மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட் - Winmani

winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, June 6, 2010

மாடுகளை மகிழ்விக்க எல்ஈடி LED டிவி ஸ்பெஷல் ரிபோர்ட்

மாடுகளை மகிழ்வித்து அதனிடம் இருந்த அதிக அளவு பாலைப்
பெறுவதற்க்காக புதிதாக LED ஒன்று வந்துள்ளது இதைப்பற்றிய
ஒரு சிறப்பு பதிவு.

cowled1மாடுகளை அடர்ந்த புல் வெளி நிறைந்த காட்டுக்குள் கொண்டு சென்று
மேயவிட்டால் தான் அதை மகிழ்விக்க முடியும் என்பதெல்லாம் இனி
தேவையில்லை சாதாரனமாக நாம் ஒரே இடத்தில் கட்டிப்போட்டுக்
கொண்டே அதன் மனதை மகிழ்ச்சியாக மாற்றி அதனிடம் இருந்து
அதிக அளவு பாலை பெறமுடியும் என்பதை ரஷ்ய விஞ்ஞானிகள்
நிரூபித்துள்ளனர்.

cowled3cowled4cowled5

cowled2

மாடுகளை அடைத்திருக்கும் தொழுவத்தில் புதிதாக LED டிவி
ஒன்றை சரியான கோண்த்தில் வைத்து அதை மாடு பார்க்கும்
வண்ணம் வடிவமைத்துள்ளனர். அந்த LED டிவியில் எப்போதும்
பச்சை பசேல் என்று வளர்ந்திருக்கும் புல்வெளிகளை காட்டுகின்றனர்
மாடுகளும் அதைப் பார்த்துக்கொண்டே அங்கு இருக்கும் உணவை
சாப்பிடுகிறது. மாடுகள் எங்கும் கொண்டு செல்லாமல் இருக்கும்
இடத்திலிருந்தே புல் வெளிக்கு சென்றது போல் ஒரு உணர்வு
ஏற்படுவதால் அதிக அளவு பால் கொடுக்கிறது. இந்த LED டிவியில்
தொடர்ச்சியாக எப்போதும் புல்வெளி நிறைந்த காட்சிகள் வந்து
கொண்டே இருக்கும். ஒரு மாட்டு தொழுவத்திற்கு மொத்தமாக
இவர்களே வந்து LED டிவியை சரியான கோனத்தில் அமைத்து
கொடுக்கின்றனர். இதைப் பற்றிய சிறப்பு படங்களையும் இத்துடன்
இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை
ஆயிரம் பொன் பணம் கொடுத்தாலும் , தனக்கு துரோகம்
செய்தாலும் தான் கற்ற கலையை அடுத்தவருக்கு எதிராக
பயன்படுத்தாதவன் தான் வல்லவன்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.’ஐங்கடல் நாடு’ என்று அழைக்கப்படுவது எது ?
2.தமிழில் முதல் பேசும் படம் எது ?
3.ஒரு நிமிடத்திற்க்கு 200 முறை சுவாசிக்கும் உயிரினம் எது ?
4.சரிஸ்கா புலி பூங்கா எங்கே உள்ளது ?
5.அக்பர் பின்பற்றிய ஷெர்ஷாவின் சீர்திருத்தம் எது ?
6.இந்தியாவின் முதல் பெண் குதிரைப் பந்தய வீராங்கனை யார்?
7.வாத்து இனங்கள் எத்தனை ?
8.’வால்ட் டிஸ்னி’எத்தனை ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளது?
9.முதன்முதலில் கட்டுமான கோவில்களை கட்டிய மன்னர் யார்?
10.முதன்முதலாக கேள்விக்குறி பயன்படுத்தப்பட்ட மொழி எது?

பதில்கள்:
1.ஆசியா, 2. காளிதாஸ், 3.எலி, 4.மத்தியப்பிரதேசம்,
5.நில வருவாய் சீர்திருத்தம்,6.ஆயிஷா காப்டன்,7.180,
8. 32 , 9.ராஜசிம்மன்,10.லத்தீன் மொழி

இன்று ஜூன் 6 puskin
பெயர் : அலெக்சாண்டர் புஷ்கின் ,
பிறந்த தேதி : ஜூன் 6, 1799

ரஷ்ய மொழியில் காதல் காவியங்கள்
படைத்த ஒரு சிறந்த எழுத்தாளர். இவர் நவீன
ரஷ்ய இலக்கியத்தின் நிறுவனராகவும்
மிகப்பெரிய கவிஞராகவும் பலராலும்
கருதப்படுகிறார்.புஸ்கின் தனது கவிதைகளிலும் நாடகங்களிலும்
உரைநடையைக் கையாள்வதில் முன்னோடியாகவிருந்தார்.


