நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, July 1, 2010

நம் கணினி திரைக்கு 4 இலட்சம் அழகான கண்ணைக்கவரும் வால்பேப்பர்

கணினியின் திரையை அழகுபடுத்த யார் தான் விரும்புவதில்லை
அந்த வகையில் அழகான தரமிகுந்த 4 இலட்சத்திற்க்கும் மேலான
வால்பேப்பரை இலவசமாக தரவிரக்கிக்கொள்ளலாம் எப்படி என்பதைப்
பற்றிதான் இந்த பதிவு.



வால்பேப்பர் என்றால் சட்டென்று ஞாபகம் வருவது கணினியில் நாம்
வைத்திருக்கும் நமக்கு பிடித்த நடிகர், நடிகைகள், நம் புகைப்படம்
அல்லது இயற்கையான மரம் செடி கொடிகள் இதை தான் நாம்
வால்பேப்பராக வைத்திருப்போம். இதைபோன்று வால்பேப்பர்களை
கொடுக்க பல இணையதளங்கள் இருந்தாலும் சில தளங்களில்
சென்று வால்பேப்பர் தரவிரக்கும் போது நம் கணினி வைரஸால்
தாக்கப்படலாம் அதுமட்டுமல்ல படங்களின் விளம்பரம் தான்
பெரிதாக இருக்கும் அதோடு படத்தில் தரமும் (குவாலிட்டி)
குறைவாகத்தான் இருக்கும் இந்த அனைத்து பிரச்சினைகளுக்கும்
தீர்வாக நமக்கு ஒரு இணையதளம் வந்துள்ளது. இந்த தளத்திற்க்குச்
சென்று நாம் விரும்பும் வால்பேப்பரை இலவசமாக தரவிரக்கிக்
கொள்ளலாம் எல்லாமே எளிமையாக இருக்கிறது.

இணையதள முகவரி : http://wallbase.net



படத்தின் தரத்தையும் நாம் விரும்பும் வண்ணம் தரவிரக்கிக்
கொள்ளலாம். பயன்படுத்திப் பாருங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
அடுத்தவரை பற்றி குறைகூறும் மனிதர்களிடம் நாம்
ஜாக்கிரதையாக பழக வேண்டும்.கூடுமானவரை
தவிர்ப்பது நல்லது.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.சீனாவின் மிகப்பெரிய ஆறு எது ?
2.உலகிலேயே மிகப்பெரிய ரெயில்வே பயணி விடுதி எங்குள்ளது ?
3.ஒரு கொசு எவ்வளவு இரத்தத்தை உறிஞ்சும் ?
4.சீனாவின் வள்ளுவர் என்று அழைக்க்ப்படுபவர் யார் ?
5.குழாய்கள் மூலம் வெந்நீர் சப்ளை செய்யப்படும் நாடு எது ?
6.பெருங்காயம் எந்த செடியில் இருந்து எடுக்கப்படுகிறது ?  
7.தவளைகள் எதன் மூலம் கேட்கின்றனர் ?
8.எப்போதுமே விரியாத மலர் எது ?
9.ஒரு டன் கணிப்பொருளை சுத்தப்படுத்த எவ்வளவு தண்ணீர்
 தேவை ?
10.இயற்கையாக கிடைக்கும் கிருமிநாசினி எது ?

பதில்கள்:
1.நான்ஜிங், 2.பீகிங் ஸ்டேசன்,3.தன் எடையைப்போன்று
 இருமடங்கு,4.கன்ஃப்சியஸ்,5.பின்லாந்து, 6.பெரூலா,
7.கண்களால் கேட்கின்றன, 8.அத்திமலர்,9.3,000 லிட்டர்,
10.சூரிய ஒளிக்கதிர்.

இன்று ஜூன் 30   
பெயர் : தாதாபாய் நௌரோஜி ,
மறைந்த தேதி : ஜூன் 30, 1917

இந்தியாவின் அரசியல் தலைவர்களில்
ஒருவராகத் திகழ்ந்தவர்.ஐக்கிய இராச்சியத்தின்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.இவரது
பிரிட்டிஷ் கொடுங்கோல் ஆட்சியும், இந்தியாவின்
வறுமையும் என்கிற நூல் பிரித்தானிய அரசின்
கொடுங்கோன்மையைப் பற்றிய உண்மைகளை
உலகிற்கு உணர்த்தியது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

16 comments:

  1. romba nalla iruku.................

    ReplyDelete
  2. தாங்கள் குறிப்பிட்ட இணைப்பு இவ்வாறு திறக்கிறது..

    ஏனிந்த சிக்கல்?
    A Database Error Occurred
    Local authorities has been alarmed!

    ReplyDelete
  3. @ chokkar
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. @ Suresh
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ முனைவர்.இரா.குணசீலன்
    எந்த உலாவியில் வருகிறது நண்பரே...

    ReplyDelete
  6. @ முனைவர்.இரா.குணசீலன்
    மிக்க நன்றி

    ReplyDelete
  7. இந்த இணையதளத்தில் ஒரே நேரத்தில் நேற்று மட்டும் அதிகவாசர்கள் சென்றதால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் இப்போது சரியாகிவிட்டது.
    நன்றி நண்பரே...

    ReplyDelete
  8. sir, very useful
    thank u very much

    ReplyDelete
  9. @ shareef
    மிக்க நன்றி

    ReplyDelete
  10. மிகவும் அழகான பதிவு

    ReplyDelete
  11. உங்களுக்கு மட்டும் எங்கேயா கிடைக்குது, ரூம் போட்டு தேடுவிங்களோ !!!

    ReplyDelete
  12. தனுசுராசிJuly 8, 2010 at 7:37 AM

    தீபாகரன், நானும் அதை தான் யோசிக்கிறேன்... நாம நாள் பூரா வால்பேப்பர் தேடினாலும் இந்த மாதிரி வளத்தலம் நமக்கு கிடைக்க மாட்டேங்குது. இதை கூகிள்லாரிடம் குறையாக வைக்க வேண்டும்...

    ReplyDelete

Post Top Ad