docx, pptx, xlsx, odp போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்க்கலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, October 24, 2010

docx, pptx, xlsx, odp போன்ற கோப்புகளை ஆன்லைன் மூலம் பார்க்கலாம்.

மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2007 , 2010 போன்றவற்றில் நாம் உருவாக்கும்
கோப்புக்க்கள் அனைத்தும் X என்ற extension பார்மட் -உடன் தானாகவே
சேமித்துக்கொள்ளும் இப்படி உருவாக்கும் கோபுகளை பார்க்க நமக்கு
Microsoft Office 2007 , 2010  போன்ற மென்பொருட்கள் தேவையில்லை
எளிதாக சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் பார்க்கலாம்
இதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_3758" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

பெரும்பாலும் மைக்ரோசாப்ட் பயன்படுத்தும் கணினிகளில் இன்றும்
ஆபிஸ் 2003 போன்ற ஆபிஸ் மென்பொருள் தான் பயன்படுத்தப்பட்டு
வருகிறது ஆனால் ஆபிஸ் 2007 ,மற்றும் 2010 -ல் உருவாக்கப்படும்
கோப்புகளை திறக்க நமக்கு சிரமம் ஏற்படுகிறது இந்தப்பிரச்சினைக்கு
முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு இணையதளம் உள்ளது.

இணையதள முகவரி : https://www.watchdox.com/start

இந்ததளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் இருப்பது போல் Choose
என்ற பொத்தானை அழுத்தி நம் DOCX கோப்புகளை தேர்ந்தெடுத்துக்
கொள்ளவும். கோப்புகளை பார்க்க வேண்டும் என்றால் VIew
என்பதையும் பிரிண்ட் செய்ய வேண்டும் என்றால் Print என்பதையும்,
எடிட் செய்ய வேண்டும் என்றால் Edit என்பதையும், பார்வேட்
செய்ய வேண்டும் என்றால் Forward  என்பதையும் தேர்ந்தெடுத்துக்
கொண்டு Next என்ற பொத்தானை அழுத்தவும் அடுத்து வரும்
திரையில் நாம் கொடுத்த docx கோப்புகளை எளிதாக எடிட்
செய்து சேமிக்கலாம். இன்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 2003
மென்பொருள் பயன்படுத்தும் நண்பர்களுக்கு இந்தத்தகவல்
பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
வார்த்தையால் ஒரு போதும் தவறாக விளைடாதீர்கள்,
மானம் உள்ளவர்கள் தவறான வார்த்தையை தாங்க
மாட்டார்கள்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ஆல்ப்ஸ் மலை எவ்வாறு அழைக்கப்படுகிறது ?
2.சித்தன்ன வாசல் குகைச்சிற்பங்கள் எந்த மாவட்டத்தில்
 உள்ளது ?
3.கனகசுப்புரத்தினம் என்பது யாருடைய இயற்பெயர் ?
4.அனுமனின் பலம் உடலின் எந்த பாகத்தில் இருந்ததாக
 கூறப்படுகிறது ?
5.சாளூக்கிய அரசை முதன் முதலில் நிறுவியவர் யார் ?
6.இந்தியாவில் எந்த இடத்தில் இயற்கை வாயு அதிகமாக
கிடைக்கப்படுகிறது ?
7.விரைவில் உலரும் வார்னிஷ்கள் எவை ?
8.அனல் மிகு நிலக்கரியில் எத்தனை சதவீதம் கார்பன் உள்ளது?
9.ஒரு ஜாமம் எனப்படுவது எத்தனை மணி நேரம் ?
10.பகவான் புத்தரின் முதன்மை மாணக்கர் யார் ?
பதில்கள்:
1.பளிங்கு மலை, 2.புதுக்கோட்டை, 3.பாரதிதாசன்,
4.வால்,5.புலிகேசி, 6. மும்பை, 7.ஸ்பிரிட், 8.90%,
9.மூன்று மணி நேரம். 10.ஆனந்தர்.


இன்று அக்டோபர் 24 
பெயர் : டைக்கோ பிரா ,
மறைந்த தேதி : அக்டோபர் 24, 1601
வானியலிலும், கோள்கள் தொடர்பிலும் செய்த
துல்லியமான விரிவான அவதானங்களுக்குப்
பெயர் பெற்றவர். அக்காலத்தில் டென்மார்க்கின்
ஒரு
பகுதியாகவும், இன்று சுவீடன் நாட்டில்
அடங்கியுள்ளதுமான
ஸ்கேனியா என்னும் இடத்தைச் சேர்ந்தவர்.
இவரது
வாழ்க்கைக் காலத்திலேயே ஒரு வானியலாளராகவும்,
இரசவாதியாகவும் பெரிதும் அறியப்பட்டவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. ஒரு இணையத்தளத்தை படம் பிடித்து எவ்வாறு இடுகையில் படமாக இணைப்பது.அறிந்து கொள்ள ஆவல்.
    உதாரணம் படம் 1

    control+printscreen

    after i dont know

    ReplyDelete
  2. @ sothysiva
    நண்பருக்கு , சரி தான் , சில அலுவலகங்களில் மென்பொருள் இன்ஸ்டால் செய்ய அனுமதி இருக்காது அல்லவா அது போன்ற இடங்களில் இது
    பயனுள்ளதாக இருக்குமே என்று தான் தெரியப்படுத்தினோம், நீங்கள் கூறிய டூலை ஏற்கனவே நாம் பயன்படுத்தி இருக்கிறோம். இருந்தும் தாங்கள்
    தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete

Post Top Ad