என்ற எண்ணம் இருக்கும் அனைவருக்கும் ஆன்லைன் மூலம்
பேராசியர்கள் பாடம் நடத்தும் வீடியோவை இலவசமாக பார்க்கலாம்
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.
அமெரிக்காவின் மிகப்பெரிய பழ்கலைக்கழங்களான Berkeley, Harvard,
MIT, Princeton, Stanford மற்றும் Yale போன்ற பழ்கலைக்கழங்களில்
இருக்கும் பேராசியர்கள் பாடம் நடத்தும் வீடியோவை நாம் ஆன்லைன்
மூலம் இலவசமாக பார்க்கலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு
இணையதளம் உள்ளது.
இணையதள முகவரி : http://academicearth.org
பணக்காரராக இருக்க வேண்டிய அவசியமில்லை , பெரும் பணம்
செலவு செய்ய வேண்டாம், வெளி நாட்டிற்கு செல்லவும் வேண்டாம்.
இருக்கும் இடத்தில் இருந்தே ஆன்லைன் மூலம் வீடியோவுடன்
கல்வி கற்கலாம். இந்ததளத்திற்கு சென்று நாம் எந்ததுறையில் பாடம்
படிக்க வேண்டும் என்பதை மட்டும் தேர்ந்தெடுத்துக் கொண்டு எளிதாக
பேராசிரியர்களின் உரையை வீடியோவுடன் பார்க்கலாம்.
Mechanic Engineer முதல் Computer Engineer வரை அனைவரும்
தங்களுக்கு பிடித்த university பேராசியர்கள் நடத்திய பாடத்தை
ஆனலைன் மூலம் எளிதாக கற்கலாம். வெளிநாட்டில் கல்வி கற்க
வேண்டும் என்ற ஆசை உள்ள நம் தமிழ் நண்பர்களுக்கு இந்தப்
பதிவை கொண்டு சேர்ப்பது உங்கள் கடமை.
வின்மணி சிந்தனை
தியானத்தின் மூலம் அன்பு தான் , அடுத்தவர்கள் மீது
எதையும் எதிர்பார்க்காமல் அன்பு செலுத்துங்கள்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.குப்தர்களின் ஒரே அழியாத சின்னம் எது ?
2.இந்தியாவில் முறையான தொலைபேசியகம் எப்போது
ஆரம்பிக்கப்பட்டது ?
3.மின்சாரஒட்டத்தை தடுக்கும் ஆற்றல் எந்த பொருளுக்கு உண்டு?
4.பிளீச்சிங் பவுடர் என்பது என்ன ?
5.இந்தியாவில் முதன் முதலில் மலர் கண்காட்சி நடைபெற்ற
இடம் எது ?
6.சிவந்த நிறமுள்ள பளபளப்பான உலோகமானது எது ?
7.சீனக்குடியரசின் முதல் தலைவர் யார் ?
8.எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம் எது ?
9.முதன் முதலில் கலங்கரை விளக்கம் யாரால் உருவானது ?
10.அதிவேகவிமானம் முதன் முதலில் எங்கு உருவாக்கப்பட்டது?
பதில்கள்:
1.குதுப்மினார்,2.1881,3.கண்ணாடி,4.கால்சியம் ஹைப்போ
குளோரைடு,5.ஊட்டி, 6.தாமிரம், புல்,7.சன்யாட்சென்,
8.ஸ்ரீ முருகன், 9.கிரேக்கர்களால். 10.ஜப்பான்.
இன்று நவம்பர் 26
பெயர் : எலிசபெத் பிளாக்பர்ன் ,
பிறந்த தேதி : நவம்பர் 26, 1948
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் உயிரியல்
ஆய்வாளர்.இவர் நிறப்புரிகளைப் பாதுகாக்கும்
முனைக்கூறுகள் பற்றி ஆய்வு மேற்கொண்டு
நிறப்புரிகளின் முனைகளில் காணப்படும்
முனைக்கூறுகளும், டெலொமியர்களை உருவாக்கப் பயன்படும்
டெலொமெரேஸ் என்ற நொதியமுமே நிறப்புரிகளைப்
பாதுகாக்கின்றன என்று பிளாக்பெர்ன் தலைமையிலான குழு
கண்டுபிடித்தது. இக்கண்டுபிடிப்புக்காக 2009 ஆம் ஆண்டுக்கான
மருத்துவத்துக்கான நோபல் பரிசு கிடைத்தது.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
kudubminar was built at the time of Mogals not in Gubthas. Mogal speciality is Minar ( Tallest Tower ) Type buildings. It was built by Kudbudheen Ibeck.
ReplyDelete