செய்தியை நம் கண் முன்னால் நேரடியாக கூறினால் எப்படி இருக்கும்
ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தின் மூலம் இது சாத்தியம் தான்
இதைப் பற்றிய சிறப்புப் பதிவு வீடியோவுடன்.
தொழில்நுட்பத்தின் மிக வேகமான வளர்ச்சியின் வெளிப்பாடு தான்
ஹோலோ கிராபிக் மெசேஸ், அதாவது நமக்கு செய்தி அனுப்புவர்
முப்பரிமானத்தில் நம் கண் முன் வந்து செய்தி சொல்வதை தான்
ஹோலோ கிராபிக் மெசேஸ் என்கிறோம். எந்த மாய வேலையும்
செய்யாமல் நேரடியாக நம் கண் முன் வந்து காட்சி கொடுப்பது
அதிசயமான விருந்தை நம் கண்களுக்கு காட்டுகிறது. இதன்
சோதனை முயற்சி தற்போது வெற்றி அடைந்திருக்கிறது.
சோதனைக்காக அனுப்பிய ஹோலோ கிராபிக் மெசேஸ்
பற்றிய அரிய வகை சிறப்பு வீடியோவை இத்துடன்
இணைத்துள்ளோம். 2012 ஆம் ஆண்டில் இந்த ஹோலோ
கிராபிக் மெசேஸ் நாம் பயன்படுத்தும் வண்ணம் முழுமை
அடையும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வின்மணி சிந்தனை
நாம் அவசர வேலைக்காக சென்று கொண்டிருக்கும் போது கூட
துன்பத்தில் கஷ்டப்படுபவனுக்காக 1 நிமிடம் இறைவனிடம்
வேண்டு உன் வேலை சிறப்பாக முடியும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பிறந்த குழந்தையின் சராசரி எடை அளவு என்ன ?
2.மனித உடலிலுள்ள எலும்புகளின் எண்ணிக்கை என்ன ?
3.மலேரியா எந்த கொசு கடிப்பதால் வருகிறது ?
4.தாவரங்களில் திடீர் மாற்றத்தை தூண்டவல்லது எது ?
5.காற்றுச்சீர்கேடால் உண்டாகும் நோய் எது ?
6.அறிவெளி இயக்கம் எதனுடன் தொடர்புடையது ?
7.இந்தியக்காடுகளின் ராஜா என்று அழைக்கப்படுவது எது ?
8.பட்டாம்பூச்சிகளின் சரணாலயம் எங்குள்ளது ?
9.எதன் குறைவாக சோகை நோய் ஏற்படுகிறது ?
10.குள்ளமான மனிதர்களை உருவாக்கும் சுரப்பி எது ?
பதில்கள்:
1.2.5 கி.கி,2.206,3.பெண் அனோபிலஸ்,4.எக்ஸ் கதிர்கள்,
5.தீராத மார்புச் சளி,6.கல்லாமையை ஒழித்தல்,7.தேக்குமரம்,
8.மெக்ஸிகோ,9.இரும்புச் சத்து,10.பிட்யூட்டரி
இன்று ஆகஸ்ட் 20
பெயர் : நாராயண மூர்த்தி,
பிறந்ததேதி : ஆகஸ்ட் 20, 1946
இன்போசிஸ் என்றழைக்கப்படும் தகவல்
தொழில்நுட்ப நிறுவனத்தை நிறுவியவர்.கடந்த
2002ம் ஆண்டு வரை இந்நிறுவனத்தின் தலைமை
செயற்குழு அதிகாரியாக பணியாற்றி, தற்போது
இவர் இக்குழுமத்தின் கௌரவ செயல்குழுவின் தலைவராகவும்,
தலைமை ஆலோசகராகவும் அங்கம் வகிக்கிறார்.
பணியிலிருந்து ஒய்வு பெற்றபின் தமது நேரத்தை
சமுகசேவையிலும், இந்திய கிராம வளர்ச்சியிலும் செலவிடுகிறார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
தொழில்நுட்பம் பற்றி போலியான வீடியோக்கள் youtube இல் நிறைந்திருக்கின்றன. இந்த வீடியோவும் அப்படியான போலியானதாகவே இருக்கலாம்...
ReplyDeletenalla iruku. nanri.
ReplyDelete@ vasu
ReplyDeleteஅதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர் , இதைப்பற்றிய பல வீடியோக்கள்
யூடியுப்-ல் கிடைக்கிறது.
நன்றி
Super
ReplyDelete@ premcs23
ReplyDeleteநன்றி
எப்படிதான் இது மாதிரி தொழில் நுட்ப செய்திகல் உங்களுக்கு கிடைக்கிரதொ ஆச்சரியமாக உள்ளது தேடல் என்பது உங்களுக்கு நிறைய உள்ளது எனக்கு புரிகிரது தொடருங்கள் ஆ.மாணீக்கவேலு
ReplyDeleteஇது எந்த கம்பெனி இன் முயற்சி?
ReplyDelete@ anitha
ReplyDeleteCieAura
நன்றி