இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம் - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, July 18, 2010

இந்தியாவில் மொபைல் துறையில் களம் இறங்கும் மிகப்பெரிய கணினி நிறுவனம்

மடிக்கணினி (லேப்டாப்)  என்ற வார்த்தையை கேட்டதும் நமக்கு
உடனடியாக ஞாபகம் வருவது DELL லேப்டாப் தான் அந்த
அளவிற்கு தன் சேவையால் அனைத்து தரப்பு மக்களையும்
ஈர்த்திருக்கும் இந்த நிறுவனம் இந்தியாவில் மொபைல் துறையில்
களம் இறங்குகிறது இதைப்பற்றித் தான் இந்தப் பதிவு.





தொழில்நுட்பத்தின் உச்சகட்ட காலம் என்று தான் இதை சொல்ல
வேண்டும். டெஸ்க்டாப் கணினி மாறி லேப்டாப் கணினியையும்
காணாமல் செய்யும் நோக்கில் இப்போது பிளாக்பெரி என்று
சொல்லக்கூடிய அலைபேசி அனைத்து தரப்பு மக்களையும்
ஈர்த்து வருகிறது. இன்னும் நாங்கள் லேப்டாப் தான் விற்று
கொண்டிருப்போம் என்று சொல்லாமல் காலத்தின் மாற்றத்திற்கு
தகுந்தபடி மிகப்பெரிய நிறுவனமாக டெல் நிறுவனம் மொபைல்
துறையில் கால் வைக்க இருக்கிறது. இனி லேப்டாப்
பயன்படுத்துபவர்கள் குறைவாகத்தான் இருக்கப்போகிறார்கள்
என்பதை நன்கு அறிந்து தான் இந்த முயற்சியில் இறங்கியுள்ள்னர்.



மொபைல் உருவாக்க வேண்டும் அதையும் இந்தியாவில் தான்
முதலில் தொடங்க வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளனர்.
அதிகமான மக்கள் மொபைல் பயன்படுத்தும் நாட்டில் இந்தியாவும்
முன்னனி இடத்தில் இருக்கிறது என்ற காரணத்தினாலும் இவர்கள்
இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளனர்.ஆண்டிட்ராய்டு தொழில்நுட்பத்துடன்
பிளாக்பெரி போன்ற அலைபேசியை உருவாக்கி இருக்கின்றனர்,
விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங் சிஸ்டம் இதில் துனைபுரியும் என்றும்
இதற்கு DELL Lightning என்ற பெயரும் வைத்துள்ளனர்.
யூடியுப் ,கூகுள் மேப்ஸ்,கூகுள் டாக், ஜீமெயில் போன்ற பல
வசதிகளுடன் விரைவில் டெல் நிறுவனத்திடம் இருந்து அவர்கள்
உருவாக்கி இருக்கும் மொபைல் பற்றிய முழுதகவல்களும்
வெளிவரும் என்று எதிர்பார்க்கலாம்.
வின்மணி சிந்தனை
அதிகம் படித்தவன் அறிவாளி அல்ல,அதிக ஞானம் உள்ளவன்
தான் அறிவாளி. அனுபவம் மூலமும் அறிவாளி ஆகலாம்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.உலகின் முதல் நகரங்கள் எப்போது தோன்றியது ?
2.எழுத்துக்கலையை அறிமுகப்படுத்தியவர்கள் யார் ?
3.எவரெஸ்ட் சிகரத்தை அதிகத்தடவை ஏறியவர் யார் ?
4.இரண்டு தேசியக்கொடிகள் உபயோகத்தில் உள்ள நாடு எது ?
5.5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள
 கிரகம்(கோள்)எது?
6.உலகின் ஏழுமலை நகரம் எது ?
7.சிங்கங்களின் கர்ப்பகாலம் எத்தனை மாதம் ?
8.பேசும் மொழி, எழுதும் மொழி வேறு வேறாக உள்ள
மொழி எது?
9.நம் நாட்டின் முதலாவது வங்கி எது ?
10.இந்தியாவில் மே தினம் முதன் முதலாக எங்கு
கொண்டாடப்பட்டது ?

பதில்கள்:
1.கி.மு.3500-ல், 2.சுமேரியர்கள்,3.அங்கரிடா ஷெர்பா,
4.ஆப்கானிஸ்தான்,5.ஜூபிடர் கிரகம்,6.ரோம் நகரம்-இத்தாலி,
7.30-36 மாதங்கள்,8.சீன மொழி,9.1770 -ஹிந்துஸ்தான் வங்கி
10.பம்பாயில்.

இன்று ஜூலை 17  
பெயர் : பாரதிராஜா,
பிறந்ததேதி : ஜூலை 17, 1941

தமிழ்த் திரைப்பட இயக்குநர்.அரங்கத்திற்குள்
எடுக்கப்பட்டு வந்த தமிழ் திரைப்படங்களை
வெளிப்புற படப்பிடிப்பு பகுதிகளுக்கு கொண்டு
சென்றவர் என்ற பெருமைக்கு உரியவர்.
பெரும்பாலும் நாட்டுப்புறக் கதைகளை உணர்வுப் பூர்வமாக
படம் பிடிப்பவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன்
இணைந்து மறக்க இயலாத இனிய பாடல்களைத் தந்தவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. .5 மணி நேரம் பகல் 5 மணி நேரம் இரவாக அமைந்துள்ள
    கிரகம்(கோள்)எது?

    இந்த கேள்விக்கு பதில் இல்லை

    ReplyDelete
  2. @ c.m.saleem
    பதில் போட்டாச்சு, மிக்க நன்றி .

    ReplyDelete
  3. இந்த mobile-ஐ பார்த்தால் iPhone + Corby -யின் கலவையாக உள்ளதே...

    ReplyDelete
  4. @ தமிழ்ராம்
    சரிதான் பார்க்க அப்படித் தான் இருக்கிறது.
    நன்றி

    ReplyDelete
  5. புதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து pls req to u

    மெயிலில் இருந்து மொபைல்க்கு செய்தி வரவைப்பது எப்படி?

    Rgds
    samy

    ReplyDelete
  6. இதன் முக்கிய பயன்பாடு மற்றும் வித்தியாசம் : இது மொபைல் மற்றும் நோட் புக் என்ற லேப்டாப் இரண்டும் இணைந்த பயன்பாட்டை கொண்டுள்ளது மற்றும் ஸ்க்ரீன் அளவு.
    இப்போது லேப்டாப் இலிருந்து தொலைபேசுவது முடியாது ( ஹெட் போன் மற்றும் சில உபகரணங்கள் தேவை). மற்றும் கை பேசியில் ஸ்க்ரீன் அளவில் தொடர்ந்து MS ஆபீஸ் / ப்ரோக்ராம்களை பார்பது கடினம்.
    இந்த இரண்டு பிரச்சினைகளை இது தீர்த்து வைக்கிறது

    ReplyDelete

Post Top Ad