ஆச்சர்யமும் பிரமிப்பும் தான் தோன்றுகிறது. அந்த வகையில்
இப்போது புதிதாக கூகுள் இன்ஸ்டண்ட் என்ற ஒன்றை கொண்டு
வந்துவிட்டனர் இதைப்பற்றிய சிறப்பு பதிவு வீடியோவுடன்.
கூகுளின் அடுத்த பிரம்மாண்ட சேவை நமக்கு மிகவும் பயனுள்ளதாக
இருக்கப்போகிறது ஆம் இனி கூகுளில் சென்று நாம் தேடு என்ற
பொத்தானை அழுத்த வேண்டாம். தேட வேண்டிய வார்த்தை
ஒவ்வொன்றாக கொடுக்க உடனுக்குடன் இன்ஸ்டண்ட் ஆகத் தேடி
நமக்கு முடிவுகளை காட்டுகிறது. தேடு என்ற பொத்தானை அழுத்தாமல்
உடனுக்கூடன் முடிவுகளை பார்த்துக்கொள்ளலாம். இதனால் நமக்கு
கூகுளில் தேடுவதற்கு ஆகும் சில நொடிகளும் மிச்சமாகிறது.
தன் தேடுதல் நிறுவனத்திற்கு போட்டியே இல்லாமல் செய்ய வேண்டும்
என்ற முனைப்பில் கூகுள் தினமும் கொடுக்கும் சேவை நமக்கு
பயனுள்ளதாகவே இருக்கிறது. கூகுள் இன்ஸ்டண்ட் எப்படி வேலை
செய்கிறது என்பதைப்பற்றிய அறிமுக வீடியோவையும் இத்துடன்
இணைத்துள்ளோம். இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்து கூகுள்
தளத்திற்கு சென்று நீங்கள் மனதால் நினைத்தால் போதும் நாங்கள்
தேடி முடிவுகளை கொடுக்கிறோம் என்று சொன்னாலும்
ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.கூகுள் இன்ஸ்டண்ட்-ல்
தேட விருப்பம் உள்ளவர்கள் இங்கு சொடுக்கவும்
முகவரி : www.google.com/instant
வின்மணி சிந்தனை
கல்வியை வியாபாரமாக்கும் ஒரு சில வியாபாரிகளால்
கல்வி பணக்காரர்களுக்கே என்ற நிலை வந்துவிட்டது. இந்த
நிலை மாற நம்மால் ஆன முயற்சியை நாம் செய்ய வேண்டும்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.முதன் முதலில் பத்மஸ்ரீ விருதை பெற்றவர் யார் ?
2.கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்தவர் யார் ?
3.சூரிய உதயத்தை முதலில் பார்ப்பவர்கள் யார் ?
4.இந்தியாவில் வருமானவரி எந்த ஆண்டு வந்தது ?
5.பூமி சூரியனுக்கு அருகில் இருக்கும் நாள் எது ?
6.கங்கை உற்பத்தி ஆகும் இடம் எது ?
7.அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது ?
8.கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார் ?
9.செயற்கை மழையை உண்டாக்கியவர்கள் ?
10.மாணவர்களுக்கு இரண்டு கைகளாலும் எழுதப்பயிற்சி
அளிக்கும் நாடு எது ?
பதில்கள்:
1.அன்னை தெரசா, 2.கெப்ளர், 3.ரஷ்யர்கள்,4.1860,
5.ஜனவரி 3, 6.கோமுகம், 7.எருசேலம் நாட்டில்,
8.லிக்னோஸ்,9.இர்வின் லாங்மூர்,10.ஜப்பான்.
இன்று செப்டம்பர் 8
பெயர் : ஆஷா போஸ்லே,
பிறந்ததேதி : செப்டம்பர் 8, 1933
ஒரு இந்திய பாடகியாவார்.பல துறைகளில்
திறமை கொண்டவராக இருந்தாலும் இவர்
பாலிவுட் பின்னணிப்பாடகியாக மிகவும் புகழ்
பெற்றவராவார். அவரது கலைப்பயணம் 1943
ஆண்டில் துவங்கியது மற்றும் இன்று வரை
அறுபது ஆண்டுகளாக தமது சேவைகளை அளித்து
வருகிறார். அவர் பின்னணிப்பாடகியாக 1000 த்துக்கும்
மேற்பட்ட பாலிவுட் படங்களில் பாடியுள்ளார். இவர்
பின்னணிப்பாடகியான லதா மங்கேஷ்கரின் சகோதரியாவார்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
//நீங்கள் மனதால் நினைத்தால் போதும் நாங்கள்
ReplyDeleteதேடி முடிவுகளை கொடுக்கிறோம் என்று சொன்னாலும்
ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை.// படித்தவுடன் சிரிக்கத்தோன்றினாலும், நீங்கள் சொல்வதில் உண்மையும் உண்டு. உங்கள் சிந்தனை, பணம் திரட்ட வேண்டும் என்ற கட்டாயமில்லாத கல்வியாளர்கள் முனைவார்களானால் உங்கள் சிந்தனை நிச்சயம் ஒருநாள் நனவாகும்.
@ Thanigasalam
ReplyDeleteமிக்க நன்றி