வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உலக டிஜிட்டல் மின்நூலகம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, November 9, 2010

வரலாற்று தகவல்களை அறிந்து கொள்ள உதவும் உலக டிஜிட்டல் மின்நூலகம்.

வரலாற்று தகவல்களைப்பற்றி மேலும் விரிவாக அறிந்து
கொள்வதற்கு வசதியாக உலக டிஜிட்டல் மின் நூலகம் உள்ளது
இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.



காலத்தால் என்றும் அழியாத பொக்‌ஷங்களான வரலாற்று
தகவல்களை பாதுகாப்பான முறையில் சேமித்து நமக்கு
தேவைப்படும் போது பயன்படுத்திக்கொள்ளும் வகையில்
இலட்சத்திற்கும் மேற்பட்ட வரலாற்று புத்தகங்களை ஆன்லைன்
மூலம் படிக்கலாம் நமக்கு உதவுவதற்காக உலக டிஜிட்டல் மின்
நூலகம் உள்ளது.

இணையதள முகவரி : http://www.wdl.org

இந்ததளத்திற்கு சென்று நாம் எந்த நாட்டின் வரலாற்று தகவல்களை
தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும்
அடுத்து வரும் திரையில் அந்த நாட்டைப்பற்றிய அனைத்து வரலாற்று
புத்தகங்களும் வரும் இதில் நமக்கு பிடித்த புத்தகங்களை எளிதாக
தேடிப்படிக்கலாம். செல்லறித்துப்போன வரலாற்று செய்திகளை
தூசுதட்டி மென்நூலகமாக கொடுத்திருக்கும் இந்ததளம் பலருக்கும்
பயனுள்ளதாக இருக்கிறது. இதைப்பற்றிய ஒரு சிறப்பு வீடியோவையும்
இத்துடன் இணைத்துள்ளோம்.








வின்மணி சிந்தனை
உதவும் குணம் இறைவனுடையது , முடிந்தவரை
அனைவருக்கும் உதவுங்கள் நாம் எல்லோரும் இறை
குணம் உடையவர்கள் தான்.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.பூச்சிக் கொல்லியாகப்பயன்படும் கனிம அமிலம் எது ?
2.போனாலஜி என்றால் என்ன ?
3.1902 -ல் மருத்துவ நோபல் பரிசு பெற்றவர் யார் ?
4.நிலாவின் விட்டம் எவ்வளவு ?
5.பூமியை விட சனிக்கிரகம் எத்தனை மடங்கு பெரியது ?
6.சூரத்தில் ஒடும் நதி எது ?
7.ஓவல் மைதானம் இருக்கும் இடம் எது ?
8.பெனிசிலினுக்கு மாற்றாக கொடுக்கப்படும் மருந்து எது?
9.காபா தர்க்கா இருக்கும் இடம் எது ?
10.பாடலிபுத்திரத்தை ஆண்ட வம்சத்தினர் யார் ?
பதில்கள்:
1.போரிக் அமிலம், 2.ஒலியியல்,3.சர்.ரொனால்ட்,
4.2160 மைல்கள், 5.740 மடங்கு,6.தபி, 7.லண்டன்,
8.எரித்ரோமைசின், 9.மெக்கா.10.நந்த வம்சம்


இன்று நவம்பர் 9,
பெயர் : கே.ஆர்.நாராயணன்,
மறைந்த தேதி : நவம்பர் 9, 2005
பத்தாவது இந்தியக் குடியரசுத் தலைவர்.
இவர் இப்பொறுப்பை வகித்த ஒரே தலித்தும்
மலையாளியும் ஆவார்.குடியரசுத் தலைவர்
பதவிக்கே பெருமை சேர்த்தவர்.சமூக நீதியின்
காவலர்.இந்திய அரசு இன்றும் இவரது பெயரால் விருது
வழங்கி சிறந்த சாதனையளர்களை ஊக்குவிக்கிறது.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

2 comments:

  1. how to convert any file to word or pdf. why some files are not open after save . if i type form and how to save a copy of the form . or how to send the copy to e-mail . send me the details to my e-mail address .thanks for your help in addvance .--thotavasu(SRINIVASAN)

    ReplyDelete
  2. @ thotavasu
    விரைவில் தெரியப்படுத்துகிறோம்.

    ReplyDelete

Post Top Ad