மாடல் தற்போது வெளியாகியுள்ளது வீடியோவுடன் இதைப்பற்றிய
சிறப்புப் பதிவு.
வெளிவந்த சில நாட்களிலே அனைவரிடமும் நல்ல பெயர் எடுத்து
இன்று வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் ஆப்பிள்
நிறுவனத்தின் அடுத்த தலைமுறைக்கான ஐபேட் மாடல் இப்போது
வெளிவந்துள்ளது. இதில் என்ன புதுமை என்றால் சமையலறையில்
நாம் இந்த ஐபேட்-ஐ பயன்படுத்தலாம் பிரத்யேகமாக இதற்காக
வடிவமைக்கப்பட்டுள்ளது. சமையலறையில் இருந்து கொண்டு
ஐபேட் -ஐ பயன்படுத்தினால், தண்ணீர் இதன் மேல் பட்டாலும்
பாதிப்பு ஏதும் இருக்காத வண்ணம் இதன் மேல் உயர்தர
பிளாஸ்டிக்கிலான மேல்பாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஐபேட்-ல் விரலால் தொட்டு நாம் சாம்பார் எப்படி வைக்க
வேண்டும் என்பதை கேட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை,
இதைப்பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை
நம் நாட்டை சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டு பயணிகளிடம்
பல்லைக்காட்டி பணம் கேட்காதீர்கள், நாம் பிச்சைகாரர்கள்
அல்ல தானம் கொடுப்பவர்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.அறிவியல் மையங்களின் 2 -வது உலக மாநாடு எங்கு
நடைபெற்றது?
2.1998 -ம் ஆண்டுக்கான ஞானபீட விருதைப் பெற்றவர் யார் ?
3.கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது ?
4.ஜி-15 -ன் 9 வது உச்சி மாநாடு எங்கு நடைபெற்றது ?
5.5- வது தேசிய விளையாட்டுப்போட்டி எங்கு நடந்தது ?
6.இந்தியாவில் எப்போது தபால் தலை அறிமுகப்படுத்தப்பட்டது ?
7.ஆசிய விளையாட்டுப்போட்டி முதலில் எங்கு ஆரம்பிக்கப்பட்டது?
8.’துறவை விட இல்லறமே நல்லறம்’ என்று போதிக்கும்
மதம் எது?
9.இந்தியாவின் முதல் வானெலிநிலையம் எங்கு தொடங்கப்பட்டது?
10.விண்வெளியில் மனிதனுக்கு முன் பறந்த உயிரினம் எது ?
பதில்கள்:
1.கல்கத்தாவில், 2.கிரிஷ் கர்னாட்,3.1952 -ம் ஆண்டு,
4.ஜமைக்காவில்,5.மணிப்பூரில், 6.ஜூலை 1,1854,
7.1951 -டெல்லியில்,8.சீக்கிய மதம், 9.சென்னை,10.நாய்
இன்று ஜூலை 24
பெயர் : கார்ல் மலோன்,
பிறந்ததேதி : ஜூலை 24, 1963
முன்னாள் அமெரிக்க கூடைப்பந்து ஆட்டக்காரர்
என். பி. ஏ. வரலாற்றில் மிக உயர்ந்த வலிய
முன்நிலைகளின் ஒன்றாவார் என்று பல
கூடைப்பந்து நிபுணர்கள் கூறுகின்றனர்.என்.பி.ஏ.
வரலாற்றில் இரண்டாவது மிகவும் அதிக புள்ளிபெற்றவர் ஆவார்
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
தினம் ஒரு அருமையன பதிவு போடுகிரிர்கள் மேலும் அதீகமாக பதீவுககாள் இட வாழ்துக்கல் ஆ.மாணீக்கவேலு
ReplyDelete