முக்கியமான ஒன்று கார்ட்டூன் எனப்படும் அனிமேசன் வடிவங்களை
எப்படி உருவாக்குவது என்றும் அதை மேலும் அழகு படுத்துவது எப்படி
என்றும் இவர்களுக்கு மட்டுமல்ல கார்ட்டூன் வரைய ஆசைப்படும்
அனைவருக்கும் எளிய முறையில் கார்ட்டூன் வரைய சொல்லிக்
கொடுக்க ஒரு தளம் உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
கணினியில் அனிமேசன் துறையில் தனித்தன்மை பெற்று விளங்க
வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவரா நீங்கள், பெரும் பணம் செலவு
செய்துm அனிமேசன் Character உருவாக்குவதில் இன்னும் சரியாக
வரவில்லையா, எப்படி எளிதாக ஆன்லைன் மூலம் அனிமேசன்
வடிவங்களை உருவாக்கலாம் என்று சொல்லிக்கொடுக்க ஒரு தளம்
நமக்கு உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.how-to-draw-cartoons-online.com
இந்ததளத்திற்கு சென்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை
அனைவரும் கார்ட்டூன் வடிவங்கள் உருவாக்குவது எப்படி என்று
ஒவ்வொரு படியாக படிக்கலாம். கார்ட்டூனின் எந்த வடிவம் வரைய
வேண்டுமோ அந்த வடிவத்தை தேர்ந்தெடுத்து நாம் கார்ட்டூன் வரைய
கற்றுக்கொள்ளலாம். மற்றத் தளங்களை விட இந்தத்தளத்தில்
முப்பரிமான 3D அனிமேசன் வடிவங்கள் வரையவும் சொல்லிக்
கொடுக்கின்றனர்.இதைத்தவிர கார்ட்டூன் வரைய உதவும் இலவச
புத்தகங்களையும், ஐடியாவும் அள்ளிகொடுக்கின்றனர். கிராபிக்ஸ்
துறையில் நுழைய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு
இந்தத்தளம் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
அன்பு என்ற ஒன்று நாடுகளையும், எல்லைகளையும்,
உறவினர்களையும் தாண்டி எப்போதும் ஒரே மாதிரி
இருக்கக்கூடியது.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
2.மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
3.முகப்பவுடரை கண்டுபிடித்த நாடு எது ?
4.கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?
5.கனநீரை கண்டுபிடித்தவர் யார் ?
6.வெப்பநிலை மானியை கண்டுபிடித்தவர் யார் ?
7.சட்டையை கண்டுபிடித்தவர்கள் யார் ?
8.முதல் இரும்பு கப்பலைச் செய்தவர் யார் ?
9.மெர்குரி விளக்குகள் எந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது?
10.காந்த துருவங்களை கண்டுபிடித்தவர் யார் ?
பதில்கள்:
1.ஒரே ஒரு முறை, 2.ஓம், 3.இத்தாலி,4.இங்கிலாந்து,
5.யூரி, 6.சிக்ஸ், 7.எகிப்து நாட்டவர்கள்,
8.வில்கின்சன்,9.1912-ல்,10.ரோஸ்.
இன்று செப்டம்பர் 4
பெயர் : இசுடீவ் இர்வின்,
மறைந்ததேதி : செப்டம்பர் 4, 2006
ஓர் ஆஸ்திரேலிய இயற்கை ஆர்வலரும்,
வனவிலங்கு பராமரிப்பு விற்பன்னரும், புகழ்
பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி அமைப்பாளரும்
ஆவார். முதலை வேட்டைக்காரர் என
அழைக்கப்படும் இர்வின், தொலைக்காட்சியில் முதலையுடன்
துணிவாக விளையாடி உலகம் முழுவதும் பரவலாக
அறியப்பட்டவர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Dear winmani sir,
ReplyDeleteassalamu alaikum va rahmatullahi va barakaatahu(iraivanudaya santhiyum samaathaanamum ungal meedhu undavaadaha)
i want download crack software.. epdi kandupidikiradhu..
endha unavula evvalavu sathu irukirathunu tamil la venum adhuku easya read panra weblink thevai
ennudaya laptop romba slow a iruku anaithu valimurayum sollavum speed panradhuku
periya drawback open panna romba nerama wait panna vendiyada iruku work panradhuku..
குழந்தைகளுக்கு உபயோகமான பதிவு....நன்றி...
ReplyDelete@ Salemdeva
ReplyDeleteநன்றி
@ inamul hasan
ReplyDeleteகூகுளில் தேடிப்பாருங்கள் , பெரும்பாலும் வைரஸ் கூடவே வருகிறது ஜாக்கிரதை..
நன்றி
Dear sir,
ReplyDeleteI draw pictures,cartoons with computer mouse. I have joined animation class. But most of the computer software like adobe photoshop, flash mx , indesign teach cut and paste method. Is there really any scope for persons adept in drawing pics, cartoons through computer mouse.By the way, I am a retired Assistant Commissioner of Income tax, who have a passion for drawing. M.Lakshmanan