கணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Sunday, November 21, 2010

கணினியில் வந்திருக்கும் புது விளையாட்டு என்ன என்பதை வீடியோவுடன் அறியலாம்.

நாளுக்கு நாள் புதிது புதிதாக விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் அனைத்து புது விளையாட்டுகளையும்
அதைப்பற்றிய விரிவான தகவல்களையும்  வீடியோவுடன் நமக்கு
எடுத்துச்சொல்ல ஒரு தளம் இருக்கிறது இதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.



விளையாட்டு குழந்தைகளை மட்டுமல்ல அனைத்து தரப்பு மக்களும்
தற்போது ஈர்த்து வருகிறது. முப்பரிமானம்(3D)-யில் உருவாக்கப்படும்
விளையாட்டுக்கள் பெரும்பாலும் எல்லா தரப்பு மக்களையும்
கவர்கிறது. தினமும் பல புதிய விளையாட்டுக்கள் வெளிவந்து
கொண்டிருக்கும் நிலையில் புதிய விளையாட்டு பற்றிய அனைத்து
தகவல்களையும் கொண்ட ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://gotgame.com

இந்ததளத்திற்கு சென்று நாம் புதிதாக வந்திருக்கும் விளையாட்டைப்
பற்றிய தகவல்களை அறிந்து கொள்ளலாம். புதிய விளையாட்டின்
டிரைலர் மட்டுமல்ல அந்த விளையாட்டின் சிறப்பு வீடியோவையும்
பார்க்கலாம். இது மட்டுமின்றி எந்த விளையாட்டு நிறுவனம் இப்போது
போட்டி அறிவித்திருக்கிறது என்று தெரிந்து நேரடியாக போட்டியில்
ஆன்லைன் மூலம் பங்கு பெறலாம். மைக்கேல் சாக்சன் விளையாட்டு
முதல் ரோபோ விளையாட்டு வரை அத்தனை புதிய விளையாட்டு
தகவல்களும் இந்த்தளத்தில் இடம் பெற்றுள்ளது. இந்ததளத்திற்கு
சென்று புதிதாக ஒரு பயனாளர் கணக்கு உருவாக்கி விளையாட்டு
பற்றிய பல அறிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


வின்மணி சிந்தனை
தினமும் படிக்கும் படிப்பும் ஒரு தவம் தான் நன்றாக
செய்து முடித்தால் வெற்றி நிச்சயம்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.கடற்கரை வாலிபால் போட்டியில் மொத்தம் எத்தனை பேர்
 விளையாடுவார்கள் ?   
2.சர்ர்லஸ் டார்வின் எந்த நாட்டில் பிறந்தார் ?
3.அமெரிக்காவின் பெரிய நகரம் எது ?
4.கொழுக்கட்டையை முதன் முதலில் விநாயகருக்குப்
படைத்தவர் யார் ?
5.தேச பந்து என அழைக்கப்படுபவர் யார் ?
6.புத்தரின் பல்லை புனிதமாக கருதிப் போற்றி பாதுகாத்து வரும்
 நாடு எது ?
7.இந்திய விளையாட்டு ஆணையத்தின் தலைமையகம்
 எங்குள்ளது ?
8.இராமயணத்தில் பரதனின் மனைவி யார் ?
9.இந்தியாவின் முதல் துனைப்பிரதமர் யார் ?
10.லோட்டஸ் டெம்பிள் எங்கு அமைந்துள்ளது ?
பதில்கள்:
1.இரண்டு பேர், 2.இங்கிலாந்து,3.அலாஸ்கா,
4.அருந்ததி, 5.சி.ஆர்.தாஸ், 6.இலங்கை,7.பெங்களூர்,
8.மாண்டவி, 9.சர்தார் வல்லபாய் படேல்.10.புதுடெல்லி.


இன்று நவம்பர் 21 
பெயர் : ச. வெ. இராமன்,
மறைந்த தேதி : நவம்பர் 21, 1970
பெரும் புகழ் இந்திய அறிவியல் அறிஞர்.
1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசைப்
பெற்றார். ஒளி ஒரு பொருளின் ஊடே செல்லும்
பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும்
அலைநீள
மாற்றத்தை இவர் கண்டுபிடித்தார். இப்படிச் சிதறும்
ஒளியின் அலைநீள மாற்றதிற்கு இராமன் விளைவு
(Raman Effect)என்று பெயர். இக்கண்டுபிடிப்புக்குத்
தான்
இவருக்கு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

No comments:

Post a Comment

Post Top Ad