இணையதளங்கள் எல்லாம் மொபைலில் பார்க்கக்கூடிய நிலையில்
இருக்கிறோம் இந்த நிலையில் நம் வலைப்பூ மொபைலில் சரியாகத்
தெரிகிறதா என்று கண்டுபிடிக்கலாம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
மொபைலில் நம் தளம் நன்றாகவும், வேகமாகவும் , எந்த பிழைச்
செய்தி இல்லாமலும் தெரிகிறதா என்று சோதிக்க நாம் ஒவ்வொரு
மொபைல் போனிலும் சென்று சோதிக்க வேண்டிய அவசியம் இல்லை
எளிதாக நம் இணையதள முகவரியை கொடுத்தே மொபைலில்
சரியாகத் தெரிகிறதா என்று சோதிக்க ஒரு இணையதளம் உள்ளது
இணையதள முகவரி : http://validator.w3.org/mobile/
இந்த தளத்திற்கு சென்று நம் வலைப்பூவின் முகவரியைக் கொடுத்து
Check என்ற பொத்தானை அழுத்த வேண்டும் அவ்வளவு தான், நம்
தளம் எல்லா மொபைல் போனிலும் பிரச்சினை இல்லாமல் தெரிகிறதா
அல்லது பிரச்சினை என்றால் என்ன பிரச்சினை வருகிறது என்று
விளக்கமாக கூறிவிடுகின்றனர்.கண்டிப்பாக இந்தத்தளம் நமக்கு
பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
சோதனையை மகிழ்ச்சியோடு தாங்குங்கள் , நாளை நாம் தான்
வெற்றிக்கனியை சுவைக்கப்போகிறோம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் என்ன ?
2.மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு எது ?
3.உலகின் மிகப்பெரிய சமுத்திரம் எது ?
4.மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு எது ?
5.பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு எது ?
6.இந்தியாவின் முதல் பெண் மேயர் யார் ?
7.நீரில் அதிகமாக கரையும் வாயு எது ?
8.நீருக்குள் பறக்கும் பறவை எது ?
9.கைபர் கணவாயின் நீளம் என்ன ?
10.கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது எது ?
பதில்கள்:
1.நெதர்லாந்து,2.ஜப்பான், 3.பசிபிக் பெருங்கடல்,
4.தென்ஆப்பிரிக்கா, 5.ஸ்காட்லாந்து,6.தாரா செரியன்,
7.அமோனியா, 8.பெங்குயின், 9.33 மைல்கள்,10.வியாழன்
இன்று ஆகஸ்ட் 14
பெயர் : வேதாத்திரி மகரிஷி ,
பிறந்த தேதி : ஆகஸ்ட் 14, 1911
ஆன்மிகத்தை அடிப்படையாகக் கொண்டு
சமுதாயப் பணி ஆற்றி வந்த உயர்ந்த தத்துவ
ஞானி. “ வாழ்க வளமுடன் ” என்ற உயர்ந்த
வார்த்தையை தன் சீடர்களுக்கு வழங்கியவர்.
உங்களைப்போல் ஞானிகள் இந்த பாரதத்தில் பிறப்பது
எங்களுக்குத் தான் பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
No comments:
Post a Comment