குடை விளம்பரத்துக்காக ஒரு வித்தியாசமான பிஸினஸ் முயற்சி - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, November 9, 2010

குடை விளம்பரத்துக்காக ஒரு வித்தியாசமான பிஸினஸ் முயற்சி

குடை (umbrella) விளம்பரத்துக்கான ஒரு புதுமையான விளம்பரம்
ஒன்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது எப்படி அவர்கள் குடையை
விளம்பரப்படுத்துகின்றனர் என்பதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.



குடையை கூவி விற்க வேண்டாம், பெரிய தளங்களில் விளம்பரமும்
செய்ய வேண்டாம் , அதிக பணம் கொடுத்து பத்திரிகைகளிலும்
விளம்பரம் செய்ய வேண்டாம் , இரண்டு வாங்கினால் ஒன்று
இலவசம் என்று ஆசையும் காட்ட வேண்டாம் ஆனால் புதுமையான
முறையில் குடையை விற்க உலக மக்களுக்கு முன் உதாரணமாக
ஒரு தளம் இருக்கிறது.

இணையதள முகவரி : http://www.doineedanumbrella.com

” எனக்கு குடை தேவையா “  இது தான் இணையதள பெயர்.
( do  i  need anumbrella ) எப்படி என்றால் இந்ததளத்திற்கு சென்று
நாம் நம்முடைய ( Zip code ) என்று சொல்லக்கூடிய அஞ்சல்
குறியீட்டு எண்ணை கொடுத்தால் போதும் உடனடியாக அதுவும்
சில நொடிகளில் நீங்கள் கொடுத்துள்ள நகரத்தில் மழை
பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்று துல்லியமாக
( தட்ப வெட்பநிலை) காட்டுகிறது. இதிலிருந்து மழை வருவதற்கான
வாய்ப்பு இருக்கிறது  என்றால் உங்களுக்கு குடை தேவை இங்கு
சொடுக்கி குடையை வாங்குங்கள் என்ற வாசகம் வித்தியாசமாகவே
இருக்கிறது. புதுமையான முறையில் பிஸினஸ் செய்ய விரும்பும்
நண்பர்களுக்கு இந்தப்பதிவு ஒரு புதிய முயற்சியை கொடுக்கும்
என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தற்போது zip குறியீடு உள்ள
நாடுகளுக்கு மட்டுமே இது பொருந்தும். இந்தியாவில் உள்ள
பின்கோடு ( Pincode ) கொடுத்தால் இது வேலை செய்யாது.


வின்மணி சிந்தனை
மனதால் ஒருவரை துன்பப்படுத்தினால் அதன் பலன்
அடுத்த பிறவி வரை தொடரும்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.22 பந்துக்களை வைத்து ஆடுகின்ற ஆட்டத்தின் பெயர் என்ன ?
2.சுப்பையா என்று மக்களால் அழைக்கப்பட்டவர் யார் ?
3.உலகிலேயே எந்தப்பகுதியில் பனி நதி அதிகம் பாய்கிறது ?
4.தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த ஊர் எது ?
5.இந்தியாவில் சரோட் இசையில் புகழ்பெற்றவர் யார் ?
6.இந்திய சினிமாவின் முதல் நடிகை யார் ?
7.பேருந்து வண்டியை கண்டுபிடித்தவர் யார் ?
8.சீனா ஹைட்ரஜன் குண்டு வெடித்து சோதனை செய்தது
 எந்த ஆண்டு ?
9.அடர்த்தியை அளவிடும் முறையை கண்டுபிடித்தவர் யார் ?
10.உலகிலேயே மிகப்பெரிய தீவு எது ?
பதில்கள்:
1.ஸ்நூக்கர், 2.பாரதியார்,3.இமயமலை,4.மிலன், 5.அம்ஜத்
 அலிகான்,6.கமல்பாய் கோகலே, 7.பிளெய்ஸ் பாஸ்கல்,
8.1967, 9.ஆர்க்கிமிடிஸ்.10.கிரீன்லாந்து.


இன்று நவம்பர் 10 
பெயர் : மார்ட்டின் லூதர்,
பிறந்த தேதி : நவம்பர் 10, 1483
ஒரு ஜெர்மனிய மதகுருவும், இறையியலாளரும்,
பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்ச்சியின்
தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும்
ஆவார்.
இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்த
சீர்திருத்தத்தில்
செல்வாக்குச் செலுத்தி மேல்நாட்டு
நாகரிகத்தின்
போக்கையே மாற்றியது.1522-ஆம் ஆண்டு
முதன்
முதலாக புதிய ஏற்பாட்டை ஜெர்மன் மொழியில்
வெளியிட்டார்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

6 comments:

  1. @ எஸ். கே
    நன்றி

    ReplyDelete
  2. It's not working for me ,sir

    zip code is 95200 for Sarcelles in France

    ReplyDelete
  3. @ delavictoire
    நண்பருக்கு சில முக்கிய இடங்களை மட்டும் தான் சேர்த்துள்ளனர். மற்ற இடங்கள்
    விரைவில் வெளிவரலாம்.
    நன்றி

    ReplyDelete
  4. @ weight loss calculator
    நன்றி

    ReplyDelete

Post Top Ad