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்pdf

15 comments:

  1. blank

    திரு வின்மணி,

    உங்களிடம் இரண்டு கேள்விகள்.
    1. எல்லாருக்கும் புரியும் எளிய தமிழில் சிந்தனையில் இனிய கூற்றுகளைத் தருகிறீர்களே எங்கிருந்து பெற்கிறீர்கள் ?

    2. நான் அனுப்பும் மறுமொழியில் கணினியில் காட்டப்படும் நேரம்
    எங்கள் உள்ளூர் நேரமும் மாறுபடுகிறதே ஏன்? இப்போது எங்கள்
    உள்ளூர் நேரம் 9.46am. என் கணினியின் tray-ல் அந்த நேரம்தான்
    உள்ளது. ஆனால் மறுமொழியில் மேலே நான் அனுப்பிய நேரம்
    மாறுபடுகிறதே ?

    ReplyDelete
  2. blank

    அடப்பாவிகளா! எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க...

    ReplyDelete
  3. blank

    @ தணிகாசலம்
    அன்பு நண்பருக்கு பதில் :

    1. இறைவன் அருளால் யோசித்து எழுதுவது தான்.

    2. நம் நேரவலயம் (நேரம்) UTC+0 என்று இருப்பதால் தான்
    உள்ளூர் நேரமும் நம் தளத்தில் காட்டப்படும் நேரமும் மாற்றிக்
    காட்டுகிறது.

    மிக்க நன்றி

    ReplyDelete
  4. blank

    @ சரவணகுமரன்
    நம்ம நாட்டுகாரங்க கிட்ட சொன்னா நம்மை பைத்தியக்காரன்னு வெளிளே சொல்லியிருவான்.
    நன்றி

    ReplyDelete
  5. blank

    வெளிநாடுகளில் கால்நடைகளுக்கு நடக்கும் அத்துமீறல்களில் இதுவும் ஒன்று. வளர்ந்து வரும் தொழில்நுட்பம் மனிதத்தன்மையை சாகடித்துக்கொடிருக்கிறது.

    ReplyDelete
  6. blank

    @ kirubhakaran
    கால்நடைகளுக்கு மட்டுமல்ல மனிதர்களுக்கும் உடல்
    உழைப்பை குறைத்து இயந்திரத்தனமான வாழ்க்கையை
    நம்மிடம் புகுத்துகிறது என்பது மறைக்க முடியான உண்மை தான்.
    நன்றி

    ReplyDelete
  7. blank
    தமிழன்June 7, 2010 at 5:41 AM

    கையில ரிமோட் கண்றோலர குடுத்தா இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும்.

    ReplyDelete
  8. blank

    அன்புடன் வணக்கம் நம்ம நாட்டு மாடுகளுக்கு இது மாதிரி டிவி வேண்டாம் சும்மா அதுக பார்கிற மாதிரி இயற்கை ஓவியம் ஒட்டி பாட்டு போட்டால் நல்ல பால் கறக்கும்...முன்னால் கிருஷ்ணன் குழல் ஊதி பசு மாடுகள் பால் கறந்தது இது இன்றய நாகரீகம்.

    ReplyDelete
  9. blank

    s.n.ganapathi
    மிக சரி , எங்கியோ போயிட்டிங்க... :)
    நன்றி

    ReplyDelete
  10. blank

    @ தமிழன்
    நல்லாதான் இருக்கும்.
    நன்றி

    ReplyDelete
  11. blank

    @ தமிழன்
    நல்லாதான் இருக்கும்.
    -நன்றி

    ReplyDelete
  12. blank

    வைக்கோல் கன்றுக்குட்டி வைத்து பால் கறப்பவர்களாயிற்றே நாம்!

    உங்கள் வலைப்பக்கத்தை தொடர்ந்து படித்து, பயன்பெற்று வருகிறேன்.. சேவையினைத் தொடரவும்... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. blank

    @ Jafar
    மிக்க நன்றி

    ReplyDelete
  14. blank

    அனைத்தும் அறிந்தவனும் பேச மாட்டான் ஒன்றுமே
    தெரியாதவனும் பேச மாட்டான் ஆனால் அரை குறை
    தெரிந்தவன் பேசாமல் இருக்க மாட்டான்.

    ReplyDelete
  15. blank

Post Top Ad