பயர்பாக்ஸ் 4 பீட்டா 3 வெர்சனில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட இடங்களை (Multi-touch) தொட்டு பயன்படுத்தலாம்
இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்.
பயபார்கஸ் உலாவியின் அடுத்த பதிப்பில் பல புதுமையான
மாற்றங்கள் வரலாம் என்று எதிர்பார்த்த நிலையில் மல்டிடச்
துணையுடன் அனைத்து பயனாளர்களையும் தன் பக்கம் ஈர்க்கும்
புது முறையை அறிமுகப்படுத்த உள்ளனர்.பயர்பாக்ஸ் 4 பீட்டா 3
வெர்சனில் இதை சோதித்தும் பார்த்துள்ளனர். இதில் என்ன
புதுமை என்றால் நாம் உலாவியில் பார்த்துக்கொண்டிருக்கும்
புகைப்படத்தையோ வீடியோவையோ நாம் இரண்டு கைவிரல்களை
பயன்படுத்தி சுருக்க விரிக்க மற்றும் எங்கே வேண்டுமானாலும்
நகர்த்தலாம் அதுவும் மிக எளிதாக, விண்டோஸ் 7 ஆப்ரேட்டிங்
சிஸ்டத்திற்கு மட்டுமே இப்போதைக்கு துணை செய்கிறது. ஒரே
நேரத்தில் திரையின் இரண்டு இடங்களைத் தொட்டு நாம்
கணினிக்கு இன்புட் கொடுப்பதும் உலாவி வரலாற்றில் இதுவே
முதல் முறை. இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிய
சிறப்பு வீடியோவை இத்துடன் இணைத்துள்ளோம்.
வின்மணி சிந்தனை
மனிதனை நம்பவைத்து ஏமாற்றி விட்டு என்ன மந்திரம் கூறி
இறைவனை அழைத்தாலும் வரமாட்டான், நாம் அன்பால்
நினைத்தால் கூட இறைவன் ஓடி வருவான்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.உலகின் முதல் ஆளில்லாத விமானத்தின் பெயர் என்ன ?
2.வர்த்தக ரீதியாக காற்றாலைகள் பயன்படுத்திய முதல்
மாநிலம் எது ?
3.உலகிலேயே மிகப்பெரிய பள்ளி எங்குள்ளது ?
4.இந்திய தொழில் வளர்ச்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது ?
5.உலகிலேயே மிகவும் சமவெளியாக அமைந்துள்ள நாடு எது ?
6.இந்தியாவில் உள்ள மிகப்பெரிய உயரமான சிலை எது ?
7.இந்திரா காந்தியின் கணவர் பெயர் என்ன ?
8.’நியு இண்டியா’ என்ற பத்திரிகையைத் தொடங்கியவர் யார் ?
9.’தும்பா’ ராக்கெட் ஏவுதளம் எந்த மாநிலத்தில் உள்ளது ?
10.பாரதியார் சமாதி எங்குள்ளது ?
பதில்கள்:
1.சுதர்தன் கிராஸ் II,2.குஜராத்,3.லக்னோ சிட்டி மாண்டிசோரி,
4.1964 ஆம் ஆண்டு,5.மாலத்தீவு,6.திருவள்ளுவர் சிலை -
கன்னியாகுமரி, 7.ஃபெரோஸ் காந்தி,8.அன்னிபெசண்ட்
அம்மையார், 9.கேரளா,10.பாண்டிச்சேரி.
இன்று ஆகஸ்ட் 10
பெயர் : வி. வி. கிரி ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 10, 1894
வி.வி .கிரி என்றழைக்கபெற்ற வராககிரி
வேங்கட கிரி இந்திய குடியரசின் நான்காவது
ஜனாதிபதி ஆவார்.இந்தியாவின் தலைசிறந்த
விருதான,பாரத ரத்னாவை 1975-ஆம்
ஆண்டு பெற்றார் கிரி.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Do you need a special Monitor to do this?
ReplyDelete@ K. Jayadeva Das
ReplyDeleteஆம் , தொடுதிரை மானிட்டர்
நன்றி
உங்கள் செய்திகள் புதிய தகவலாக உள்ளது.
ReplyDeleteசூப்பர்... எக்ஸ்செல்லேன்ட்....
கூகுளின் புதிய அறிமுகம் ஜெயகு . உங்கள் வலைத்துவை பிரபலபடுத்த சிறந்த வழி.
thanks winmani
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteநன்றி