பிடிக்கவில்லையா உங்களுக்கென்று புதிதாக ஒரு வழி இருக்கிறது
எந்த வலைப்பூவிலும் விளம்பரம் இல்லாமல் பார்க்கலாம் இதைப்
பற்றி தான் இந்த பதிவு.
வலைப்பூக்களில் வரும் விளம்பரம் நம்மை வெறுப்படைய
செய்கின்றதா இதற்க்காக நாம் எந்த மென்பொருளும் இன்ஸ்டால்
செய்ய வேண்டாம். ஆன்லைன் -ல் நாம் எந்த தளத்தை விளம்பரம்
இல்லாமல் பார்க்க வேண்டுமோ அந்த இணையதள முகவரியை
மட்டும் இங்கு கொடுத்தால் போதும் எல்லா உலாவிகளிலும்
சரியாக தெரியும்.
இணையதள முகவரி :http://adout.org
[caption id="attachment_2486" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]
இந்த தளத்திற்க்கு சென்று நாம் விளம்பரம் இல்லாமல் பார்க்க
விரும்பும் இணையதள முகவரியை படம் 1-ல் இருப்பது போல்
கொடுத்தால் போதும். அடுத்த பக்கத்தில் நாம் கொடுத்த தளத்தின்
விளம்பரங்களை நீக்கிவிட்டு நமக்கு காட்டும்.பிளாஷ் விளம்பரம்
டெக்ஸ்ட் விளம்பரம், பேனர் போன்ற எல்லா விளம்பரங்களையும்
நீக்கி நமக்கு காட்டும். இந்த தளத்தை நாம் பயன்படுத்த எந்த
விதமான பயனாளர் கணக்கும் உருவாக்க தேவையில்லை. சில
நேரங்களில் விளம்பரம் இல்லாமல் இணையதளத்தை பார்க்க
விரும்புபவர்கள் இந்த தளத்தைப் பயன்படுத்தலாம்.
வின்மணி சிந்தனை
திட்டமிடாத எந்த செயலும் வெற்றியை தருவதில்லை.
முடிந்த வரை எல்லா செயலிலும் திட்டமிடப்பழகி
கொள்ளுங்கள்
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஈரானின் பழைய பெயர் என்ன ?
2.சோகத்தை குறிக்கும் ராகம் எது ?
3.யானை தினமும் எவ்வளவு தண்ணீர் அருந்தும் ?
4.நீரில் எந்த அளவு ஆக்சிஸன் உள்ளது ?
5.ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன ?
6.அமெரிக்காவில் அடிமைமுறையை ஒழித்தவர் ?
7.நுரையிரலை மூடியுள்ள சவ்வின் பெயர் என்ன?
8.அகத்திக்கீரையில் உள்ள வைட்டமின் எது ?
9.உலகிலுள்ள இயற்கை பிரிவுகள் எத்தனை ?
10.6.வண்டல் மண் எதன் படிவுகளால் ஏற்படுகிறது ?
பதில்கள்:
1.பாரசீகம், 2.முகாரி ,3.200 லிட்டர்
4.88.9%,5.6 கி.மீ,6.ஆபிரகாம் லிங்கன்
7.புளுரா,8.வைட்டமின் ஏ,9.9 பிரிவுகள்,10.ஆறுகள்.
இன்று ஜூன் 23
பெயர் : வி. வி. கிரி ,
மறைந்த தேதி : ஜூன் 23, 1980
வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி
வேங்கட கிரி இந்திய குடியரசின் நான்காவது
ஜனாதிபதி ஆவார்.இந்தியாவின் தலைசிறந்த
விருதான,பாரத ரத்னாவை 1975-ஆம்
ஆண்டு பெற்றார் கிரி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
கேள்வி 9 க்கு பதில் என்ன?
ReplyDeleteSOMETIMES IT IS BORING TO SEE A WEBSITE WITHOUT ADS.
ReplyDeletesuper padivu. this works with even banned/blocked site are opening in gulf countries.
ReplyDeleteReally great contribution
@ SANKARLAL
ReplyDeleteமிக்க நன்றி