கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கு இனி இடம் இல்லை Wi-Fi -ஐ
சுரங்கப்பாதையிலும் பயன்படுத்தி விஞ்ஞானிகள் வெற்றி
அடைந்துள்ளனர் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
சுரங்கப்பாதையில் wifi வசதி கொடுப்பதற்காக பல இலட்சம் டாலர்
பணத்தை உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளும் செலவழித்து வந்த
நிலையில் தற்போது இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.
சிங்கப்பூர் ,பெர்லின் ,டோக்கியோ போன்ற நாடுகளில் எல்லாம்
இப்போது டியூப் மூலம் தான் சுரங்கத்தில் wifi இணைப்பு
பயன்படுத்தப்படுகிறது. 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின்
டிரான்ஸிட் வயர்லஸ் LLC என்ற நிறுவனம் அமெரிக்காவின்
நீயூயார்க் மாகானத்தில் உள்ள சுரங்கப்பாதையில் இந்த
முயற்சியை தொடங்கி இன்று wifi - ஐ வெற்றிகரமாக சோதித்துள்ளது.
(Smoke detector-size) ஸ்மோக் டிடக்டர் அளவே இருக்கும்
ஆண்டனா இதற்காக பயன்படுத்தப்படுகிறது.
நீயூயார்க்-ல் இருக்கும் 271 பிளாட்பார்ம்-க்கும் சேர்த்து wifi
கொடுப்பதற்கு மொத்தமாக 200 மில்லியன் டாலர் பணத்தை
LLC நிறுவனம் நிர்ணயத்துள்ளது. இன்னும் 3 ஆண்டுகளில் இந்த
சேவை அனைத்து நாடுகளுக்கும் கிடைக்கும் என்று அறிவித்துள்ளனர்.
சுரங்கப்பாதையில் இனி இண்டெர்நெட் இணைப்பு மட்டுமல்ல
அலைபேசியும் பயன்படுத்தலாம் சிக்கனல் பற்றிய பிரச்சினை
இருக்காது.
வின்மணி சிந்தனை
அடுத்தவர் பற்றி குறை கூறுவதை கொஞ்சம் கொஞ்சமாக
குறைத்துக்கொள்ளுங்கள். நம் வெற்றிக்கு எந்தத் தடையும்
இருக்காது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகில் எங்கும் காண இயலாத தாவர விலங்கினங்கள் எந்த
நாட்டில் உள்ளது ?
2.அயர்லாந்து நாட்டின் தலைநகரம் எது ?
3.உலகிலே பால் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது ?
4.உலகிலேயே மிக அகலமான இரண்டாவது பெரிய கடற்கரை
எங்குள்ளது ?
5.அந்தமான் தீவுகளில் உள்ள குன்றுகளில் மிகப்பெரிய
குன்று எது ?
6.தமிழ்நாட்டின் முதல் பெண் முதலமைச்சர் யார் ?
7.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் எப்போது நிறுவப்பட்டது?
8.இந்தியாவில் PIN Code முறை எப்போது தொடங்கப்பட்டது?
9.தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய வனவிலங்கு புகலிடம்
எங்குள்ளது ?
10.கொத்தடிமை தொழிலார் ஒழிப்புச் சட்டம் இந்தியாவில்
எப்போது கொண்டுவரப்பட்டது ?
பதில்கள்:
1.ஆஸ்திரேலியா, 2.டப்ளின்,3.இந்தியா,
4.சென்னை மெரினா கடற்கரை,5.ஹரியட், 6.ஜானகி
இராமச்சந்திரன், 7.1971 ஆம் ஆண்டு,8.1972 ஆம் ஆண்டு,
9.முதுமலை,10. 1976 ஆம் ஆண்டு
இன்று ஜூலை 29
பெயர் : வ. ஐ. சுப்பிரமணியம்,
மறைந்ததேதி : ஜூலை 29, 2009
வடசேரி ஐயம்பெருமாள் சுப்பிரமணியம்
மொழியியல் அறிஞரும் தஞ்சைத் தமிழ்ப்
பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரும்
ஆவார்.கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை
வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும்
மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
உலகிலேயே பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் வகித்தாலும் பால்மாவு இந்தியாவிலிருந்து வருவதாகத் தெரியவில்லையே! ஏனோ ?
ReplyDelete@ தணிகாசலம்
ReplyDeleteம்ம்ம்ம்ம்
மிக்க நன்றி
good post friend
ReplyDelete@ sasikumar
ReplyDeleteமிக்க நன்றி