ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Thursday, September 16, 2010

ஒரே இடத்தில் அனைத்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் (User Manual) பயன்பாட்டு புத்தகத்தையும் தரவிரக்கலாம்.

இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் டிஜிட்டல் கேமிரா முதல்
மொபைல் போன், கம்ப்யூட்டர்,தொலைக்காட்சி,ஏ.சி என்று
பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களின் எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களின் வழிகாட்டி புத்தகத்தையும் (User Manual) ஒரே
இடத்தில் இருந்து தரவிரக்கலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



என்னிடம் இப்போது லேட்டஸ்டாக வந்திருக்கும் நோக்கியா மொபைல்
போன் இருக்கிறது ஆனால் அதன் User Manual என்னிடம் இல்லை,
பல இணையத்தில் தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று
சொல்லும் அனைவருக்கும் இந்தப்பதிவு பயனுள்ளதாக
இருக்கப்போகிறது. புது அலைபேசியின் User Manual மட்டும் அல்லாமல்
பழைய மொபைல் போன் முதல் அனைத்து எலக்ட்ரானிக்ஸ்
பொருட்களின் பயன்பாட்டு புத்தகத்தையும் சில நிமிடங்களில் ஒரே
இடத்தில் இருந்து தரவிரக்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம்
உள்ளது.

இணையதள முகவரி : http://www.retrevo.com/samples/index.html



3G போன் முதல் சைனா போன் வரை , பழைய கணினி முதல் இப்போது
லேட்டஸ்டாக வெளிவந்திருக்கும் பாக்கெட் கணினி வரை அனைத்து
எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் User Manual - ஐ இந்தத் தளத்தில்
இருந்து எளிதாக தரவிரக்கலாம். User Manuals for Popular Categories
என்பதில் இருந்து நாம் தேட விரும்பும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை
தேர்ந்தெடுத்து அடுத்து வரும் திரையில் எந்த நிறுவனம் என்பதையும்
அதன் மாடல் எண் என்ன என்பதையும் கொடுத்து எளிதாக
தரவிரக்கலாம். கண்டிப்பாக இந்தப்பதிவு பயன்பாட்டு புத்தகம்
(User Manual) -ஐ தேடும் நம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்
வின்மணி சிந்தனை
தொடர்ந்து இதுவரை எந்த நன்மையும் பெரிதாக கிடைக்கவில்லை
என்ற எண்ணும் உங்களுக்குத் தான் இறைவன் விரைவில் பெரிய
அளவில் நன்மை செய்யப்போகிறான்.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.தமிழக அரசு சின்னத்தில் உள்ள கோபுரம் இருக்கும் ஊர் எது ?
2.தைப்பதற்கு உதவும் ஊசிகளை கண்டுபிடித்தவர்கள் யார் ?
3.இந்தியாவில் படித்தவர் அதிகம் உள்ள மாநிலம் எது ?
4.தியாகிகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
5.18 ஆண்டுகாலம் அரும்பாடுபட்டு கார்ல்மார்க்ஸ் எழுதிய
நூலின் பெயர் ?
6.வைக்கம் வீரர் எனப்படுபவர் யார் ?
7.மறைமலை அடிகளாரின் இயற்பெயர் என்ன ?
8.இந்திய நாட்டின் தேசியப்பறவை எது ?
9.தென்னாட்டு பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் யார் ?
10.ஈஃபில் டவர் எங்கே இருக்கிறது ?

பதில்கள்:
1.ஸ்ரீவில்லிப்புத்தூர்,2.சீனர்கள்,3.கேரளா, 4.ஜனவரி 30,
5.மூலதனம், 6.தந்தை பெரியார், 7.வேதாசலம்,8.மயில்,
9.பேரறிஞர் அண்ணா,10.பாரிஸ் நகரில்.

இன்று செப்டம்பர் 16 
பெயர் : தென்கச்சி கோ. சுவாமிநாதன்,
மறைந்த தேதி : செப்டம்பர் 16, 2009

புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார்.
'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி மூலம் வானொலி
நேயர்களிடையே பிரபலமாக விளங்கியவர்.அகில
இந்திய வானொலியில் உதவி இயக்குநராக
பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் 'இந்த நாள்
இனிய நாள்' என்ற நிகழ்ச்சியை நடத்தியவர்.அன்பும் பண்பும்
உள்ள மனிதர், உங்களால் நம் தேசத்திற்கு பெருமை.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

  1. உங்களது பதிவுகள் மிக உபயோகமாக உள்ளன. பதிவுகளை காபி செய்து பேஸ்ட் செய்தல் font சப்போர்ட் செய்யவில்லை . என்ன font என்று சொல்லவும். மிக்க நன்றி. so mail me the font.

    ReplyDelete
  2. very simple and useful information

    ReplyDelete
  3. @ Lingasamy
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ள பதிவு.நன்றி.

    ReplyDelete
  5. @ Salemdeva
    மிக்க நன்றி

    ReplyDelete

Post Top Ad