ஆன்லைன் மூலம் பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்றலாம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Wednesday, November 3, 2010

ஆன்லைன் மூலம் பிடிஎப் கோப்புகளை எக்சல் கோப்புகளாக மாற்றலாம்.

ஆன்லைன் மூலம் இலவசமாக PDF கோப்புகளை சில நிமிடங்களில்
எக்ஸெல் கோப்பாக மாற்றலாம் எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.

[caption id="attachment_3868" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

அலுவலகத்திற்கு தேவையான எக்சல் கோப்பு சில நேரங்களில் பிடிஎப்
கோப்புகளாக வருவதுண்டு இதை எக்செலுக்கு மாற்ற வேண்டுமானல்
ஒவ்வொன்றாக காப்பி செய்து நேரத்தை வீண் செய்ய வேண்டாம்.
பிடிஎப் டாக்குமெண்ட்-ஐ சில நிமிடங்களில் ஆன்லைன் மூலம் எக்சல்
ஆக மாற்றலாம் நமக்கு உதவுவதற்காக ஒரு தளம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.pdftoexcelonline.com

இந்தத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டியபடி Choose என்ற
பொத்தானை அழுத்தி பிடிஎப் கோப்பை தேர்ந்தெடுத்துக்கொள்ள
வேண்டும் அடுத்து நம்முடைய இமெயில் முகவரியை EMail to என்று
இருக்கும் கட்டத்திற்க்குள் கொடுத்து Convert என்ற பொத்தானை
அழுத்தவும் அடுத்து வரும் திரையில் நாம் தேர்ந்தெடுத்த பிடிஎப்
கோப்பு மாற்றப்பட்டு நம் இமெயில் முகவரிக்கு அனுப்பப்பட்டதாக
செய்தி வரும். எந்த பயனாளர் கணக்கும் தேவையில்லை.
அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்கள் பிடிஎப் கோப்பை
இனி எளிதாக சில நிமிடங்களில் எக்ஸெல் கோப்பாக மாற்ற
இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
தியாகமும் தொண்டு செய்யும் உள்ளவும் அமைந்த
அரசியல்வாதி என்றும் மக்கள் மனதில் இடம் பிடிப்பார்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.ராமகுண்டம் அணுமின் நிலையம் எங்குள்ளது ?
2.எந்த கிரகம் மிகவும் குளிர்ச்சியானது ?
3.உலக உணவு நாள் எந்த மாதத்தில் கொண்டாடப்படுகிறது ?
4.ஹிட்லரின் ரகசியப் போலீஸ் பிரிவுக்கு என்ன பெயர் ?
5.டீனியா என்பது விலங்கியலில் எதனைக் குறிக்கிறது ?
6.சேர மன்னர்களைப் போற்றி பாடப்பெற்ற நூல் எது ?
7.’நாண்‘ எனப்படுவது எந்த மாநிலத்தில் உண்ணப்படும் உணவு?
8.முதன் முதலில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்ற இடம் எது ?
9.இருசகோதரர்கள் எனும் புகழ்பெற்ற ஒவியத்தை வரைந்தவர்
யார்?
10.வரிக்குதிரையின் நிறம் என்ன ?
பதில்கள்:
1.ஆந்திரா, 2.புளூட்டோ,3.அக்டோபர் 16, 4.கெஸ்டாபோ,
5.தட்டைப்புளு,6.பதிற்றுப்பத்து, 7.பஞ்சாப், 8.ஏதென்ஸ்,
9.பிக்காஸோ.10.வெள்ளையில் கருப்பு


இன்று நவம்பர் 4 
பெயர் : இட்சாக் ரபீன் ,
மறைந்ததேதி : நவம்பர் 4 , 1995
இஸ்ரேலிய அரசியல்வாதியும், அதன் இராணுவத்
தலைவரும் ஆவார். இஸ்ரேலின் பிரதமராகவும்
இருதடவைகள் இருந்துள்ளார் 1994-ம் ஆண்டில்
சிமோன் பெரெஸ், யாசர் அரபாத் ஆகியோருடன்
இணைந்து அமைதிக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்தது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

5 comments:

Post Top Ad