பல பொருட்கள் நம்மிடம் இருக்கலாம் இந்தப் பொருட்களை நாம்
உலகறியச்செய்யலாம் எப்படி என்பதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
வித்தியாசமான சிப்பி முதல் பண்டைய காலத்தில் பயன்படுத்திய
அஞ்சல் தலை வரை நம்மிடம் இருக்கும் அனைத்து அரிய வகை
பொக்கிஷங்களையும் உலகறியச் செய்யலாம். சில முக்கியமான
அரிய வகை பொருட்கள் தேடுபவர்கள் பார்வையில் உங்கள் பொருள்
பட்டால் அதற்குரிய பணம் கொடுத்து வாங்க தயாராகவும் உள்ளனர்.
இதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://whatucollect.com
இந்தத் தளத்திற்கு சென்று நமக்கென்று ஒரு இலவச கணக்கை
உருவாக்கிக் கொள்ள வேண்டும் அதன் பின் நம் பொருட்களின்
புகைப்படத்தை இந்தத் தளத்தில் பகிர்ந்து கொள்ளலாம் இலவசமாக,
எந்த மறைமுக பணமும் செலுத்த வேண்டியது இல்லை நம் தாத்தா
காலத்து நாணயங்கள் நம்மிடம் இருக்கிறது என்றால் அதை ஒரு
புகைப்படம் எடுத்து இந்தத் தளத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்
யாருக்குத் தெரியும் நாளை அது நல்ல விலைக்குப் போகலாம்.
கண்டிப்பாக இந்தப் பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக
இருக்கும்.
வின்மணி சிந்தனை
தன்னைப்பற்றி அறியாமல் எந்த நேரமும் பணம் பணம்
என்று அலைபவர்களிடம் நட்பு கொள்ள வேண்டாம்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பூனாவில் ‘ஹோம் ரூல்’ கழகத்தை ஏற்படுத்தியவர் யார் ?
2.திருப்புகழைப் பாடியவர் யார் ?
3.துப்பறியும் மோப்ப நாய்களை முதன் முதலிம் பயன்படுத்திய
நாடு எது ?
4.இந்தியாவில் மிகப்பெரிய கோட்டை எங்குள்ளது ?
5.பசுமைப்புரட்சியின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார் ?
6.’மறுமலர்ச்சியின் தாயகம்’ என்று அழைக்கப்படும் நாடு எது ?
7.வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என்று அழைக்க்படும்
நாடு எது ?
8.புக்கர் பரிசு பெற்ற முதல் இந்தியப்பெண் எழுத்தாளர் யார் ?
9.உலகின் மிகப்பெரிய புத்தர் சிலை எங்குள்ளது ?
10.இந்திய நேரம் எந்த இடத்தின் நேரத்தை வைத்துக்
கணக்கிடப்படுகிறது ?
பதில்கள்:
1.பாலகங்காதர திலகர்,2.அருணகிரிநாதர், 3.பிரான்ஸ்,
4.ஹைதராபாத், 5.சி.சுப்பிரமணியம்,6.இத்தாலி, 7.சீனா,
8.அருந்ததி ராய், 9.சீனாவில்,10.அலகாபாத்
இன்று ஆகஸ்ட் 16
பெயர் : ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்,
மறைந்த தேதி : ஆகஸ்ட் 16, 1886
19ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த
ஆன்மீகவாதிகளுள் ஒருவர்.இவர் விவேகானந்தரின்
குருவாவார்.அனைத்து மதங்களும் ஒரே இறைவனை
அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள்
மூலம் உணர்ந்து அதையே வலியுறுத்தியவர்.
உங்களால் நம் தேசத்திற்கே பெருமை.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
yes really useful site winmani
ReplyDeletethanks
@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
நல்ல முயற்சி தொடருங்கள்.
ReplyDelete- ஜெகதீஸ்வரன்,
@ ஜெகதீஸ்வரன்
ReplyDeleteமிக்க நன்றி
இத்தளம் மூடப்பட்டுவிட்டது!
ReplyDelete@ benjaminlebeauBenjamin
ReplyDeleteஇத்தளத்தில் முயற்சித்து பாருங்கள். http://colnect.com/en
நன்றி