பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, June 8, 2010

பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரின் அறிவு பசி போக்கும் இடம்.

அனைத்து தரப்பு மாணவர்களுக்கும் அறிவை மேலும் வளர்க்கும்
விதம் பள்ளி பாடம் முதல் தேர்வுபாடம் வரை விபரமாகவும்
விரிவாகவும் தெரிந்து கொள்ளலாம் இதைப்பற்றிதான் இந்த பதிவு.



பள்ளி குழந்தைகளுக்கும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும்
மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நுழைவுத்தேர்வுக்கு
தயாராகும் அனைவருக்கும் உதவுவதற்க்காக ஒரு இணையதளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.sparknotes.com



படிப்பில் சற்று மந்தமாக இருக்கும் குழந்தைகள் தங்கள்
அறிவை மட்டுமல்ல திறமையையும் , தேர்வுக்கு எப்படி
தயார்ஆக வேண்டும் என்பதில் இருந்து எப்படி ஒவ்வொரு
பாடங்களையும் எளிதாக எப்படி படிக்கலாம். போட்டி தேர்வுக்கு
எப்படி செல்லவேண்டும் என்பது வரை அத்தனையும் இந்த
ஒரே தளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.  GRE பரீட்சை
எழுத செல்வதற்க்கு முன் இங்கு இருக்கும் மாடல் தேர்வு
எழுதி பார்க்கலாம்.ஆங்கில இலக்கணத்தில் சந்தேகமா ,
கணிதத்தில் சந்தேகமா அனைத்துக்கும் தீர்வு இனி இந்த
ஒரே இடத்தில் உங்களுக்கு கிடைக்கும்.இன்னும் பலவிதமான
சேவைகளை இலவசமாக வழங்குகிறது. இந்த தளத்தில் நீங்கள்
உங்களுக்கென்று ஒரு இலவச கணக்கை உருவாக்கிக்கொண்டு
தொடங்கலாம்.
வின்மணி சிந்தனை
அடுத்தவரைப் பற்றி குறை கூறுபவர்கள் முதலில்
தன்னை யாராவது குறை கூறினால் நம் மனம் எவ்வளவு
துன்பப்படுமோ அதே போல் மற்றவர் மனமும் என்ற
எண்ணம் வந்தால் குறை கூற மாட்டார்கள்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.ஆங்கில அகராதியை உருவாக்கியவர் யார் ?
2.’நியான் வாயு’ எப்படி தயாரிக்கப்படுகிறது ?
3.சனிக்கிரகத்தின் நிறம் என்ன ?
4.பல்லிக்கு முதுகெலும்பு உண்டா ?
5.’மாண்டவி’ என்பவள் யார் ?
6.மூளையில் மின் அதிர்வுகளை பதிவு செய்ய உதவும்
கருவி எது ?
7.2000 ஆம் ஆண்டின் உலக அலகி யார் ?   
8.ஜீன் மாற்றங்களின் மூலம் கண்டிப்பாக தடுக்க கூடிய நோய்?
9.இங்பேனாவை கண்டுபிடித்தவர் யார் ?
10.’ரோபோட்’ என்னும் பெயர் வைத்தவர் யார்?

பதில்கள்:
1.டாக்டர் ஜான்சன்,2.காற்றின் திரவ நிலையிலிருந்து,3.மஞ்சள்,
4.ஆம் உண்டு, 5.பரதனின் மனைவி, 6.ஈஈஜி,7.லாரா தத்தா,
8.நீரிழிவு, 9.லூயி பாஸ்டர்,10.காரெல் கேபெக்

இன்று ஜுன் 8 
பெயர் : பிராங்க் லாய்டு ரைட் ,
பிறந்த தேதி : ஜூன் 8 , 1867

இருபதாம் நூற்றாண்டின் முதற் பாதியில்
அமெரிக்காவின் முன்னணிக் கட்டிடக்
கலைஞராக விளங்கியவர். இன்றுவரை
அமெரிக்காவின் மிகப் புகழ்பெற்ற கட்டிடக்
கலைஞர் இவரே என்று இலகுவில் சொல்லிவிடலாம்.
இன்றும் பொதுமக்களால் மிக நன்றாக அறியப்படுபவரும் இவரே.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. தாமஸ் ரூபன்June 9, 2010 at 1:04 AM

    பயனுள்ள பதிவு நன்றி .

    //7.2000 ஆம் ஆண்டின் உலக அலகி யார் ?
    லாரா தத்தா//

    2000 ஆம் ஆண்டின் பிரபஞ்ச அழகி(miss universe)
    லாரா தத்தா

    2000 ஆம் ஆண்டின் உலக அழகி (miss world)
    பிரியங்கா சோப்ரா

    what is the difference between miss world and miss universe?

    ReplyDelete
  2. @ தாமஸ் ரூபன்
    இரண்டும் ஒன்று தான் ஆனால் நடத்தும் பிராண்ட் வெவ்வெறு
    Miss Universe is the beautiful girl from all planets
    Miss World is the beautiful girl on earth only

    ReplyDelete
  3. it is very nice...it is mst useful to everyone...keep it up....

    ReplyDelete
  4. @ abbaskhan

    மிக்க நன்றி

    ReplyDelete
  5. i want impart 10th onemark questions

    ReplyDelete

Post Top Ad