக்கும் நன்றி. அனைத்து நாடுகளில்
இருந்தும் தமிழ் நண்பர்கள் போன் மூலமாகவும் இமெயில்
மூலமாகவும் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர் உங்களுக்கும் நன்றி.
மீடியா எக்ஸ்பிரஸ், விகடன் மற்றும் நமக்கு ஆதரவு அளித்து
வரும் அனைத்து பத்திரிகைகளுக்கும் மனமார்ந்த நன்றி.
நம் வலைப்பூ உருவாகக் காரணமாக இருந்த நம் நண்பர்
நரசிம்மனுக்கு என்றும் நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக
இந்த வாய்ப்பை நமக்கு கொடுத்த இறைவனுக்கு கோடான
கோடி நன்றி...நன்றி...நன்றி.



நம் பிளாக்-ல் உள்ள தகவல்களை கணியில் சேமித்து வைக்கலாம்
சில நேரங்களில் நம் பிளாக் பாதிக்கப்பட்டாலோ அல்லது ஏதாவது
மாற்றம் ஏற்பட்டாலோ உடனடியாக நாம் சேமித்து வைத்திருக்கும்
(Back up) தகவல்களை கொண்டு மீண்டும் நம் பிளாக்-ஐ
புதுபிக்கலாம் எப்படி என்பதை பற்றி தான் இந்த பதிவு.

[caption id="attachment_2473" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

[caption id="attachment_2474" align="aligncenter" width="344" caption="படம் 2"][/caption]

[caption id="attachment_2476" align="aligncenter" width="415" caption="படம் 3"][/caption]

http://www.blogger.com என்ற இணையதளத்திற்க்கு சென்று நம்
பிளாக் கணக்கை திறந்து கொள்ளவும் அடுத்து படம் 1-ல் காட்டப்பட்டது
போல் Settings என்பதை அழுத்தி வரும் திரை படம் 2-ல்
காட்டப்பட்டுள்ளது இதில் Basic என்பது தான் தேர்வாகி இருக்கும்
தேர்வாக வில்லை என்றால் Basic என்பதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து பட்ம் 3-ல் காட்டப்பட்டது போல் Export blog என்பதை
என்பதை அழுத்தவும்.அடுத்து வரும் திரை படம் 3-ல் காட்டப்பட்டுள்ளது
இதில் Download blog என்ற பொத்தானை அழுத்தி நம் பிளாக்-ஐ
(பேக்கப்) சேமித்துக் கொள்ளலாம்.

[caption id="attachment_2477" align="aligncenter" width="450" caption="படம் 4"][/caption]

[caption id="attachment_2478" align="aligncenter" width="450" caption="படம் 5"][/caption]

எதாவது காரணங்களுக்காவோ அல்லது யாராவது நம் பிளாக் தகவல்களை
திருடி மாற்றினாலும் நாம் எடுத்து வைத்திருக்கும் பேக்கப் வசதி மூலம்
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர படம் 3-ல் உள்ள import blog
என்பதை அழுத்தவும் அடுத்து வரும் திரை படம் 5-ல்
காட்டப்பட்டுள்ளது இதில் இருக்கும் Choose என்ற பொத்தானை
அழுத்தி நாம் கணினியில் சேமித்து வைத்திருக்கும் (பேக்கப்)
கோப்பை தேர்வு செய்து கொள்ளவும் இனி நம் பிளாக் முன்பு
இருந்தது போல் மாறிவிடும்.
வின்மணி சிந்தனை
பிறருக்கு செய்யும் உதவி இறைவனுக்கு நாம் செய்யும் நேரடி
உதவியாகும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.எந்த தேதியில் சுபாஸ்சந்திரபோஸ் மறைந்தார் ?
2.உலக சர்ச்சுகள் கவுன்சில் எப்பொழுது அமைக்கப்பட்டது ?
3.சோதனை குழாய் மூலம் பிறந்த முதல் குழந்தையின் பெயர்?
4.இந்திய தபால் துறை எப்போது தொடங்கப்பட்டது ?
5.ரப்பர் டயரை கண்டிபிடித்தவர் யார் ?
6.முதன் முதலாக விண்வெளி பயணம் மேற்கொண்ட நாடு எது?
7.கூடைப்பந்து விலையாட்டு எப்போது தொடங்கப்பட்டது ?
8.குறுக்க்கெழுத்து போட்டி முதன் முதலாக எப்போது தோன்றியது?
9.எட்னா என்பது என்ன  ?
10.ஸ்குட்டரை கண்டுபிடித்தவர் யார் ?

பதில்கள்:
1.17-08-1954, 2.23-08-1948,3.லூயிஸ் ஜான் பிரபு
4.1766,5.சார்லஸ் குட் இயர்,6.ரஷ்யா
7.1891,8.1913,9.எரிமலை,10.கிரவில் பிராட்ஷா.

இன்று ஜூன் 22 
அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன்
என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ
கலிலி ரோமின் அரசுப்படைகளின் வற்புறுத்தலின்
பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

17 comments:

  1. தாமஸ் ரூபன்June 22, 2010 at 8:17 PM

    200வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
    பல பயனுள்ள பதிவுகளை தரும் உங்களுக்கு நன்றிகள் சார் தொடருங்கள்.....

    ReplyDelete
  2. வாழ்த்துகள் விண்மனி

    மேலும் பல பல புதிய தொழில்நுட்ப பதிவுகளையும் மற்றும் பயனுள்ள தகவல்களை அளிக்கவும்.

    பூங்கொத்துடன்

    ♠புதுவை சிவா♠

    ReplyDelete
  3. அன்புடன் நண்பருக்கு வணக்கம் எட்ன என்பது எரிமலை என கேள்விபட்டிருக்கிறேன் சரியா தவறா??

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்... உங்கள் பணி தொடரட்டும்...

    ReplyDelete
  5. அருமையான விசயம்.

    பதிவுத் திருடர்களிடமிருந்து வலைப்பூவை காப்பாற்ற சில வழிகளை கூறுங்கள்.

    - ஜெகதீஸ்வரன்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் சார்!

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் விண்மணி. மேலும் தொடர்க உங்கள் சேவையை...

    ReplyDelete
  9. @ தாமஸ் ரூபன்
    நன்றி

    ReplyDelete
  10. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  11. @ s.n.ganapathi
    சரிதான் நண்பரே திருத்திக்கொள்கிறோம்

    ReplyDelete
  12. happy to you work thousand year for ur work

    ReplyDelete
  13. @ Ramakrishnan
    மிக்க நன்றி

    ReplyDelete
  14. வாழ்த்துகள் வின்மணி. 200-வது பதிவை எட்டி விட்டீர்கள். இருந்தும் சற்றும் புதுமை குறையாமல் மேலும் மேலும் மெருகூட்டி படைக்கிறீர்கள். உங்களின் பொன்மொழி எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடந்த ஒருமாதமாக தமிழக சுற்றுலாவில் இருந்ததால் காலத்தோடு வாழ்த்த முடியாமற் போய்விட்டது. வாழ்க. வளரட்டும் உங்கள் தொண்டு. அன்புடன், தணிகாசலம்.

    ReplyDelete

Post Top Ad