தளங்களின் வண்ணம் (Color) நமக்கு பார்க்க அழகாக இருக்கும்
இப்படி நமக்கு பிடித்த இணையதளங்களின் வண்ணத்தை எளிதாக
கண்டுபிடிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்தப்பதிவு.
[caption id="attachment_4046" align="aligncenter" width="403" caption="படம் 1"][/caption]
இணையதள வடிவமைப்பாளரும் இணையதளத்தின் உரிமையாளரும்
தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று வண்ணங்களை சரியாக
பயன்படுத்துவது தான் , மேலும் அதிகமான வண்ணங்கள்
பயன்படுத்தாமல் இரண்டு அல்லது மூன்று வண்ணங்களுக்குள்
உருவாக்கப்படும் பல இணையதளங்கள் மக்கள் மத்தியில் நல்ல
வரவேற்பை பெற்றிருக்கின்றன என்றால் அது மிகையாகாது அந்த
அளவிற்கு வண்ணத்துக்கு இருக்கும் முக்கியத்துவதை உணந்து
சில அழகாக பயன்படுத்தப்பட்டிருக்கும் இணையதளங்களின்
வண்ணங்களை எளிதாக கண்டுபிடிக்கலாம் நமக்கு உதவுவதற்காக
ஒரு தளம் உள்ளது.
இணையதள முகவரி : http://redalt.com/Tools/I+Like+Your+Colors
இந்தத்தளத்திற்கு சென்று படம் 1-ல் காட்டிடபடி நமக்கு பிடித்த
இணையதளத்தை கொடுத்து Get colors என்ற பொத்தானை
அழுத்த வேண்டும் அடுத்து வரும் திரையில் நாம் கொடுத்த
இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வண்ணங்கள்
தனியாக பிரித்து காட்டப்பட்டிருக்கும் கூடவே அந்த வண்ணத்தின்
Color code -ம் சேர்ந்தே இருக்கும். பிடித்த இணையதளங்களில்
பயன்படுத்தப்படிருக்கும் வண்ணம் என்னவென்று அறிய
விரும்புபவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
வின்மணி சிந்தனை
மது அருந்துபவர் தன்னை மட்டுமல்ல தன் குடும்பத்தினருக்கும்
மிகப்பெரிய துரோகம் செய்கிறார்.
TNPSC Questions Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.நம் கண்ணின் எடை எவ்வளவு ?
2.சதுரங்க ஆட்டத்தில் மிகவும் சக்தி வாய்ந்தது எது ?
3.மியான்மர் என அழைக்கப்படும் நாடு எது ?
4.மயிலுக்கு போர்வை அளித்த மன்னன் யார் ?
5.பாரசீகர்கள் புதுவருடப்பிறப்புக்கு என்ன பெயர் ?
6.தங்க நுழைவாயில் நகரம் எனப்படுவது எது ?
7.எகிப்தின் மிகப்பெரிய பிரமிடை கட்டிய மன்னன் யார் ?
8.காட்மாய் எனப்படும் எரிமலை எங்குள்ளது ?
9.10 வது உலகத்திரைப்பட விழா எங்கு நடைபெற்றது ?
10.பாரதியார் பல்கலைக் கழகம் எங்குள்ளது ?
பதில்கள்:
1.7 கிராம், 2.ராணி,3.பர்மா, 4.பேகன், 5.நவ்ரோஸ்,
6.சான்பிரான்ஸிக்கோ,7.தியோப்ஸ் குபு, 8.அலாஸ்கா,
9.கொல்கத்தா.10.கோயம்புத்தூர்.
இன்று நவம்பர் 19
பெயர் : எம். என். நம்பியார்,
மறைந்த தேதி : நவம்பர் 19, 2008
தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர்.
கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த்
திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள்
ஒருவராகத் திகழ்ந்தார். அன்பான குணமும்
பாசமும் கொண்ட சிறந்த மனிதர்.
PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்
Thanks winmani
ReplyDelete@ ♠புதுவை சிவா♠
ReplyDeleteமிக்க நன்றி
அடிக்கடி பின்னூட்டவில்லையெனினும் தொடர்ந்து பயனடைகிறோம் உங்கள் பதிவுகளால். ரொம்ப நன்றி. ஆமா நீங்க தனிப்பதிவரா இல்லை குழுமமா.
ReplyDelete@ அரபுத்தமிழன்
ReplyDeleteதனிப்பதிவர்
நன்றி
தனிப்பதிவரென்றால் Your website is great
ReplyDelete@ அரபுத்தமிழன்
ReplyDeleteமிக்க நன்றி
this web site also better
ReplyDeletethankyou