அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம். - Winmani

Winmani

கணினி மற்றும் தொழில்நுட்ப செய்திகள்.

Hot

Post Top Ad

Tuesday, November 2, 2010

அனைவருக்கும் உதவும் சையின்டிபிக் கால்குலேட்டர் (Scientific Calculator) இலவசம்.

பள்ளி மாணவர்கள் முதல் கல்லூரிமாணவர்களை வரை கணக்கு
என்று எதாவது ஒன்று வந்தால் உடனடியாக நாடுவது கால்குலேட்டரை
தான் ஆனால் சில சமன்பாடு கணக்கு என்றால் கால்குலேட்டரில்
எப்படி பயன்படுத்தவேண்டும் என்று தெரியாமல் பலர் இருக்கின்றனர்.
இவர்களுக்கு உதவுவதற்காக அனைத்து வசதிகளையும் தாங்கி ஒரு
இலவச Scientific Calculator  இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

[caption id="attachment_3843" align="aligncenter" width="450" caption="படம் 1"][/caption]

Equation வைத்து வரும் கணக்கை செய்து முடிக்க நம்மிடம்
சையின்டிபிக் கால்குலேட்டர் இல்லை என்றாலும் எளிதாக இந்த
மென்பொருள் துணையுடன் முடிக்கலாம். எவ்வளவு பெரிய கணக்காக
இருந்தாலும் சில நிமிடங்களிலே செய்து முடிக்கலாம். ஸ்பீட் கிரன்ஞ்
என்ற இந்த மென்பொருள் நமக்கு உதவுகிறது. இந்த முகவரியை
சொடுக்கி மென்பொருளை தரவிரக்கிக்கொள்ளவும்.

http://speedcrunch.googlecode.com/files/SpeedCrunch-0.10.1.exe

2.5 MB அளவுள்ள இந்த மென்பொருளை நம் கணினியில் நிறுவி
இதை இயக்கலாம். படம் 1-ல் காட்டியபடி இருக்கும். எப்படி பயன்படுத்த
வேண்டும் என்ற சந்தேகம் Help -க்கு சென்று உடனடியாக சரி
பார்க்கலாம். மற்றபடி சையின்டிபிக் கால்குலேட்டரில் நாம்
பயன்படுத்தும் அத்தனையையும் இதில் பயன்படுத்தலாம் இன்னும்
சொல்லப்போனால் அதை விட கூடுதலாகவே இதன் பயன்பாடு
இருக்கிறது. லினக்ஸ், மைக்ரோசாப்ட் விண்டோஸ்,மேக் ஓஎஸ்,
Fedora Core,OpenSUSE, போன்ற பல ஆப்ரேட்டிங் சிஸ்டத்திற்கு
துணை செய்கிறது. கண்டிப்பாக இந்தப்பதிவு கணிதத்துறையில்
உள்ளவர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.


வின்மணி சிந்தனை
உண்மையான அன்பையும் நேர்மையையும் கொண்டுள்ளவரை
பணத்தால் விலை கொடுத்து வாங்க முடியாது.


TNPSC  Questions  Group 1,Group 2,Group 3,Group 4
கடந்த ஐந்து வருடத்திலிருந்து வின்மணியால் தேர்ந்தெடுக்கப்பட்ட
வினாக்கள் மற்றும் பதில்கள்
1.இந்தியாவின் முதல் பொருட்காட்சி நிலையம் எங்கு
நிறுவப்பட்டது ?
2.நீராவியால் உருவாகும் மின்சக்தியின் பெயர் என்ன ?
3.உலகின் முதல் செயற்க்கை கோளின் பெயர் என்ன ?
4.சர்வதேச நிதி நிறுவனத்தின் தலைமையகம் எங்குள்ளது ?
5.காமிக் மன்னன் என்று புகழப்பட்டவர் யார் ?
6.கன நீரை கண்டுபிடித்தவர் யார் ?
7.முதன்மை மின்கலம் எனப்படுவது எது ?
8.சைப்ரஸின் தலைநகரம் எது ?
9.கேரளாவில் உள்ள சரணாலயத்தின் பெயர் என்ன ?
10.தென்னிந்தியாவில் முதல் பெண்கள் கல்லூரி எது ?
பதில்கள்:
1.கொல்கத்தா, 2.தெர்மல் பவர்,3.காஸ்மிக் ராக்கெட்,
4.வாஷிங்டன், 5.பாப்கேனி, 6.யூரே, 7.பசை மின்கலம்,
8.நிக்கோசியா,9.பெரியாறு சரணாலயம்.10.ராணி மேரிக்கல்லூரி


இன்று நவம்பர் 2  
பெயர் : பரிதிமாற் கலைஞர்,
மறைந்ததேதி : நவம்பர் 2 , 1903

ஒரு தமிழறிஞரும், நூலாசிரியரும்,
தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான
பங்கு வகித்தவர்களில் ஒருவரும் ஆவார்.
இவர் உயரிய செந்தமிழ் நடையில்
பேசுவதிலும் எழுதுவதிலும் வல்லவர். நாடகப் புலமை
சான்றவர். 'தமிழ் மொழி வரலாறு' போன்ற ஆய்வு
நூல்களையும், கலாவதி, ரூபாவதி போன்ற நாடக
நூல்களையும், நாடக இலக்கணமான நாடகவியலையும்
இயற்றிவர்.

PDF ஆக தறவிரக்க இங்கே சொடுக்கவும்

1 comment:

  1. அன்பு நண்பரே,

    அணைத்து விதமான கால்குலேட்டர் இந்த இணைப்பிலும் கிடைக்கும்
    http://easycalculation.com/paint/around-wall-paint.php

    நன்றி நண்பரே

    ReplyDelete

Post Top Ad