ஒரே நிமிடத்தில் டிவிட்டரைப் போல் லோகோ இலவசமாக உருவாக்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, October 2, 2010

ஒரே நிமிடத்தில் டிவிட்டரைப் போல் லோகோ இலவசமாக உருவாக்கலாம்.

டிவிட்டரில் நாம் பார்க்கும் லோகோ போல் நம் பெயரில் இலவசமாக
லோகோ உருவாக்கலாம் ஒரே நிமிடத்தில் எப்படி என்பதைப்பற்றித்
தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_3496" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

டிவிட்டர் வெளிவந்த சில ஆண்டுகளுக்குள்ளே மிகவும் பிரபலமான
சோசியல் நெட்வொர்க்-ல் சேர்ந்து முதலிடம் பிடிப்பதற்கு முக்கிய
காரணம் அதன் எளிமை தான். டிவிட்டரின் அழகான லோகோ -வை
நாம் மறந்திருக்க முடியாது. டிவிட்டரின் லோகோ -வில் உள்ள
எழுத்து எப்படி இருக்கிறதோ அதே போல் எழுத்து வடிவமைப்புடன்
இலவசமாக நாமும் லோகோ உருவாக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.twitlogo.com

[caption id="attachment_3497" align="aligncenter" width="450" caption="படம் 2"][/caption]

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி விரும்பும்
வார்த்தையை கட்டத்திற்குள் கொடுக்கவும். Make என்ற பொத்தானுக்கு
அடுத்து இருக்கும் Advanced options என்பதை சொடுக்கி விரும்பும்
வண்ணத்தையும் எழுத்துருவின் அளவையும் (Font Size) மாற்றி
Make என்ற பொத்தானை அழுத்தவும் சில நொடிகளில் நாம்
கொடுத்த பெயரில் டிவிட்டர் லோகோ- வைப்போல் நம் லோகோ
உருவாக்கப்பட்டிருக்கும். படம் 2 -ல் உள்ளபடி Download this image
என்பதை சொடுக்கி படத்தை தறவிரக்கலாம்.
வின்மணி சிந்தனை
அன்பான வார்த்தைகள் நோயாளிகளுக்கு மட்டுமல்ல
எல்லா மனிதனுக்கும் தேவையான ஒன்று.

TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்

1.காமன்வெல்த் தினம் ஒவ்வொரு ஆண்டும் எந்த நாளில்
கடைபிடிக்கப்படுகிறது ?
2.இன்னாநாற்பதின் ஆசிரியர் யார் ?
3.இந்தியாவின் தேசிய விலங்கு எது ?
4.தக்காணப் பீடபூமியின் வடிவம் என்ன ?
5.கங்கை நதி எங்கே உற்பத்தியாகிறது ?
6.திருவாசகத்தின் ஆசிரியர் யார் ?
7.உலகச்சுகாதார நாள் என்று கடைபிடிக்கப்படுகிறது ?
8.உடலின் எந்த உறுப்பு பாதிக்கப்பட்டால் மஞ்சல் காமாலை
நோய் வரும் ?
9.ஒரு இறகுப்பந்தில் எத்தனை இறகுகள் பினைக்கப்பட்டிருக்கும்?
10.பனிக்கட்டியின் உருகுநிலை என்ன ?

பதில்கள்:
1.மே 24, 2.கபிலர்,3.புலி, 4.முக்கோணம், 5.கங்கோத்திரி,
6.மாணிக்க வாசகர்,7.ஏப்ரல் 7, 8.கல்லீரல் 9.16,
10. 0 °C (Zero Degree).

இன்று அக்டோபர் 2
பெயர்
: மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி,
பிறந்த தேதி : அக்டோபர் 2, 1869
மகாத்மா காந்தி என்று இந்திய மக்களால்
அன்போடு அழைக்கப்படுகிறார்.இந்திய விடுதலைப்
போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று
நடத்தியவர்.சத்தியாகிரகம் என்றழைக்கப்பட்ட
இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி
வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு
வழிகாட்டியாக அமைந்தது.இந்தியாவின் தேசத்தந்தையை
மரியாதையுடன் வணங்குகிறோம்.


PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

3 comments:

  1. அதென்ன TNPSC questions என்று குறிப்பிடுகிறீர்கள். அப்படியென்றால் என்ன?

    ReplyDelete
  2. @ Thanigasalam
    நண்பருக்கு ,
    Tamil Nadu Public Service Commission (TNPSC)
    நன்றி

    ReplyDelete
  3. i want to know about 'mahathma's varissukalin today status.

    ReplyDelete

Post Top Ad