ஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Saturday, November 20, 2010

ஆன்லைன்-ல் வீடியோவுடன் நமக்கு தொழில்நுட்பம் சொல்ல வருகின்றனர் பிரபலங்கள்.

ஆன்லைன் மூலம் பாடம் சொல்லிக்கொடுப்பதில் (Virtual class room)
தொடங்கி அறிவு சார்ந்த விளக்கங்களையும் , முன்னேறத் துடிக்கும்
இளைஞர்களுக்கு பயிற்சிகளையும் நேரடியாக பிரபலங்களே ஆடியோ
வீடியோவுடன் சொல்கின்றனர் யார் வேண்டுமானாலும் இதில் சேர்ந்து
பயனடையலாம் இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



அறிவுப்பசியுடன் இருக்கும் யாரும் இந்த இணையதளம் மூலம் தங்கள்
அறிவை மேம்படுத்திக்கொள்ளலாம். நமக்கு பிடித்த துறை என்ன
என்பதை தேர்ந்தெடுத்து அந்தத் துறையில் நாம் சேர்ந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு  துறையிலும் முக்கியமான பல பிரபலங்கள் உள்ளனர்
நேரடியாக நாம் அவர்களின் பேச்சையும் வீடியோவுடன் கேட்கலாம்
உடனடியாக நமக்கு எழும் கேள்விகளுக்கும் அவர்களே பதில்
அளிக்கின்றனர்.

இணையதள முகவரி : http://www.brainrepublic.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் இலவசமாக ஒரு பயனாளர் கணக்கு
உருவாக்கிக் கொண்டு உள் நுழையலாம் அல்லது நம் பேஸ்புக்
கணக்கை பயன்படுத்தியும் இந்ததளத்தின் பயனாளராகலாம். இங்கு
நமக்கு பிடித்தத் துறையில் இருப்பவருடன் நமக்கு எழும் சந்தேகங்கள்
அனைத்தையும் கேட்கலாம் பல நாள் விடை தெரியாமல் இருந்த
நம் கேள்விகளுக்கும் உடனடியாக பதில் சொல்கின்றனர், நம்
எண்ணங்களையும் நமக்கு தெரிந்ததையும் கூட பகிர்ந்து கொள்ளலாம்.
வீடியோ சாட்டிங் மட்டுமல்ல ஆடியோ, டெக்ஸ்ட்( video,audio,Text chat)-ம்
பயன்படுத்தலாம். அறிவியல் மற்றும் விஞ்ஞானம் பற்றி ஆராய்ச்சி
செய்யும்  மாணவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் இந்தத்தளம்
பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
ஆட்சிக் காலத்தில் தவறு செய்பபனை வீழ்ச்சி காலத்தில்
இறைவன் தண்டிக்கிறான்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நிலக்கரியை எண்ணையாக மாற்ற முடியும் என்று கூறியவர்
 யார் ?  
2.எம்.கே தியாகராஜ பாகவதர் முதலில் பாடிய படம் எது ?
3.தானியங்கி விமானத்தை கண்டுபிடித்தவர் யார் ?
4.கற்பக விநாயகர் கோவில் கொண்டிருக்கும் இடம் எது ?
5.மண் ஆய்வுக்கூடம் தமிழ்நாட்டில் எங்குள்ளது ?
6.நாட் என்பது என்ன ?
7.தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கும் கனிமம் எது ?
8.எந்த மிருகத்துக்கு சுவை நரம்பு கிடையாது ?
9.புனிதவெள்ளி எந்த ஆங்கில மாதத்தில் வருகிறது ?
10.காம்பியாவின் தலைநகரம் எது ?
பதில்கள்:
1.எர்னெஸ்டு ரூதர்போர்டு, 2.பவளக்கொடி,3.ஸ்பெர்ரி,
4.பிள்ளையார்பட்டி, 5.குடுமியான் மலை, 6.கப்பலில்
வேகத்தை கணக்கிடும் அலகு முறை,7.பெட்ரோலியம்,
8.திமிங்கலம், 9.மார்ச்.10.பாதுர்ஸ்ட்.


இன்று நவம்பர் 20
பெயர் : திப்பு சுல்தான்,
பிறந்த தேதி : நவம்பர் 20, 1750

மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர்.
ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான
ஃவாதிமாவின் மகனாவார். தனது தந்தையின்
மரணத்திற்குப் பின்னர் மைசூர் பேரரசை ஆண்ட
திப்பு சுல்தான் 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம்
ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான்
சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும்
பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete
  2. i like ur all posts...i want details about how can download books from
    google books....

    ReplyDelete
  3. @ ♠புதுவை சிவா♠
    மிக்க நன்றி

    ReplyDelete
  4. @ எஸ். கே
    மிக்க நன்றி

    ReplyDelete
  5. @ m.sakthikumar
    நன்றி , ஏற்கனவே சில பதிவுகள் கூகுள் இபுக் தரவிரக்குவது பற்றி வந்திருக்கிறது. களஞ்சியம் போய் பாருங்கள்.

    ReplyDelete

Post Top Ad