அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, September 9, 2010

அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள்.

கணினிகளில் பெரும்பாலும் யுஎஸ்பி மூலம் வைரஸ் தாக்கம்
அதிகமாக இருந்து வருகிறது. கணினியில் நம் அனுமதி இல்லாமல்
யுஎஸ்பி பயன்படுத்துவதைத் தடுக்க ஒரு இலவச மென்பொருள்
உள்ளது இதைப்பற்றித்தான் இந்தப் பதிவு.



பள்ளி முதல் கல்லூரி வரை அனைவரின் கணினியிலும் அனுமதி
இல்லாமல் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க ஒரு இலவச
மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் மூலம் நம் கணினியில்
யாரவது யுஎஸ்பி டிரைவ் மாட்டினால் உடனடியாக கடவுச்சொல்
கேட்கும் 10 நொடிகளுக்குள் கடவுச்சொல் ஏதும் கொடுக்கவில்லை
என்றால் அலாரம் மூலம் நமக்கு  உணர்த்தும். இப்போதைய
சூழ்நிலையில் கண்டிப்பாக நம் அனைவருக்கும் தேவையான
மென்பொருள். இந்த சுட்டியை சொடுக்கி இந்த மென்பொருளை
தரவிரக்கிக்கொள்ளலாம்.

Download



இந்த மென்பொருளைப் பயன்படுத்தி யுஎஸ்பி டிரைவ் - ஐ கணினியில்
நம் அனுமதி இல்லாமல் பயன்படுத்த முடியாத வண்ணம் செய்யலாம்.
வின்மணி சிந்தனை
சுயநலம் பார்க்காமல் நாம் செய்யும் உதவி கடவுளுக்கு
நேரடியாக உதவி செய்வதாகும். பலன் விரைவில் கிடைக்கும்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.இந்தியாவின் உயரமான நீர்வீழ்ச்சி எது ?
2.நட்சத்திரங்களில் ஒளிமிக்கது எது ?
3.நோபல் பரிசை ஏற்படுத்தியவர் யார் ?
4.அணுவை பிளந்து காட்டியவர் ?
5.சுத்தமான இரத்தத்தை எடுத்துச் செல்பவை எவை ?
6.யூதர்களின் புனித நூல் எது ?
7.மனித மூளையை எத்தனை எலும்புகள் பாதுகாக்கின்றன?
8.மனித உடலின் மிக கடினமான பகுதி எது ?
9.சூரிய அடுப்பில் பயன்படுத்தப்படும் ஆடி எது ?
10.கண்ணீர் சுரப்பிக்கு என்ன பெயர் ?

பதில்கள்:
1.கெர் சோப்பா, 2.சிரியஸ், 3.ஆல்ஃபிரட் நோபல்,
4.ரூதர் போர்டு, 5.தமனிகள், 6.டோரா, 7.8 எலும்புகள்,
8.பல்,9.குழி ஆடி,10.லாச்ரிமல் கிளாண்டஸ்.

இன்று செப்டம்பர் 9  
பெயர் : கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி,
பிறந்ததேதி : செப்டம்பர் 9, 1899

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் இவரின்
இயற்பெயர் ரா. கிருஷ்ணமூர்த்தி.
35 சிறுகதைத் தொகுதிகள், புதினங்கள்,
கட்டுரைகள், பயணக்கட்டுரைகள்
மற்றும் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதியுள்ளார்.
எனினும், மிகச் சிறந்த சமூக மற்றும் வரலாற்றுப்
புதினங்களை எழுதியதற்காக பரவலாக அறியப்படுகிறார்.
இவர் எழுதிய பொன்னியின் செல்வன் புதினம் மிகப் புகழ்
பெற்றதாகும். தன் படைப்புகள் மூலம் இந்திய தேசிய
விடுதலை போராட்டத்திற்கும் பங்களித்திருக்கிறார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

7 comments:

  1. @ shareef
    மிக்க நன்றி

    ReplyDelete
  2. I WELCOM YOUR ALL ARTICLES .
    2DAY I SAW YOUR .COM. I AM INTEREST IN COMPUTER , FREE SOFT WARE ETC ,,,,,,,,,,.
    KEEP IT UP . GOOD SAVE YOU ALWAYS . YOUR CALL NO PL'S .

    ---------B.SRINIVASAN.

    ReplyDelete
  3. @ VASU
    நம் அலைபேசி எண்ணை உங்களுக்கு மெயிலில் அனுப்பியாச்சு. சந்தேகங்களை கேழுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  4. I have read the predator description, it sounds like locking the PC not the USB drive. With the help of USB drive we can keep our PC secured.But your post shows like locking USB port which is not true. Please correct me if i am wrong.

    ReplyDelete
  5. @ abbu
    நண்பருக்கு ,
    தலைப்பை பாருங்கள். அனுமதி இல்லாமல் கணினியில் யுஎஸ்பி பயன்படுத்துவதை தடுக்க இலவச மென்பொருள். நம் அனுமதியோடு யுஎஸ்பி -ஐ கணினியில் பயன்படுத்து
    -வதாக இருந்தால் கண்டிப்பாக ஆண்டிவைரஸ் மென்பொருள் மூலம் சோதித்து விட்டுதானே பயன்படுத்துவோம். அப்ப வைரஸ் வராதுல்ல... நீங்களே சொல்லுங்க
    அப்பு.
    மிக்க நன்றி

    ReplyDelete
  6. But still my friend i would like to say it's used in either way. You say like locking USB port. But when i read the software description they say like locking the PC with the help of USB drive--- "Predator enables you to lock and unlock your PC by simply removing or inserting a USB flash drive"

    If you read this statement "It will then check every X seconds if the drive is still inserted and if it is not, the program will lock your computer." they have clearly says that they are locking your computer not the USB drive. The concept of this software is to lock/unlock your PC using USB drive.

    Addition to this, when we forget the password/lost the USB drive then it locks your port permanently :( which is no good? I am sorry if i am wrong somewhere. You are my good friend hence i take more space to argue with you :)

    ReplyDelete

Post Top Ad